• May 18 2024

மக்கள் பட்டினி கிடக்கும்போது நத்தார் பண்டிகையை கொண்டாட முடியாது! – கர்தினால்

Chithra / Dec 22nd 2022, 4:33 pm
image

Advertisement

மக்கள் பட்டினி கிடக்கும்போது இந்த வருடம் நத்தார் பண்டிகையை கொண்டாட முடியாது என கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

களுத்துறையில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் 6.1 மில்லியன் மக்கள் ஒருவேளை உணவு உண்ணாமல் பட்டினி கிடப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

இதன் காரணமாகவே  இந்த ஆண்டு கிறிஸ்மஸ் பண்டிகையை நாட்டில் இவ்வளவு அழிவுகளுடன் கொண்டாட முடியாதுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

ஆட்சியாளர்களின் மோசமான செயல்களால் நாட்டுக்கு இப்படி நேர்ந்துள்ளது.

பிச்சைக்காரர்கள்போல் உணவும் பானமும் கேட்டு உலகம் முழுவதும் செல்கிறார்கள் எனவும் கொழும்பு பேராயர்  கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை குறிப்பிட்டுள்ளார்.

இவ்வளவு அழகான, பசுமையான  எமது  நாடு  உணவு மற்றும் பானங்களுக்காக பிச்சை எடுப்பதற்காக  நாம் வெட்கப்பட வேண்டும்.

மோசமான ஆட்சியாளர்களின் செயலால்தான் நாட்டுக்கு  இந்த நிலையை நேர்ந்துள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மக்கள் பட்டினி கிடக்கும்போது நத்தார் பண்டிகையை கொண்டாட முடியாது – கர்தினால் மக்கள் பட்டினி கிடக்கும்போது இந்த வருடம் நத்தார் பண்டிகையை கொண்டாட முடியாது என கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.களுத்துறையில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.இலங்கையில் 6.1 மில்லியன் மக்கள் ஒருவேளை உணவு உண்ணாமல் பட்டினி கிடப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.இதன் காரணமாகவே  இந்த ஆண்டு கிறிஸ்மஸ் பண்டிகையை நாட்டில் இவ்வளவு அழிவுகளுடன் கொண்டாட முடியாதுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.ஆட்சியாளர்களின் மோசமான செயல்களால் நாட்டுக்கு இப்படி நேர்ந்துள்ளது.பிச்சைக்காரர்கள்போல் உணவும் பானமும் கேட்டு உலகம் முழுவதும் செல்கிறார்கள் எனவும் கொழும்பு பேராயர்  கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை குறிப்பிட்டுள்ளார்.இவ்வளவு அழகான, பசுமையான  எமது  நாடு  உணவு மற்றும் பானங்களுக்காக பிச்சை எடுப்பதற்காக  நாம் வெட்கப்பட வேண்டும்.மோசமான ஆட்சியாளர்களின் செயலால்தான் நாட்டுக்கு  இந்த நிலையை நேர்ந்துள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement