• May 07 2024

கத்தார் ஒட்டக அழகுப் போட்டியில் நஜா உலக அழகியாக தெரிவு!

Sharmi / Dec 6th 2022, 10:28 am
image

Advertisement

கத்தாரில் ஃபிபா உலகக் கிண்ண கால்பந்துப் போட்டிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் அங்கு நடத்தப்பட்ட மற்றொரு போட்டியும் மக்களை வெகுவாக கவர்ந்தது.

அங்கு ஒட்டகங்களின் அழகுப் போட்டியும் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

இந்த போட்டியில் உலகின் மிக அழகான ஒட்டகம் வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டது.பல நாட்கள் நடந்த இந்தப் போட்டியில் 700 க்கும் மேற்பட்ட ஒட்டகங்கள் பங்கேற்றன.

இந்த ஒட்டகப் போட்டி மத்திய கிழக்கு முழுவதும் தொடர்ந்து நடத்தப்படுகின்றன.

இந்த ஒட்டகங்களின் அழகுப் போட்டியில் அதிகபட்சமாக பால் கொடுக்கும் ஒட்டகமும் தேர்வு செய்யப்பட்டு அதற்கும் பரிசு வழங்கப்பட்டது.' இந்த அழகுப் போட்டி நடத்துவதற்கான திட்டமிடல் என்பது உலகக் கோப்பை கால்பந்துப் போட்டிகளுக்கு செய்யப்பட்ட ஏற்பாடுகளைப் போன்றது. ஒட்டகங்களுக்கான உலக அழகுப் போட்டி இங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த முழு நிகழ்வின்போதும் யாரும் நேர்மையற்ற செயல்களைச் செய்யக்கூடாது என்பதை ஏற்பாட்டுக் குழு கவனித்துக் கொண்டது' என்று கத்தார் ஒட்டக ஜெயின் கிளப்பின் தலைவர் ஹமத் ஜாபர் அல் அத்பா தெரிவித்துள்ளார்.

இவ்விழாவில் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பிடிக்கும் ஒட்டகங்களுக்கு கோப்பைகள் வழங்கப்படுகின்றன.

அவற்றின் உரிமையாளர்களுக்குப் பணப் பரிசும் வழங்கப்பட்டது. நஜா என்ற ஒட்டகம் முதல் இடத்தைப் பிடித்தது அதன் உரிமையாளருக்கு 200,000 கத்தார் ரியால்கள் (ரூ. 44,72இ484) தொகை பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது.

அதிக பால் கொடுத்த ஒட்டகத்தின் உரிமையாளருக்கு 15,000 ரியால் பரிசுத்தொகை கிடைத்தது.

இந்த அழகுப் போட்டியில் கலந்துக் கொள்ளும் அனைத்து ஒட்டகங்களும் போட்டிக்கு முன்னதாக முழுமையாக பரிசோதிக்கப்பட்டன.

இந்த போட்டியின் ஒட்டகங்கள் அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்படவில்லையா அல்லது ஒப்பனை செய்யப்பட்டுள்ளனவா என்று சோதிக்கப்பட்டது.

பல ஒட்டக உரிமையாளர்கள் தங்கள் ஒட்டகங்களுக்கு போடோக்ஸ் ஃபில்லர்கள் மற்றும் சிலிகான்களை கொடுப்பதை கண்காணிப்புக் குழுவினர் கண்டறிந்தனர்.

கடந்த ஆண்டு, சவுதி அரேபியாவில் நடைபெற்ற உலக ஒட்டக அழகுப் போட்டியில் ஒப்பனை மாற்றங்கள் காரணமாக பல ஒட்டகங்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் போட்டியில் கலந்துக் கொள்ளும் வாய்ப்பை இழந்தன.

வளைகுடா நாடுகளைச் சேர்ந்த பங்கேற்பாளர்கள் இப்போட்டியில் பங்கேற்றனர்.ஒட்டகங்களின் வயது மற்றும் இனத்தைப் பொறுத்து அவை வெவ்வேறு போட்டிகளில் பங்கேற்கப்பட உள்ளன.இந்தப் போட்டியில் ஒட்டகங்களின் அழகு வெவ்வேறு அளவுகளில் அளவிடப்படுகிறது. உதாரணமாக கருப்பு ஒட்டகங்கள் உடல் அளவு, தலை மற்றும் காதுகளின் அடிப்படையில் பட்டியல் இடப்படுகின்றன.

மறுபுறம், மகதீர் காலத்தின் ஒட்டகங்களுக்கு அவற்றின் காதுகள் கீழே வளைந்திருந்தாலும் நேராக நிற்கிறதா என்று பார்க்கப்படும். இதனுடன் இந்த வகை ஒட்டகங்களின் வாயின் வளைவு எவ்வாறு உள்ளது என்பதும் பார்க்கப்படுகிறது.


கத்தார் ஒட்டக அழகுப் போட்டியில் நஜா உலக அழகியாக தெரிவு கத்தாரில் ஃபிபா உலகக் கிண்ண கால்பந்துப் போட்டிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் அங்கு நடத்தப்பட்ட மற்றொரு போட்டியும் மக்களை வெகுவாக கவர்ந்தது.அங்கு ஒட்டகங்களின் அழகுப் போட்டியும் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.இந்த போட்டியில் உலகின் மிக அழகான ஒட்டகம் வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டது.பல நாட்கள் நடந்த இந்தப் போட்டியில் 700 க்கும் மேற்பட்ட ஒட்டகங்கள் பங்கேற்றன.இந்த ஒட்டகப் போட்டி மத்திய கிழக்கு முழுவதும் தொடர்ந்து நடத்தப்படுகின்றன.இந்த ஒட்டகங்களின் அழகுப் போட்டியில் அதிகபட்சமாக பால் கொடுக்கும் ஒட்டகமும் தேர்வு செய்யப்பட்டு அதற்கும் பரிசு வழங்கப்பட்டது.' இந்த அழகுப் போட்டி நடத்துவதற்கான திட்டமிடல் என்பது உலகக் கோப்பை கால்பந்துப் போட்டிகளுக்கு செய்யப்பட்ட ஏற்பாடுகளைப் போன்றது. ஒட்டகங்களுக்கான உலக அழகுப் போட்டி இங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த முழு நிகழ்வின்போதும் யாரும் நேர்மையற்ற செயல்களைச் செய்யக்கூடாது என்பதை ஏற்பாட்டுக் குழு கவனித்துக் கொண்டது' என்று கத்தார் ஒட்டக ஜெயின் கிளப்பின் தலைவர் ஹமத் ஜாபர் அல் அத்பா தெரிவித்துள்ளார்.இவ்விழாவில் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பிடிக்கும் ஒட்டகங்களுக்கு கோப்பைகள் வழங்கப்படுகின்றன.அவற்றின் உரிமையாளர்களுக்குப் பணப் பரிசும் வழங்கப்பட்டது. நஜா என்ற ஒட்டகம் முதல் இடத்தைப் பிடித்தது அதன் உரிமையாளருக்கு 200,000 கத்தார் ரியால்கள் (ரூ. 44,72இ484) தொகை பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது.அதிக பால் கொடுத்த ஒட்டகத்தின் உரிமையாளருக்கு 15,000 ரியால் பரிசுத்தொகை கிடைத்தது.இந்த அழகுப் போட்டியில் கலந்துக் கொள்ளும் அனைத்து ஒட்டகங்களும் போட்டிக்கு முன்னதாக முழுமையாக பரிசோதிக்கப்பட்டன.இந்த போட்டியின் ஒட்டகங்கள் அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்படவில்லையா அல்லது ஒப்பனை செய்யப்பட்டுள்ளனவா என்று சோதிக்கப்பட்டது.பல ஒட்டக உரிமையாளர்கள் தங்கள் ஒட்டகங்களுக்கு போடோக்ஸ் ஃபில்லர்கள் மற்றும் சிலிகான்களை கொடுப்பதை கண்காணிப்புக் குழுவினர் கண்டறிந்தனர்.கடந்த ஆண்டு, சவுதி அரேபியாவில் நடைபெற்ற உலக ஒட்டக அழகுப் போட்டியில் ஒப்பனை மாற்றங்கள் காரணமாக பல ஒட்டகங்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் போட்டியில் கலந்துக் கொள்ளும் வாய்ப்பை இழந்தன.வளைகுடா நாடுகளைச் சேர்ந்த பங்கேற்பாளர்கள் இப்போட்டியில் பங்கேற்றனர்.ஒட்டகங்களின் வயது மற்றும் இனத்தைப் பொறுத்து அவை வெவ்வேறு போட்டிகளில் பங்கேற்கப்பட உள்ளன.இந்தப் போட்டியில் ஒட்டகங்களின் அழகு வெவ்வேறு அளவுகளில் அளவிடப்படுகிறது. உதாரணமாக கருப்பு ஒட்டகங்கள் உடல் அளவு, தலை மற்றும் காதுகளின் அடிப்படையில் பட்டியல் இடப்படுகின்றன.மறுபுறம், மகதீர் காலத்தின் ஒட்டகங்களுக்கு அவற்றின் காதுகள் கீழே வளைந்திருந்தாலும் நேராக நிற்கிறதா என்று பார்க்கப்படும். இதனுடன் இந்த வகை ஒட்டகங்களின் வாயின் வளைவு எவ்வாறு உள்ளது என்பதும் பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement