• May 06 2024

போரோ, வன்முறையோ ஒரு பிரச்சினைக்கு தீர்வாக அமையாது...!பலஸ்தீன தூதுவருடனான சந்திப்பில் சஜித்...!samugammedia

Sharmi / Oct 16th 2023, 10:53 pm
image

Advertisement

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் போரோ அல்லது வன்முறையோ ஒரு பிரச்சினைக்கு ஒரே தீர்வாக அமையாது என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்றையதினம் (16) பலஸ்தீன தூதுவர் ஸுஹைர் எம்.எச்.டார் செயிட் ஐ சந்தித்து கலந்துரையாடிய போதே சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் இடையே தற்போது நிலவிவரும் நெருக்கடி நிலையை பேச்சுவார்த்தை மூலம் தீர்ப்பதால்,இரு நாட்டு மக்களின் உயிர் பாதுகாப்புக்கு தொடர்ந்து உத்தரவாதம் அளிக்கப்படும் என்றும்,எந்தவொரு சந்தர்ப்பத்திலும் போரோ அல்லது வன்முறையோ ஒரு பிரச்சினைக்கு ஒரே தீர்வாக அமையாது.

தாம் தற்காலிக அமைதியை விட நிரந்தர அமைதியையே நாடுவதனால்,இவ்வாறான நிலையான அமைதிக்கான தீர்வை இரு நாட்டு தலைவர்களும் சந்தித்து இணக்கம் காணுமாறு கேட்டுக் கொள்வதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச  தெரிவித்தார்.

தொடர்ந்தும் யுத்தம் நடந்தால் குழந்தைகள், தாய்மார்கள்,பெண்கள் உட்பட அப்பாவி மக்கள் உயிரிழக்க நேரிடும் என்றும், காயப்பட்டு பல்வேறு கோளாறுகள் மற்றும் அசௌகரியங்களுக்கு ஆளாதல் போன்றன ஏற்படுவதனால்,இரு நாடுகளுக்கும் இடையே போர் நிலவும் நிலை நீடிக்காமல் நிரந்தர அமைதிக்கான ஆரம்பமே எழுந்துள்ளதாகவும், வன்முறையை ஏற்காதவன் என்ற வகையில், இரு தரப்பு பொதுமக்களின் உயிருக்கு இனியும் ஆபத்து ஏற்படாமல் நிலையான அமைதியை நோக்கி நகர வேண்டும் என்றே இந்நேரத்தில் கேட்டுக் கொள்ள வேண்டியிள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும்,இந்த போரில் உயிரிழந்த மற்றும் குடும்பத்தை இழந்த இரு நாட்டு பொதுமக்களுக்கும் தனது இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.

இச்சந்திப்பில் எதிர்க்கட்சித் தலைவருடன் பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்காரும் கலந்து கொண்டார்.

போரோ, வன்முறையோ ஒரு பிரச்சினைக்கு தீர்வாக அமையாது.பலஸ்தீன தூதுவருடனான சந்திப்பில் சஜித்.samugammedia எந்தவொரு சந்தர்ப்பத்திலும் போரோ அல்லது வன்முறையோ ஒரு பிரச்சினைக்கு ஒரே தீர்வாக அமையாது என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.கொழும்பில் இன்றையதினம் (16) பலஸ்தீன தூதுவர் ஸுஹைர் எம்.எச்.டார் செயிட் ஐ சந்தித்து கலந்துரையாடிய போதே சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் இடையே தற்போது நிலவிவரும் நெருக்கடி நிலையை பேச்சுவார்த்தை மூலம் தீர்ப்பதால்,இரு நாட்டு மக்களின் உயிர் பாதுகாப்புக்கு தொடர்ந்து உத்தரவாதம் அளிக்கப்படும் என்றும்,எந்தவொரு சந்தர்ப்பத்திலும் போரோ அல்லது வன்முறையோ ஒரு பிரச்சினைக்கு ஒரே தீர்வாக அமையாது.தாம் தற்காலிக அமைதியை விட நிரந்தர அமைதியையே நாடுவதனால்,இவ்வாறான நிலையான அமைதிக்கான தீர்வை இரு நாட்டு தலைவர்களும் சந்தித்து இணக்கம் காணுமாறு கேட்டுக் கொள்வதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச  தெரிவித்தார்.தொடர்ந்தும் யுத்தம் நடந்தால் குழந்தைகள், தாய்மார்கள்,பெண்கள் உட்பட அப்பாவி மக்கள் உயிரிழக்க நேரிடும் என்றும், காயப்பட்டு பல்வேறு கோளாறுகள் மற்றும் அசௌகரியங்களுக்கு ஆளாதல் போன்றன ஏற்படுவதனால்,இரு நாடுகளுக்கும் இடையே போர் நிலவும் நிலை நீடிக்காமல் நிரந்தர அமைதிக்கான ஆரம்பமே எழுந்துள்ளதாகவும், வன்முறையை ஏற்காதவன் என்ற வகையில், இரு தரப்பு பொதுமக்களின் உயிருக்கு இனியும் ஆபத்து ஏற்படாமல் நிலையான அமைதியை நோக்கி நகர வேண்டும் என்றே இந்நேரத்தில் கேட்டுக் கொள்ள வேண்டியிள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.மேலும்,இந்த போரில் உயிரிழந்த மற்றும் குடும்பத்தை இழந்த இரு நாட்டு பொதுமக்களுக்கும் தனது இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.இச்சந்திப்பில் எதிர்க்கட்சித் தலைவருடன் பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்காரும் கலந்து கொண்டார்.

Advertisement

Advertisement

Advertisement