களுத்துறையில் இருந்து காணாமல் போனதாகக் கூறப்படும் 29 வயதுடைய இளைஞரைக் கண்டுபிடிப்பதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
நவோத் கிம்ஹான் எனும் பெயருடைய குறித்த இளைஞர் கடந்த ஜனவரி 17 ஆம் திகதிக்கு பின்னர் காணவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
குறித்த இளைஞன் காணாமல் போனமை தொடர்பில் அவரது தந்தை களுத்துறை தெற்கு பொலிஸில் செய்த முறைப்பாட்டையடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பொலிஸார் வெளியிட்ட தகவலின் படி, நவோத் கிம்ஹன் அண்ணளவாக 5 அடி மற்றும் 5 அங்குல உயரம் மற்றும் மெலிதான உடலமைப்பு மற்றும் தாடியுடன் குட்டையாக வெட்டப்பட்ட முடி ஆகியவற்றைக் கொண்டுள்ளார் என குறிப்பிட்டுள்ளனர்.
காணாமற்போன இளைஞரின் இரண்டு புகைப்படங்களை வெளியிட்டுள்ள பொலிஸார், அவர் இருக்கும் இடத்தைப் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் களுத்துறை தெற்கு பொலிஸாருக்கு அறிவிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.
களுத்துறையில் மாயமான இளைஞன்; பொதுமக்களின் உதவியை நாடிய பொலிஸார். களுத்துறையில் இருந்து காணாமல் போனதாகக் கூறப்படும் 29 வயதுடைய இளைஞரைக் கண்டுபிடிப்பதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.நவோத் கிம்ஹான் எனும் பெயருடைய குறித்த இளைஞர் கடந்த ஜனவரி 17 ஆம் திகதிக்கு பின்னர் காணவில்லை என தெரிவிக்கப்படுகிறது.குறித்த இளைஞன் காணாமல் போனமை தொடர்பில் அவரது தந்தை களுத்துறை தெற்கு பொலிஸில் செய்த முறைப்பாட்டையடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.பொலிஸார் வெளியிட்ட தகவலின் படி, நவோத் கிம்ஹன் அண்ணளவாக 5 அடி மற்றும் 5 அங்குல உயரம் மற்றும் மெலிதான உடலமைப்பு மற்றும் தாடியுடன் குட்டையாக வெட்டப்பட்ட முடி ஆகியவற்றைக் கொண்டுள்ளார் என குறிப்பிட்டுள்ளனர்.காணாமற்போன இளைஞரின் இரண்டு புகைப்படங்களை வெளியிட்டுள்ள பொலிஸார், அவர் இருக்கும் இடத்தைப் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் களுத்துறை தெற்கு பொலிஸாருக்கு அறிவிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.