• May 18 2024

பாவனையில் இருந்து நீக்கப்பட்ட Co Amoxiclav நுண்ணுயிர் எதிர்ப்பிகள்!samugammedia

Tamil nila / Aug 25th 2023, 12:44 pm
image

Advertisement

Co Amoxiclav நுண்ணுயிர் எதிர்ப்பிகள் பாவனையில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தேசிய மருந்துகள் வழங்கல் சபை அறிவித்துள்ளது.

உற்பத்தி செய்யப்படும் ‘கோமாக்சிக்லாவ்’ (Co Amoxiclav) என்ற நுண்ணுயிர் எதிர்ப்பியின் மற்ற மூன்று வகை மருந்துகளின் தரம் குறைவாக இருப்பது உறுதிசெய்யப்பட்டதனாலேயே அதனை பாவனையிலிருந்து அகற்றுமாறு அறிவித்துள்ளது.

இந்த அறிவித்தலை ஏற்று அனைத்து மருந்தகங்களும் செயற்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுவாச அமைப்பு தொடர்பான நோய்கள் உட்பட பாக்டீரியா நோய்களுக்கு இந்த நாட்டின் மருத்துவமனை அமைப்பில் Co Amoxiclav என்ற மருந்து பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது மற்றும் தற்போது குழந்தை நோய்த்தொற்றுகளுக்கான முதல் வரிசை மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.

களுத்துறை மாவட்டத்திலுள்ள நிறுவனமொன்றினால் உற்பத்தி செய்யப்பட்ட இந்த நுண்ணுயிர் எதிர்ப்பிகள் பல தொகுதிகள் தரம் குறைந்தவை என உறுதி செய்யப்பட்டது.

இதனால் ஆரம்பத்தில் பாவனையில் இருந்து விலக்கப்பட்டிருந்ததோடு, குறித்த மருந்து தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனத்திடம் நாடு ஆய்வு அறிக்கையை கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாவனையில் இருந்து நீக்கப்பட்ட Co Amoxiclav நுண்ணுயிர் எதிர்ப்பிகள்samugammedia Co Amoxiclav நுண்ணுயிர் எதிர்ப்பிகள் பாவனையில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தேசிய மருந்துகள் வழங்கல் சபை அறிவித்துள்ளது.உற்பத்தி செய்யப்படும் ‘கோமாக்சிக்லாவ்’ (Co Amoxiclav) என்ற நுண்ணுயிர் எதிர்ப்பியின் மற்ற மூன்று வகை மருந்துகளின் தரம் குறைவாக இருப்பது உறுதிசெய்யப்பட்டதனாலேயே அதனை பாவனையிலிருந்து அகற்றுமாறு அறிவித்துள்ளது.இந்த அறிவித்தலை ஏற்று அனைத்து மருந்தகங்களும் செயற்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.சுவாச அமைப்பு தொடர்பான நோய்கள் உட்பட பாக்டீரியா நோய்களுக்கு இந்த நாட்டின் மருத்துவமனை அமைப்பில் Co Amoxiclav என்ற மருந்து பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது மற்றும் தற்போது குழந்தை நோய்த்தொற்றுகளுக்கான முதல் வரிசை மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.களுத்துறை மாவட்டத்திலுள்ள நிறுவனமொன்றினால் உற்பத்தி செய்யப்பட்ட இந்த நுண்ணுயிர் எதிர்ப்பிகள் பல தொகுதிகள் தரம் குறைந்தவை என உறுதி செய்யப்பட்டது.இதனால் ஆரம்பத்தில் பாவனையில் இருந்து விலக்கப்பட்டிருந்ததோடு, குறித்த மருந்து தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனத்திடம் நாடு ஆய்வு அறிக்கையை கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement