• May 04 2024

இலங்கையில் புதையலில் இருந்து மீட்கப்பட்ட மன்னர் காலத்து வாள்! பெறுமதி எவ்வளவு தெரியுமா?

Chithra / Dec 22nd 2022, 4:37 pm
image

Advertisement

மன்னர் காலத்து வாள் ஒன்றை விற்க முயன்ற இருவர் பாணந்துறை மத்திய ஊழல் தடுப்பு பிரிவினரால் நேற்று இரவு சமனலவெவ பம்பஹேன பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 3 வாரங்களுக்கு முன்னர் மஹியங்கனை வனப்பகுதியில் புதையல் ஒன்றிலிருந்து இந்த வாள் எடுக்கப்பட்டதாக சந்தேகநபர்கள் தெரிவித்துள்ளனர்.

மன்னர் காலத்தைச் சேர்ந்ததாகக் கூறப்படும் தொல்பொருள் சின்னமான இந்த வாள் 60 இலட்சம் ரூபா பெறுமதியானது என பாணந்துறை மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.


இந்த வாளை 40 இலட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்ய சந்தேக நபர்கள் விருப்பம் தெரிவித்துள்ளமை தொடர்பில் கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய நேற்று குறித்த சந்தேக நபர்களை பம்பஹேன பகுதிக்கு வரவழைத்து கொடுக்கல் வாங்கல் மேற்கொள்ளும் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 


இலங்கையில் புதையலில் இருந்து மீட்கப்பட்ட மன்னர் காலத்து வாள் பெறுமதி எவ்வளவு தெரியுமா மன்னர் காலத்து வாள் ஒன்றை விற்க முயன்ற இருவர் பாணந்துறை மத்திய ஊழல் தடுப்பு பிரிவினரால் நேற்று இரவு சமனலவெவ பம்பஹேன பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.கடந்த 3 வாரங்களுக்கு முன்னர் மஹியங்கனை வனப்பகுதியில் புதையல் ஒன்றிலிருந்து இந்த வாள் எடுக்கப்பட்டதாக சந்தேகநபர்கள் தெரிவித்துள்ளனர்.மன்னர் காலத்தைச் சேர்ந்ததாகக் கூறப்படும் தொல்பொருள் சின்னமான இந்த வாள் 60 இலட்சம் ரூபா பெறுமதியானது என பாணந்துறை மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.இந்த வாளை 40 இலட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்ய சந்தேக நபர்கள் விருப்பம் தெரிவித்துள்ளமை தொடர்பில் கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய நேற்று குறித்த சந்தேக நபர்களை பம்பஹேன பகுதிக்கு வரவழைத்து கொடுக்கல் வாங்கல் மேற்கொள்ளும் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 

Advertisement

Advertisement

Advertisement