• May 18 2024

மாங்குளத்தில் பௌத்த யாத்திரிகர் மடம் கட்டுவதற்கான காணி பங்கீடு..! தொடரும் ஆக்கிரமிப்பு samugammedia

Chithra / May 29th 2023, 11:09 pm
image

Advertisement

மாங்குளத்தில் பௌத்த யாத்திரிகர் மடம் கட்டுவதற்கான காணி பங்கீடு தொடர்பில்  முறையாக அழைப்பு விடுக்காமல் ஒருதலைபட்சமாக பிரதேச செயாலாளர் மற்றும் குடியேற்ற உத்தியோகத்தர்கள் முடிவெடுத்துள்ளனர் என்பதை முல்லைத்தீவு மாவட்டச் செயலாளருக்கு மாங்குளம் கிராம அபிவிருத்திச் சங்கம் கடிதம் மூலம் தெரியப்படுத்தியுள்ளது.

இக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டதாவது,

மாங்குளம் 639 வீதியில் உணவுக் கட்டுப்பாட்டாளர் அலுவலகத்திற்கு சொந்தமான வெற்றுக்காணி ஒன்று உள்ளது. 

தற்போது மேற்படி காணியை மாங்குளம் ஏ9 வீதியில் கட்டப்பட்டுள்ள பௌத்த விகாரைக்கு யாத்திரிகர் மடம் கட்டுவதற்காக வழங்க ஒட்டுச்சுட்டான் பிரதேச செயலகத்தின் காணிப் பயன்பாட்டுக் குழுவில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

மேற்படி காணிப் பயன்பாட்டுக் குழுக் கூட்டத்திற்கு மாங்குளம் கிராம அபிவிருத்திச் சங்கம் மற்றும் ஏனைய பொது அமைப்புகளுக்கு உத்தியோகப்பூர்வ அழைப்பினை பிரதேச செயலாளர் அனுப்பவில்லை. 

கிராமத்தின் பொதுத் தேவைகளுக்கு காணித்தேவை அதிகமாக இருக்கும் போது மேற்படி காணியை விகாரைக்கு யாத்திரிகர் மடம் கட்ட வழங்குவதற்கு உள்ளூர் மக்களின் அல்லது அவர்களின் பிரதிநிதியான பொது அமைப்புகளின் கருத்தினைக் தன்னிச்சையாக முடிவெடுத்துள்ளனர்.

எந்தவொருக் கூட்டமானாலும் முறையாக நிகழ்ச்சி நிரலுடன் முன்கூட்டியே உத்தியோகப்பூர்வமாக பொது அமைப்புகளுக்கு தெரிவிக்காமல் கூட்டம் நடைபெறும் அன்றைய அன்றைய தினமே காலையில் தொலைபேசி ஊடாக தெரிவிப்பதனால் பொது அமைப்புகளால் எந்த கருத்தினையும் முன்வைக்க முடியாத சூழலினை திட்டமிட்டே செய்து வருகின்றனர்.

உள்ளூர் மக்களின் பொது தேவைகளுக்காக மேற்படிக் காணி தேவைப்படுவதால் இக்காணியை மாங்குளம் கிராம அபிவிருத்திச் சங்கத்திற்கு பங்கீடு செய்து வழங்குவதுடன், மாங்குளம் கிராம பொது அமைப்புகளுக்கு உத்தியோகப்பூர்வமாக மேற்படிக் காணி தொடர்பில் தகவல் தெரிவிக்காமல், கூட்டத்திற்கு முறையாக அழைப்பு விடுக்காமல் ஒருதலைபட்சமாக பிரதேச செயாலாளர் மற்றும் குடியேற்ற உத்தியோகத்தர்கள் முடிவெடுத்துள்ளனர் என்பதையும் தங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறோம். ஆகவே இது தொடர்பில் உரிய நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு தயவுடன் கேட்டுக்கொள்கிறோம்.- என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாங்குளத்தில் பௌத்த யாத்திரிகர் மடம் கட்டுவதற்கான காணி பங்கீடு. தொடரும் ஆக்கிரமிப்பு samugammedia மாங்குளத்தில் பௌத்த யாத்திரிகர் மடம் கட்டுவதற்கான காணி பங்கீடு தொடர்பில்  முறையாக அழைப்பு விடுக்காமல் ஒருதலைபட்சமாக பிரதேச செயாலாளர் மற்றும் குடியேற்ற உத்தியோகத்தர்கள் முடிவெடுத்துள்ளனர் என்பதை முல்லைத்தீவு மாவட்டச் செயலாளருக்கு மாங்குளம் கிராம அபிவிருத்திச் சங்கம் கடிதம் மூலம் தெரியப்படுத்தியுள்ளது.இக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டதாவது,மாங்குளம் 639 வீதியில் உணவுக் கட்டுப்பாட்டாளர் அலுவலகத்திற்கு சொந்தமான வெற்றுக்காணி ஒன்று உள்ளது. தற்போது மேற்படி காணியை மாங்குளம் ஏ9 வீதியில் கட்டப்பட்டுள்ள பௌத்த விகாரைக்கு யாத்திரிகர் மடம் கட்டுவதற்காக வழங்க ஒட்டுச்சுட்டான் பிரதேச செயலகத்தின் காணிப் பயன்பாட்டுக் குழுவில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.மேற்படி காணிப் பயன்பாட்டுக் குழுக் கூட்டத்திற்கு மாங்குளம் கிராம அபிவிருத்திச் சங்கம் மற்றும் ஏனைய பொது அமைப்புகளுக்கு உத்தியோகப்பூர்வ அழைப்பினை பிரதேச செயலாளர் அனுப்பவில்லை. கிராமத்தின் பொதுத் தேவைகளுக்கு காணித்தேவை அதிகமாக இருக்கும் போது மேற்படி காணியை விகாரைக்கு யாத்திரிகர் மடம் கட்ட வழங்குவதற்கு உள்ளூர் மக்களின் அல்லது அவர்களின் பிரதிநிதியான பொது அமைப்புகளின் கருத்தினைக் தன்னிச்சையாக முடிவெடுத்துள்ளனர்.எந்தவொருக் கூட்டமானாலும் முறையாக நிகழ்ச்சி நிரலுடன் முன்கூட்டியே உத்தியோகப்பூர்வமாக பொது அமைப்புகளுக்கு தெரிவிக்காமல் கூட்டம் நடைபெறும் அன்றைய அன்றைய தினமே காலையில் தொலைபேசி ஊடாக தெரிவிப்பதனால் பொது அமைப்புகளால் எந்த கருத்தினையும் முன்வைக்க முடியாத சூழலினை திட்டமிட்டே செய்து வருகின்றனர்.உள்ளூர் மக்களின் பொது தேவைகளுக்காக மேற்படிக் காணி தேவைப்படுவதால் இக்காணியை மாங்குளம் கிராம அபிவிருத்திச் சங்கத்திற்கு பங்கீடு செய்து வழங்குவதுடன், மாங்குளம் கிராம பொது அமைப்புகளுக்கு உத்தியோகப்பூர்வமாக மேற்படிக் காணி தொடர்பில் தகவல் தெரிவிக்காமல், கூட்டத்திற்கு முறையாக அழைப்பு விடுக்காமல் ஒருதலைபட்சமாக பிரதேச செயாலாளர் மற்றும் குடியேற்ற உத்தியோகத்தர்கள் முடிவெடுத்துள்ளனர் என்பதையும் தங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறோம். ஆகவே இது தொடர்பில் உரிய நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு தயவுடன் கேட்டுக்கொள்கிறோம்.- என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement