• May 07 2024

மதுபானங்களின் விலைகளை குறையுங்கள்...! அரசாங்கத்திடம் விடுக்கப்பட்ட கோரிக்கை..!samugammedia

Sharmi / May 17th 2023, 10:31 am
image

Advertisement

சாதாரண பொதுமக்களின் சார்பில் மதுபான உற்பத்தியாளர்கள், அரசாங்கத்திடம் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர்.

மதுபான நுகர்வு பாரியளவில் குறைந்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே சாதாரண பொதுமக்கள் கொள்வனவு செய்யக் கூடிய வகையில் மதுபான விலைகளை குறைக்க வேண்டுமென உற்பத்தியாளர்கள் கோரியுள்ளனர்.

முன்னணி மதுபான உற்பத்தி நிறுவனங்களின் பிரதானிகளுக்கும், நிதி அமைச்சின் பிரதிநிதிகளுக்கும் இடையில் அண்மையில் இது தொடர்பில் சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது.

மதுபான வகைகளின் சடுதியான விலை அதிகரிப்பு காரணமாக மதுபான நுகர்வு பாரியளவில் குறைந்துள்ளது.

அண்மைய மாதங்களில் மதுபான விற்பனை 40 வீதத்தினால் குறைந்துள்ளதாக உற்பத்தியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நாட்டில் அதிகளவு நுகரப்படும் கல் (Gal Arrack) என்ற மதுபான வகையின் கால் போத்தல் 750 ரூபா எனவும், தினக் கூலி வேலை செய்யும் தொழிலாளியினால் மதுபான கொள்வனவு செய்யும் இயலுமை கிடையாது எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.

ஒரு போத்தல் சாராயத்திற்கு 85 வீத வரி விதிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மதுபானங்களின் விலைகளை குறையுங்கள். அரசாங்கத்திடம் விடுக்கப்பட்ட கோரிக்கை.samugammedia சாதாரண பொதுமக்களின் சார்பில் மதுபான உற்பத்தியாளர்கள், அரசாங்கத்திடம் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். மதுபான நுகர்வு பாரியளவில் குறைந்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே சாதாரண பொதுமக்கள் கொள்வனவு செய்யக் கூடிய வகையில் மதுபான விலைகளை குறைக்க வேண்டுமென உற்பத்தியாளர்கள் கோரியுள்ளனர். முன்னணி மதுபான உற்பத்தி நிறுவனங்களின் பிரதானிகளுக்கும், நிதி அமைச்சின் பிரதிநிதிகளுக்கும் இடையில் அண்மையில் இது தொடர்பில் சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது. மதுபான வகைகளின் சடுதியான விலை அதிகரிப்பு காரணமாக மதுபான நுகர்வு பாரியளவில் குறைந்துள்ளது. அண்மைய மாதங்களில் மதுபான விற்பனை 40 வீதத்தினால் குறைந்துள்ளதாக உற்பத்தியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.நாட்டில் அதிகளவு நுகரப்படும் கல் (Gal Arrack) என்ற மதுபான வகையின் கால் போத்தல் 750 ரூபா எனவும், தினக் கூலி வேலை செய்யும் தொழிலாளியினால் மதுபான கொள்வனவு செய்யும் இயலுமை கிடையாது எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.ஒரு போத்தல் சாராயத்திற்கு 85 வீத வரி விதிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement