சிங்கப்பூரில் போதைப்பொருள் உட்கொண்டவர்களை உடனே கண்டறிய தலைமுடிப் பரிசோதனைக் கருவியைப் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
தலைமுடி என்பதால் கண்டுபிடிப்பதற்குக் கூடுதல் அவகாசம் கிடைக்கும். அத்துடன் சிறுநீரைக் கொண்டு பரிசோதிப்பதைக் காட்டிலும் இது ஆரோக்கியமான அணுகுமுறையாகவும் இருக்கும் என்று பரிசோதனை அதிகாரிகள் கருதுகின்றனர்.
புதிய பரிசோதனையின் மூலம் அதிகாரிகள் அடுத்த கட்ட நடவடிக்கையைத் துரிதமாக எடுக்க முடியும் என்று கூறப்பட்டது. மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் வருடாந்திரப் பணித்திட்டக் கருத்தரங்கில் கருவி பற்றிய விவரங்கள் பகிர்ந்துகொள்ளப்பட்டன.
இளையர்களிடையே அதிகரித்துவரும் போதைப் புழக்கத்தைக் குறைக்கச் சமூக அளவில் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்படுவதாகக் கருத்தரங்கில் குறிப்பிடப்பட்டது.
இவ்வாண்டு பெற்றோருக்கென ஒரு மாநாடு நடத்தப்படும். அதில் போதைப்பொருள்களின் தீமைகள் குறித்துப் பிள்ளைகளுக்கு எப்படி எடுத்துச்சொல்வது என்பதன் தொடர்பில் பெற்றோருக்கு ஆலோசனைகள் வழங்கப்படும்.
சிங்கப்பூரில் தலைமுடியை வைத்து புதிய கண்டுபிடிப்பு சிங்கப்பூரில் போதைப்பொருள் உட்கொண்டவர்களை உடனே கண்டறிய தலைமுடிப் பரிசோதனைக் கருவியைப் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.தலைமுடி என்பதால் கண்டுபிடிப்பதற்குக் கூடுதல் அவகாசம் கிடைக்கும். அத்துடன் சிறுநீரைக் கொண்டு பரிசோதிப்பதைக் காட்டிலும் இது ஆரோக்கியமான அணுகுமுறையாகவும் இருக்கும் என்று பரிசோதனை அதிகாரிகள் கருதுகின்றனர்.புதிய பரிசோதனையின் மூலம் அதிகாரிகள் அடுத்த கட்ட நடவடிக்கையைத் துரிதமாக எடுக்க முடியும் என்று கூறப்பட்டது. மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் வருடாந்திரப் பணித்திட்டக் கருத்தரங்கில் கருவி பற்றிய விவரங்கள் பகிர்ந்துகொள்ளப்பட்டன.இளையர்களிடையே அதிகரித்துவரும் போதைப் புழக்கத்தைக் குறைக்கச் சமூக அளவில் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்படுவதாகக் கருத்தரங்கில் குறிப்பிடப்பட்டது.இவ்வாண்டு பெற்றோருக்கென ஒரு மாநாடு நடத்தப்படும். அதில் போதைப்பொருள்களின் தீமைகள் குறித்துப் பிள்ளைகளுக்கு எப்படி எடுத்துச்சொல்வது என்பதன் தொடர்பில் பெற்றோருக்கு ஆலோசனைகள் வழங்கப்படும்.