• May 08 2024

அம்பாறையில் ஆயுள்வேத வைத்தியர் அதிரடியாக கைது...! பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி...!

Sharmi / Apr 5th 2024, 1:04 pm
image

Advertisement

அனுமதியின்றி சட்டவிரோதமாக ஆங்கில மருந்து வகைகள் மற்றும் போதையூட்டும் மாத்திரைகளை தம்வசம் வைத்திருந்த ஆயுள்வேத வைத்தியரை பெரிய நீலாவணை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

அம்பாறை பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆயுள்வேத நிலையம் ஒன்றில் சட்டவிரோதமாக போதையூட்டும் மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக  கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய, நேற்றையதினம் (4) இரவு பெரியநீலாவணை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, பொலிஸ் பரிசோதகர் ஜே.எஸ்.கே.வீரசிங்க வழிநடத்தலில் சம்பவ இடத்திற்கு சென்ற   பொலிஸார், மேற்கொண்ட  சோதனையில்  பல்வேறு வகையிலான  ஆங்கில மாத்திரைகள் மற்றும் போதையூட்டும் மாத்திரைகளை கைப்பற்றினர்.

அத்துடன் மேற்குறித்த 3500 எண்ணிக்கையுடைய  ஆங்கில மற்றும் 850 எண்ணிக்கையுடைய போதையூட்டும் மாத்திரைகளை தம்வசம் வைத்திருந்த ஆயுள்வேத  வைத்தியரான 63 வயது மதிக்கத்தக்க சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், கைதான சந்தேக நபர் வைத்திய பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்ட பின்னர், சட்ட நடவடிக்கைக்காக கல்முனை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


அம்பாறையில் ஆயுள்வேத வைத்தியர் அதிரடியாக கைது. பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி. அனுமதியின்றி சட்டவிரோதமாக ஆங்கில மருந்து வகைகள் மற்றும் போதையூட்டும் மாத்திரைகளை தம்வசம் வைத்திருந்த ஆயுள்வேத வைத்தியரை பெரிய நீலாவணை பொலிஸார் கைது செய்துள்ளனர்.இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,அம்பாறை பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆயுள்வேத நிலையம் ஒன்றில் சட்டவிரோதமாக போதையூட்டும் மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக  கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய, நேற்றையதினம் (4) இரவு பெரியநீலாவணை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, பொலிஸ் பரிசோதகர் ஜே.எஸ்.கே.வீரசிங்க வழிநடத்தலில் சம்பவ இடத்திற்கு சென்ற   பொலிஸார், மேற்கொண்ட  சோதனையில்  பல்வேறு வகையிலான  ஆங்கில மாத்திரைகள் மற்றும் போதையூட்டும் மாத்திரைகளை கைப்பற்றினர்.அத்துடன் மேற்குறித்த 3500 எண்ணிக்கையுடைய  ஆங்கில மற்றும் 850 எண்ணிக்கையுடைய போதையூட்டும் மாத்திரைகளை தம்வசம் வைத்திருந்த ஆயுள்வேத  வைத்தியரான 63 வயது மதிக்கத்தக்க சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.மேலும், கைதான சந்தேக நபர் வைத்திய பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்ட பின்னர், சட்ட நடவடிக்கைக்காக கல்முனை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement