• Dec 04 2024

ரசிகர்களின் இதயத்துடிப்பை எகிற வைத்த இறுதிப் பந்து - இலங்கை அணி வெற்றி!

Tamil nila / Mar 4th 2024, 10:22 pm
image

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது டி 20 போட்டியில் 3 ஓட்டங்களால் இலங்கை அணி வெற்றிப்பெற்றுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட இலங்கை அணிக்கு அழைப்பு விடுத்தது.

இந்நிலையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை இழந்து 206 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

இலங்கை அணி சார்பில் சதீர சமரவிக்கிரம அதிகபட்சமாக 61 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றுக் கொண்டார். குசல் மெந்திஸ் 59 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

அதிரடியாக துடுப்பெடுத்தாடிய சரித் அசலங்க ஆட்டமிழக்காமல் 21 பந்துகளில் 6 ஆறு ஓட்டங்களுடன் 44 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டார்.

பந்து வீச்சில்,  Rishad Hossain , Taskin Ahmed மற்றும் Shoriful Islam ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 203 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

பங்களாதேஷ் அணி சார்பில் அதிரடியாக துடுப்பெடுத்தாடிய Jaker Ali  68 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.Mahmudullah 54 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

பந்து வீச்சில் ஏஞ்சலோ மெத்திவ்ஸ் மற்றும் பினுர பெர்ணான்டோ ஆகியோர் தலா இரு விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.

மேலும்  மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் இலங்கை அணி முன்னிலை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ரசிகர்களின் இதயத்துடிப்பை எகிற வைத்த இறுதிப் பந்து - இலங்கை அணி வெற்றி இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது டி 20 போட்டியில் 3 ஓட்டங்களால் இலங்கை அணி வெற்றிப்பெற்றுள்ளது.போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட இலங்கை அணிக்கு அழைப்பு விடுத்தது.இந்நிலையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை இழந்து 206 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.இலங்கை அணி சார்பில் சதீர சமரவிக்கிரம அதிகபட்சமாக 61 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றுக் கொண்டார். குசல் மெந்திஸ் 59 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.அதிரடியாக துடுப்பெடுத்தாடிய சரித் அசலங்க ஆட்டமிழக்காமல் 21 பந்துகளில் 6 ஆறு ஓட்டங்களுடன் 44 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டார்.பந்து வீச்சில்,  Rishad Hossain , Taskin Ahmed மற்றும் Shoriful Islam ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 203 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.பங்களாதேஷ் அணி சார்பில் அதிரடியாக துடுப்பெடுத்தாடிய Jaker Ali  68 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.Mahmudullah 54 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.பந்து வீச்சில் ஏஞ்சலோ மெத்திவ்ஸ் மற்றும் பினுர பெர்ணான்டோ ஆகியோர் தலா இரு விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.மேலும்  மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் இலங்கை அணி முன்னிலை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement