• May 18 2024

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களை தடுக்க விசேட வேலைத்திட்டம்..! samugammedia

Chithra / Oct 11th 2023, 2:00 pm
image

Advertisement

 

தென் மாகாணத்தில் இடம்பெறும் போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களை கைது செய்வதற்கான விசேட வேலைத்திட்டம் பொலிஸ் மா அதிபரின் பணிப்புரையின் பேரில் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த மாகாணத்தில் நீண்டகாலமாக போதைப்பொருள் கடத்தல் மற்றும் திட்டமிட்ட குற்றச்செயல்கள் இடம்பெற்று வருவதாகவும், வெளிநாடுகளில் போதைப்பொருள் கடத்தல்காரர்களின் சொந்த ஊர்கள் தென் மாகாணத்தில் இருப்பதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.

இதன் காரணமாக தென் மாகாணத்தில் போதைப்பொருள் கடத்தல் பிரதானமாக இடம்பெற்று வருவதாகவும், தற்போது கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களில் கணிசமானவர்கள் மற்றும் வெளிநாடுகளில் பதுங்கியிருப்பவர்கள் தென் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் அவர் தெரிவித்தார். 

மேலும், உயிரிழந்தவர்கள் மற்றும் தற்போது ஆட்கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருபவர்கள் என அடையாளம் காணப்பட்டவர்கள் தொடர்பில் அவர்களின் சொந்த கிராமங்கள் தென் மாகாணத்தில் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனைக் கட்டுப்படுத்த விசேட பொலிஸ் பிரிவினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், பாதுகாப்பு ஏற்பாடுகளை ஊடாக கடத்தல்காரர்கள் தமது இலக்குகளை அடைய முயல்வதை அவதானித்துள்ளதாகவும், இதனால் சந்தேக நபர்களை கைது செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்தார்.

எல்பிட்டிய பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவரைக் கொலை செய்யத் தயாரான இரு சந்தேகநபர்கள் கடந்த 7ஆம் திகதி கைது செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களை தடுக்க விசேட வேலைத்திட்டம். samugammedia  தென் மாகாணத்தில் இடம்பெறும் போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களை கைது செய்வதற்கான விசேட வேலைத்திட்டம் பொலிஸ் மா அதிபரின் பணிப்புரையின் பேரில் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.இந்த மாகாணத்தில் நீண்டகாலமாக போதைப்பொருள் கடத்தல் மற்றும் திட்டமிட்ட குற்றச்செயல்கள் இடம்பெற்று வருவதாகவும், வெளிநாடுகளில் போதைப்பொருள் கடத்தல்காரர்களின் சொந்த ஊர்கள் தென் மாகாணத்தில் இருப்பதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.இதன் காரணமாக தென் மாகாணத்தில் போதைப்பொருள் கடத்தல் பிரதானமாக இடம்பெற்று வருவதாகவும், தற்போது கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களில் கணிசமானவர்கள் மற்றும் வெளிநாடுகளில் பதுங்கியிருப்பவர்கள் தென் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் அவர் தெரிவித்தார். மேலும், உயிரிழந்தவர்கள் மற்றும் தற்போது ஆட்கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருபவர்கள் என அடையாளம் காணப்பட்டவர்கள் தொடர்பில் அவர்களின் சொந்த கிராமங்கள் தென் மாகாணத்தில் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.இதனைக் கட்டுப்படுத்த விசேட பொலிஸ் பிரிவினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், பாதுகாப்பு ஏற்பாடுகளை ஊடாக கடத்தல்காரர்கள் தமது இலக்குகளை அடைய முயல்வதை அவதானித்துள்ளதாகவும், இதனால் சந்தேக நபர்களை கைது செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்தார்.எல்பிட்டிய பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவரைக் கொலை செய்யத் தயாரான இரு சந்தேகநபர்கள் கடந்த 7ஆம் திகதி கைது செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

Advertisement

Advertisement

Advertisement