• May 10 2024

கோட்டாவால் குறைந்த வரி கோப்புகள்! பேராசிரியர் வெளியிட்ட தகவல் SamugamMedia

Chithra / Mar 13th 2023, 8:40 pm
image

Advertisement

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கம் அறிமுகப்படுத்திய வரி தளர்வு கொள்கையின் காரணமாக 16 இலட்சமாக இருந்த வரிக் கோப்புகளின் அளவு 4 இலட்சமாக குறைந்துள்ளதாக கொழும்பு பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்தின் வர்த்தக பொருளாதார கற்கைகள் பிரிவின் பேராசிரியர் நிஹால் ஹென்நாயக்க தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.


இதற்கிடையில், புதிய நபர்களை வரி வலையில் சிக்க வைப்பதை விட, இந்த 4 லட்சம் வரிக் கோப்புகளை செயல்படுத்துவது எளிது என்று பேராசிரியர் மேலும் கூறுகிறார்.

அத்துடன், மேலும் 12 இலட்சம் வரிக் கோப்புகளை மீண்டும் செயற்படுத்துவதன் மூலம் அரசாங்கமும் தொழில் நிபுணர்களும் வெற்றிகரமான நிலையை அடைய முடியும் என பேராசிரியர் நிஹால் ஹென்னாயக்க குறிப்பிடுகின்றார்.

இறுதியில், வரிக் கோப்புகளின் அளவு 4 லட்சமாக குறைந்ததால், இழக்கப்பட்ட வரிச்சுமைகள் அனைத்தும் 4 லட்சம் தொழில் நிபுணர்களால் சுமக்கப்பட்டுள்ளதாக பேராசிரியர் குறிப்பிடுகிறார்.

கோட்டாவால் குறைந்த வரி கோப்புகள் பேராசிரியர் வெளியிட்ட தகவல் SamugamMedia முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கம் அறிமுகப்படுத்திய வரி தளர்வு கொள்கையின் காரணமாக 16 இலட்சமாக இருந்த வரிக் கோப்புகளின் அளவு 4 இலட்சமாக குறைந்துள்ளதாக கொழும்பு பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்தின் வர்த்தக பொருளாதார கற்கைகள் பிரிவின் பேராசிரியர் நிஹால் ஹென்நாயக்க தெரிவித்துள்ளார்.அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.இதற்கிடையில், புதிய நபர்களை வரி வலையில் சிக்க வைப்பதை விட, இந்த 4 லட்சம் வரிக் கோப்புகளை செயல்படுத்துவது எளிது என்று பேராசிரியர் மேலும் கூறுகிறார்.அத்துடன், மேலும் 12 இலட்சம் வரிக் கோப்புகளை மீண்டும் செயற்படுத்துவதன் மூலம் அரசாங்கமும் தொழில் நிபுணர்களும் வெற்றிகரமான நிலையை அடைய முடியும் என பேராசிரியர் நிஹால் ஹென்னாயக்க குறிப்பிடுகின்றார்.இறுதியில், வரிக் கோப்புகளின் அளவு 4 லட்சமாக குறைந்ததால், இழக்கப்பட்ட வரிச்சுமைகள் அனைத்தும் 4 லட்சம் தொழில் நிபுணர்களால் சுமக்கப்பட்டுள்ளதாக பேராசிரியர் குறிப்பிடுகிறார்.

Advertisement

Advertisement

Advertisement