• Nov 05 2024

இணைய மோசடிகளில் ஈடுபட்ட 130 சீனப் பிரஜைகளின் கோரிக்கை நிராகரிப்பு!

Chithra / Oct 31st 2024, 2:48 pm
image

Advertisement

 

இணையவழி மோசடிகளில் ஈடுபட்ட நிலையில் கண்டி - குண்டசாலை பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் வைத்துக் கைது செய்யப்பட்ட 130 சீனப் பிரஜைகளின் பிணை கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. 

குறித்த வழக்கு தெல்தெனிய நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது பிணை கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. 

சந்தேக நபர்கள் சார்பில் முன்னிலையான 3 சட்டத்தரணிகள் பிணை கோரிக்கையை முன்வைத்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. 

நீதிமன்ற உத்தரவுக்கமைய குறித்த 130 சீன பிரஜைகளும் எதிர்வரும் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். 

அவர்கள் அனைவரும் பல்லேகலை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். 

இதற்கு முன்னரும் அவர்கள் முன்வைத்த பிணை கோரிக்கை நிராகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

இணைய மோசடிகளில் ஈடுபட்ட 130 சீனப் பிரஜைகளின் கோரிக்கை நிராகரிப்பு  இணையவழி மோசடிகளில் ஈடுபட்ட நிலையில் கண்டி - குண்டசாலை பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் வைத்துக் கைது செய்யப்பட்ட 130 சீனப் பிரஜைகளின் பிணை கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு தெல்தெனிய நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது பிணை கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. சந்தேக நபர்கள் சார்பில் முன்னிலையான 3 சட்டத்தரணிகள் பிணை கோரிக்கையை முன்வைத்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. நீதிமன்ற உத்தரவுக்கமைய குறித்த 130 சீன பிரஜைகளும் எதிர்வரும் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் பல்லேகலை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இதற்கு முன்னரும் அவர்கள் முன்வைத்த பிணை கோரிக்கை நிராகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement