• May 18 2024

வடமாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் குருதிக்கொடை SamugamMedia

Chithra / Mar 21st 2023, 5:49 pm
image

Advertisement

வட மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் குருதிக்கொடை நிகழ்வு ஒன்று இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது

இன்று (21) காலை 9.30 மணிக்கு முல்லைக்கு மாவட்ட செயலகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்த குருதிக்கொடை நிகழ்வானது மாலை வேலை வரை தொடர்ச்சியாக இடம்பெற்றது.

இதன்போது முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு திணைக்களங்களின் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பல்வேறு தரப்பினை சேர்ந்தவர்களும் இணைந்து குருதிக்கொடையில் ஈடுபட்டனர். 

இதன்போது சுமார் 60 பேர் வரையில் குருதிக் கொடை வழங்கியுள்ளனர்.

அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கமானது தங்களின் உறுப்பினர்களின் உரிமைக்காக மட்டுமின்றி பொது மக்களின் நலன் சார்ந்த செயல் திட்டங்களையும் முன்னெடுக்கும் நோக்கோடு தங்களால்  இந்த குருதிக் கொடை நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், இதேவேளை இந்த செயற்திட்டம் தொடர்ச்சியாக ஏனைய மாவட்டங்களிலும் முன்னெடுக்கவுள்ளதாகவும், வடமாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்க தலைவர் தெரிவித்துள்ளார்.


வடமாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் குருதிக்கொடை SamugamMedia வட மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் குருதிக்கொடை நிகழ்வு ஒன்று இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுஇன்று (21) காலை 9.30 மணிக்கு முல்லைக்கு மாவட்ட செயலகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்த குருதிக்கொடை நிகழ்வானது மாலை வேலை வரை தொடர்ச்சியாக இடம்பெற்றது.இதன்போது முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு திணைக்களங்களின் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பல்வேறு தரப்பினை சேர்ந்தவர்களும் இணைந்து குருதிக்கொடையில் ஈடுபட்டனர். இதன்போது சுமார் 60 பேர் வரையில் குருதிக் கொடை வழங்கியுள்ளனர்.அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கமானது தங்களின் உறுப்பினர்களின் உரிமைக்காக மட்டுமின்றி பொது மக்களின் நலன் சார்ந்த செயல் திட்டங்களையும் முன்னெடுக்கும் நோக்கோடு தங்களால்  இந்த குருதிக் கொடை நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், இதேவேளை இந்த செயற்திட்டம் தொடர்ச்சியாக ஏனைய மாவட்டங்களிலும் முன்னெடுக்கவுள்ளதாகவும், வடமாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்க தலைவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement