• Mar 07 2025

அமைச்சரை நிலைகுலைய வைத்த சிறிதரன்; தையிட்டி பிரச்சினைக்கு பதிலளிக்க காலஅவகாசம்!

Chithra / Mar 6th 2025, 11:14 am
image


யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள தையிட்டி கிராமத்தில் பொதுமக்களுக்கு சொந்தமான கணிக்குள் திஸ்ஸ ராஜமகா விகாரை என்ற பெயரில் விகாரை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது என்பதனை அமைச்சர் அறிவாரா என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் புத்த சாசன அமைச்சரை நோக்கி இன்று பாராளுமன்றில் கேள்வியெழுப்பியுள்ளார். 

மேலும், அந்த விகாரை  கட்டப்பட்டுள்ள இடத்தில் 20 பரப்பு காணிகளுக்கான உரிமையாளர்கள் விகாரையை அகற்றி தங்கள்  நிலங்களை தங்களிடம் கையளிக்குமாறு நீண்ட காலமாக  போராட்டங்களை நடத்தி வருவதை அமைச்சர் அறிவாரா?

ஒரு நோக்கத்திற்காக சுவீகரிக்கப்படும் காணி  இன்னொரு நோக்கத்திற்காக பயன்படுத்தபட  முடியாது என்பதனை அமைச்சர் அறிவாரா? அந்த காணி விகாரை அமைப்பதற்கு உபயோகிக்கப்படவில்லையாயின் அது சட்டத்திற்கு முரணான செயல் என்பதனை அமைச்சர் ஏற்றுக்கொள்வாரா?

போராடிவரும் காணி உரிமையாளர்களுக்கு அரசின் தீர்வு என்ன என்பதனை அமைச்சர் அறியத்தருவாரா என கேள்வியெழுப்பியிருந்தார்.

இதற்குப் பதிலளிப்பதற்கு காணியமைச்சு உட்பட பல்வேறு இடங்களில் இதற்கான பதிலை கேட்க வேண்டி இருக்கிறது. இதற்காக நான் கால அவகாசம் கேட்கிறேன் என புத்த சாசன அமைச்சர் ஹனிதும சுனில் செனவி பதிலளித்தமை குறிப்பிடத்தக்கது.

அமைச்சரை நிலைகுலைய வைத்த சிறிதரன்; தையிட்டி பிரச்சினைக்கு பதிலளிக்க காலஅவகாசம் யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள தையிட்டி கிராமத்தில் பொதுமக்களுக்கு சொந்தமான கணிக்குள் திஸ்ஸ ராஜமகா விகாரை என்ற பெயரில் விகாரை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது என்பதனை அமைச்சர் அறிவாரா என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் புத்த சாசன அமைச்சரை நோக்கி இன்று பாராளுமன்றில் கேள்வியெழுப்பியுள்ளார். மேலும், அந்த விகாரை  கட்டப்பட்டுள்ள இடத்தில் 20 பரப்பு காணிகளுக்கான உரிமையாளர்கள் விகாரையை அகற்றி தங்கள்  நிலங்களை தங்களிடம் கையளிக்குமாறு நீண்ட காலமாக  போராட்டங்களை நடத்தி வருவதை அமைச்சர் அறிவாராஒரு நோக்கத்திற்காக சுவீகரிக்கப்படும் காணி  இன்னொரு நோக்கத்திற்காக பயன்படுத்தபட  முடியாது என்பதனை அமைச்சர் அறிவாரா அந்த காணி விகாரை அமைப்பதற்கு உபயோகிக்கப்படவில்லையாயின் அது சட்டத்திற்கு முரணான செயல் என்பதனை அமைச்சர் ஏற்றுக்கொள்வாராபோராடிவரும் காணி உரிமையாளர்களுக்கு அரசின் தீர்வு என்ன என்பதனை அமைச்சர் அறியத்தருவாரா என கேள்வியெழுப்பியிருந்தார்.இதற்குப் பதிலளிப்பதற்கு காணியமைச்சு உட்பட பல்வேறு இடங்களில் இதற்கான பதிலை கேட்க வேண்டி இருக்கிறது. இதற்காக நான் கால அவகாசம் கேட்கிறேன் என புத்த சாசன அமைச்சர் ஹனிதும சுனில் செனவி பதிலளித்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement