• May 18 2024

மலேசிய கடவுச்சீட்டை பயன்படுத்தி இலங்கை சிறுவர்களை ஐரோப்பாவிற்கு நாடுகடத்தும் கும்பல்! samugammedia

Chithra / Apr 19th 2023, 4:08 pm
image

Advertisement

மலேசிய கடவுச்சீட்டுகளை பயன்படுத்தி இலங்கையை சேர்ந்த சிறுவர்களை ஐரோப்பிய நாடுகளிற்கு கடத்தும்  கும்பலொன்றை மலேசிய அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.

கோலாலம்பூரில் தம்பதியினர் கைதுசெய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து  இலங்கையை சேர்ந்த சிறுவர்களை ஐரோப்பிய நாடுகளிற்கு கடத்தும் நடவடிக்கை குறித்து தெரியவந்துள்ளது.

பஹ்னு இன்டநசனல்ஸ் என்ற நிறுவனத்தினர் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

12 வயதிற்கு உட்பட்ட பிள்ளைகள் உள்ள வறிய மலேசிய குடும்பங்களிடமிருந்து அவர்களின் விபரங்களை பெற்று  அதனை பயன்படுத்தி இலங்கை சிறுவர்களை  ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிற்கு கடத்தும் நடவடிக்கைகள் இடம்பெற்றன என  மலேசியாவின் குடிவரவு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ருஸ்லின் யுசோ தெரிவித்துள்ளார்.

12 வயதிற்கு உட்பட்ட குடும்பங்களிற்கு கடவுச்சீட்டு வழங்குவதாக தெரிவித்து அவர்களை குடிவரவு திணைக்களத்திற்கு அழைத்து மலேசிய சிறுவர்களின்  பிறப்பத்தாட்சி போன்றவற்றை இந்த கும்பலை சேர்ந்தவர்கள் பெற்றுக்கொண்டனர் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குடிவரவு திணைக்களத்தில் விண்ணப்ப படிவங்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படும்போது இலங்கை சிறுவர்களை அழைத்து கைவிரல் அடையாளங்களை பதிவு செய்வார்கள்.


இதன் பின்னர் இலங்கை பிள்ளைகளை மலேசிய கடவுச்சீட்டில் ஐரோப்பிய நாடுகளிற்கு அழைத்துச்செல்லும் நடவடிக்கைகளில் மலேசிய தம்பதியினர் ஈடுபடுவார்கள் என என  மலேசியாவின் குடிவரவு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ருஸ்லின் யுசோ தெரிவித்துள்ளார்.

இலங்கை குழந்தையொன்றிற்கு கடவுச்சீட்டை பெறுவதற்காக மலேசிய தம்பதியினர் கோலாலம்பூர் குடிவரவுதிணைக்களத்திற்கு சென்றவேளை இந்த தம்பதியினர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.


மலேசிய கடவுச்சீட்டை பயன்படுத்தி இலங்கை சிறுவர்களை ஐரோப்பாவிற்கு நாடுகடத்தும் கும்பல் samugammedia மலேசிய கடவுச்சீட்டுகளை பயன்படுத்தி இலங்கையை சேர்ந்த சிறுவர்களை ஐரோப்பிய நாடுகளிற்கு கடத்தும்  கும்பலொன்றை மலேசிய அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.கோலாலம்பூரில் தம்பதியினர் கைதுசெய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து  இலங்கையை சேர்ந்த சிறுவர்களை ஐரோப்பிய நாடுகளிற்கு கடத்தும் நடவடிக்கை குறித்து தெரியவந்துள்ளது.பஹ்னு இன்டநசனல்ஸ் என்ற நிறுவனத்தினர் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.12 வயதிற்கு உட்பட்ட பிள்ளைகள் உள்ள வறிய மலேசிய குடும்பங்களிடமிருந்து அவர்களின் விபரங்களை பெற்று  அதனை பயன்படுத்தி இலங்கை சிறுவர்களை  ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிற்கு கடத்தும் நடவடிக்கைகள் இடம்பெற்றன என  மலேசியாவின் குடிவரவு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ருஸ்லின் யுசோ தெரிவித்துள்ளார்.12 வயதிற்கு உட்பட்ட குடும்பங்களிற்கு கடவுச்சீட்டு வழங்குவதாக தெரிவித்து அவர்களை குடிவரவு திணைக்களத்திற்கு அழைத்து மலேசிய சிறுவர்களின்  பிறப்பத்தாட்சி போன்றவற்றை இந்த கும்பலை சேர்ந்தவர்கள் பெற்றுக்கொண்டனர் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.குடிவரவு திணைக்களத்தில் விண்ணப்ப படிவங்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படும்போது இலங்கை சிறுவர்களை அழைத்து கைவிரல் அடையாளங்களை பதிவு செய்வார்கள்.இதன் பின்னர் இலங்கை பிள்ளைகளை மலேசிய கடவுச்சீட்டில் ஐரோப்பிய நாடுகளிற்கு அழைத்துச்செல்லும் நடவடிக்கைகளில் மலேசிய தம்பதியினர் ஈடுபடுவார்கள் என என  மலேசியாவின் குடிவரவு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ருஸ்லின் யுசோ தெரிவித்துள்ளார்.இலங்கை குழந்தையொன்றிற்கு கடவுச்சீட்டை பெறுவதற்காக மலேசிய தம்பதியினர் கோலாலம்பூர் குடிவரவுதிணைக்களத்திற்கு சென்றவேளை இந்த தம்பதியினர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement