• Jul 04 2024

மகாவலி அபிவிருத்தி திட்டம் அரசியல் நோக்கம் கொண்டது – உண்மையை ஒப்புக்கொண்ட அமைச்சர்! samugammedia

Chithra / Apr 9th 2023, 10:46 am
image

Advertisement

அரசாங்கத்தினால் கொண்டு வரப்பட்டுள்ள மகாவலி அபிவிருத்தி என்கிற திட்டமானது அரசியல் மற்றும் பொருளாதார நோக்கத்திற்காகவே உருவாக்கப்பட்டதாக கிராமிய வீதிகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

எனினும் இந்த நீர் கிழக்கு மாணத்திலுள்ள ஊர்களை தாண்டி போவதாகவும் அதனை சரியான திட்டமிடலுடன் பயன்படுத்துமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதேவேளை கிழக்கு மாகாணத்தில் காணப்படுகின்ற ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு புதிய ஆசிரியர் நியமனங்களை வழங்கவுள்ளதாக  கிராமிய வீதிகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட வாகரை கட்டுமுறிவுக்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் ஆங்கில கல்வியை கற்பிக்கின்ற ஆசியர்கள் பற்றாக்குறையாகவுள்ளதாக ராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மாணவர்களின் எதிர்கால உலகம் சவால் மிக்கதாக உள்ளதாகவும் எனவே மாணவ கல்வி கற்பதில் அதிக கவனம் செலுத்துமாறும் அதற்கான உதவியினை வழங்குவதாக ராஜாங்க அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

குறிப்பாக பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்களை கௌரவமாக நடத்த வேண்டும் என்றும் அவர்களிடம் எவ்வாறு பணிகளை பெற்று கொள்வது என்பது தொடர்பாக சரியான திட்டமிடல் வேண்டும் என்றும் சிவநேசதுரை சந்திரகாந்தன் மேலும் தெரிவித்துள்ளார்.

சர்வதேச ரீதியில் ஏற்படுகின்ற பொருளாதார சூழலுக்கு ஏற்ப நாட்டில் தொழில் வாய்ப்பினை உருவாக்காமல் விட்டால் இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியை எவ்வாறு தாக்குப்பிடிக்க முடியும் என்றும் சிவநேசதுரை சந்திரகாந்தன் கேள்வி எழுப்பியுள்ளார்.


மகாவலி அபிவிருத்தி திட்டம் அரசியல் நோக்கம் கொண்டது – உண்மையை ஒப்புக்கொண்ட அமைச்சர் samugammedia அரசாங்கத்தினால் கொண்டு வரப்பட்டுள்ள மகாவலி அபிவிருத்தி என்கிற திட்டமானது அரசியல் மற்றும் பொருளாதார நோக்கத்திற்காகவே உருவாக்கப்பட்டதாக கிராமிய வீதிகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.எனினும் இந்த நீர் கிழக்கு மாணத்திலுள்ள ஊர்களை தாண்டி போவதாகவும் அதனை சரியான திட்டமிடலுடன் பயன்படுத்துமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.இதேவேளை கிழக்கு மாகாணத்தில் காணப்படுகின்ற ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு புதிய ஆசிரியர் நியமனங்களை வழங்கவுள்ளதாக  கிராமிய வீதிகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட வாகரை கட்டுமுறிவுக்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் ஆங்கில கல்வியை கற்பிக்கின்ற ஆசியர்கள் பற்றாக்குறையாகவுள்ளதாக ராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.மாணவர்களின் எதிர்கால உலகம் சவால் மிக்கதாக உள்ளதாகவும் எனவே மாணவ கல்வி கற்பதில் அதிக கவனம் செலுத்துமாறும் அதற்கான உதவியினை வழங்குவதாக ராஜாங்க அமைச்சர் உறுதியளித்துள்ளார்.குறிப்பாக பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்களை கௌரவமாக நடத்த வேண்டும் என்றும் அவர்களிடம் எவ்வாறு பணிகளை பெற்று கொள்வது என்பது தொடர்பாக சரியான திட்டமிடல் வேண்டும் என்றும் சிவநேசதுரை சந்திரகாந்தன் மேலும் தெரிவித்துள்ளார்.சர்வதேச ரீதியில் ஏற்படுகின்ற பொருளாதார சூழலுக்கு ஏற்ப நாட்டில் தொழில் வாய்ப்பினை உருவாக்காமல் விட்டால் இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியை எவ்வாறு தாக்குப்பிடிக்க முடியும் என்றும் சிவநேசதுரை சந்திரகாந்தன் கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement