• Feb 04 2025

முறைப்பாடுகளை ஏற்க மறுக்கும் அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை - வெளியான விசேட சுற்றறிக்கை

Chithra / Feb 4th 2025, 9:22 am
image


முறைப்பாடு அளிக்க பொலிஸ் நிலையங்களுக்கு வரும் தரப்பினரிடமிருந்து முறைப்பாடுகளை ஏற்க மறுக்கும் அதிகாரிகள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.

சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்ட பதில் பொலிஸ்மா அதிபர், 

ஒழுக்காற்று நடவடிக்கைக்கு மேலதிகமாக, பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் விதிகளின்படி அத்தகைய அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான வாய்ப்பும் உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

பொலிஸ் நிலையங்களுக்கு முறைப்பாடு அளிக்க வரும் தரப்பினரிடம், முறைப்பாடுகளை ஏற்காமல், பல்வேறு காரணங்களைக் கூறி நிராகரிக்கப்படுவதாக எழுத்துப்பூர்வமாகவும், வாய்மொழியாகவும் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பிரியந்த வீரசூரிய குறிப்பிட்டுள்ளார்.

பொலிஸ் நிலையப் பொறுப்பாளர்களும் பிற அதிகாரிகளும் இத்தகைய மறுப்புக்கு பல்வேறு காரணங்களை முன்வைப்பதாக தகவல்கள் வந்துள்ளதாக பதில் பொலிஸ்மா அதிபர் தனது சுற்றறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.

பொலிஸ் நிலையங்களுக்குப் பதிவாகும் முறைப்பாடுகளை பதிவுசெய்து விசாரணை செய்வது பொலிஸ் அதிகாரிகளின் கடமையும் பொறுப்பும் ஆகும் என்றும் பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய வலியுறுத்தியுள்ளார்.

முறைப்பாடுகளை ஏற்க மறுக்கும் அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை - வெளியான விசேட சுற்றறிக்கை முறைப்பாடு அளிக்க பொலிஸ் நிலையங்களுக்கு வரும் தரப்பினரிடமிருந்து முறைப்பாடுகளை ஏற்க மறுக்கும் அதிகாரிகள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்ட பதில் பொலிஸ்மா அதிபர், ஒழுக்காற்று நடவடிக்கைக்கு மேலதிகமாக, பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் விதிகளின்படி அத்தகைய அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான வாய்ப்பும் உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.பொலிஸ் நிலையங்களுக்கு முறைப்பாடு அளிக்க வரும் தரப்பினரிடம், முறைப்பாடுகளை ஏற்காமல், பல்வேறு காரணங்களைக் கூறி நிராகரிக்கப்படுவதாக எழுத்துப்பூர்வமாகவும், வாய்மொழியாகவும் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பிரியந்த வீரசூரிய குறிப்பிட்டுள்ளார்.பொலிஸ் நிலையப் பொறுப்பாளர்களும் பிற அதிகாரிகளும் இத்தகைய மறுப்புக்கு பல்வேறு காரணங்களை முன்வைப்பதாக தகவல்கள் வந்துள்ளதாக பதில் பொலிஸ்மா அதிபர் தனது சுற்றறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.பொலிஸ் நிலையங்களுக்குப் பதிவாகும் முறைப்பாடுகளை பதிவுசெய்து விசாரணை செய்வது பொலிஸ் அதிகாரிகளின் கடமையும் பொறுப்பும் ஆகும் என்றும் பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய வலியுறுத்தியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement