• May 05 2024

உடலில் இனங்காணப்படாத புதிய அடையாளங்கள்; அதிகரிக்கும் ஆபத்து! இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை SamugamMedia

Chithra / Mar 23rd 2023, 6:54 am
image

Advertisement

இலங்கையில் அண்மைக்காலமாக தொழுநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அவசரமாக சுகாதார ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளுமாறு சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.

அந்த பணியகம் அறிக்கையொன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ளது.


அந்த அறிக்கையில், 

உடலில் இனங்காணப்படாத புதிய அடையாளங்கள் அல்லது புள்ளிகள் தென்பட்டால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

இதேவேளை, இலங்கையில் வருடாந்தம் சுமார் 1,500 தொழுநோயாளிகள் இனங்காணப்படுவதாகவும் அவர்களில் 40 சதவீதமானோர் மேல் மாகாணத்தில் இருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் 15 சதவீதமான நோயாளிகள் குழந்தைகள் என்று சுகாதார மேம்பாட்டு பணியகம் குறிப்பிட்டுள்ளது.


இதேவேளை, உங்களின் உடலில் இவ்வாறான அடையாளங்கள் இருப்பது தொடர்பில் ஏதேனும் சந்தேகம் இருப்பின், தேசிய வைத்தியசாலையின் மத்திய தொழுநோய் சிகிச்சை நிலையத்தின் 075 4088604 என்ற இலக்கத்திற்கு வாட்ஸ்அப் செய்தியை அனுப்புமாறு அந்த அறிக்கையின் ஊடாக கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

அந்த செய்தியில், நன்கு வெளிச்சம் உள்ள இடத்தில் எடுக்கப்பட்ட சந்தேகத்திற்கிடமான இடத்தின் தெளிவான புகைப்படம், வயது, பாலினம், நீங்கள் வசிக்கும் இடம், எவ்வளவு காலம் அந்த புள்ளி அல்லது அடையாளம் உள்ளது எனவும், மற்றும் பிற தொடர்புடைய அறிகுறிகள் (அரிப்பு, எரிச்சல், வலி) தொடர்பான தகவல்கள் குறிப்பிடப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

உடலில் இனங்காணப்படாத புதிய அடையாளங்கள்; அதிகரிக்கும் ஆபத்து இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை SamugamMedia இலங்கையில் அண்மைக்காலமாக தொழுநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அவசரமாக சுகாதார ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளுமாறு சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.அந்த பணியகம் அறிக்கையொன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ளது.அந்த அறிக்கையில், உடலில் இனங்காணப்படாத புதிய அடையாளங்கள் அல்லது புள்ளிகள் தென்பட்டால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.இதேவேளை, இலங்கையில் வருடாந்தம் சுமார் 1,500 தொழுநோயாளிகள் இனங்காணப்படுவதாகவும் அவர்களில் 40 சதவீதமானோர் மேல் மாகாணத்தில் இருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும் 15 சதவீதமான நோயாளிகள் குழந்தைகள் என்று சுகாதார மேம்பாட்டு பணியகம் குறிப்பிட்டுள்ளது.இதேவேளை, உங்களின் உடலில் இவ்வாறான அடையாளங்கள் இருப்பது தொடர்பில் ஏதேனும் சந்தேகம் இருப்பின், தேசிய வைத்தியசாலையின் மத்திய தொழுநோய் சிகிச்சை நிலையத்தின் 075 4088604 என்ற இலக்கத்திற்கு வாட்ஸ்அப் செய்தியை அனுப்புமாறு அந்த அறிக்கையின் ஊடாக கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.அந்த செய்தியில், நன்கு வெளிச்சம் உள்ள இடத்தில் எடுக்கப்பட்ட சந்தேகத்திற்கிடமான இடத்தின் தெளிவான புகைப்படம், வயது, பாலினம், நீங்கள் வசிக்கும் இடம், எவ்வளவு காலம் அந்த புள்ளி அல்லது அடையாளம் உள்ளது எனவும், மற்றும் பிற தொடர்புடைய அறிகுறிகள் (அரிப்பு, எரிச்சல், வலி) தொடர்பான தகவல்கள் குறிப்பிடப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement