• Sep 19 2025

நாளை சுற்றுப்பாதையில் ஏவப்படவுள்ள இலங்கையின் மூன்றாவது செயற்கைக்கோள்!

Chithra / Sep 18th 2025, 10:24 am
image


உள்ளூர் பொறியாளர்களின் தொழில்நுட்ப நிபுணத்துவத்துடன் உருவாக்கப்பட்ட இலங்கையின் மூன்றாவது சிறிய செயற்கைக்கோள் நாளை (19) சுற்றுப்பாதையில் ஏவப்பட உள்ளதாக மொரட்டுவையில் உள்ள ஆர்தர் சி. கிளார்க் நவீன தொழில்நுட்ப நிறுவனம் அறிவித்துள்ளது.

‘BIRDS-X Dragonfly’ என்று பெயரிடப்பட்ட இந்த செயற்கைக்கோள், ஆகஸ்ட் 24 அன்று நாசாவால் ஏவப்பட்ட ஸ்பேஸ்எக்ஸ்-33 ராக்கெட் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு  கொண்டு செல்லப்பட்டது.

முன்னதாக, 2019 ஆம் ஆண்டில், இலங்கை தனது முதல் சிறிய-செயற்கைக்கோளான ‘ராவணன்-1’ ஐ வெற்றிகரமாக ஏவியது.

மேலும் 2022 ஆம் ஆண்டில், ஐந்து சர்வதேச கூட்டாளர்களை உள்ளடக்கிய பன்னாட்டு தொழில்நுட்ப ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக ‘கிட்சூன்’ செயற்கைக்கோள் ஏவப்பட்டது.

அதன்படி, BIRDS-X டிராகன்ஃபிளை சிறிய செயற்கைக்கோள் நாளை பிற்பகல் 2:15 மணிக்கு சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து அதன் நியமிக்கப்பட்ட சுற்றுப்பாதையில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இது இலங்கையின் விண்வெளி தொழில்நுட்ப பயணத்தில் மற்றொரு குறிப்பிடத்தக்க படியை குறிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. 


நாளை சுற்றுப்பாதையில் ஏவப்படவுள்ள இலங்கையின் மூன்றாவது செயற்கைக்கோள் உள்ளூர் பொறியாளர்களின் தொழில்நுட்ப நிபுணத்துவத்துடன் உருவாக்கப்பட்ட இலங்கையின் மூன்றாவது சிறிய செயற்கைக்கோள் நாளை (19) சுற்றுப்பாதையில் ஏவப்பட உள்ளதாக மொரட்டுவையில் உள்ள ஆர்தர் சி. கிளார்க் நவீன தொழில்நுட்ப நிறுவனம் அறிவித்துள்ளது.‘BIRDS-X Dragonfly’ என்று பெயரிடப்பட்ட இந்த செயற்கைக்கோள், ஆகஸ்ட் 24 அன்று நாசாவால் ஏவப்பட்ட ஸ்பேஸ்எக்ஸ்-33 ராக்கெட் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு  கொண்டு செல்லப்பட்டது.முன்னதாக, 2019 ஆம் ஆண்டில், இலங்கை தனது முதல் சிறிய-செயற்கைக்கோளான ‘ராவணன்-1’ ஐ வெற்றிகரமாக ஏவியது.மேலும் 2022 ஆம் ஆண்டில், ஐந்து சர்வதேச கூட்டாளர்களை உள்ளடக்கிய பன்னாட்டு தொழில்நுட்ப ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக ‘கிட்சூன்’ செயற்கைக்கோள் ஏவப்பட்டது.அதன்படி, BIRDS-X டிராகன்ஃபிளை சிறிய செயற்கைக்கோள் நாளை பிற்பகல் 2:15 மணிக்கு சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து அதன் நியமிக்கப்பட்ட சுற்றுப்பாதையில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.இது இலங்கையின் விண்வெளி தொழில்நுட்ப பயணத்தில் மற்றொரு குறிப்பிடத்தக்க படியை குறிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. 

Advertisement

Advertisement

Advertisement