• May 18 2024

குன்றும் குழியுமாக காணப்படும் கிராஞ்சி வீதி..! கண்டுகொள்ளாத அரச அதிகாரிகள்: அரசிடம் முறையிடத் தயாராகும் மக்கள்!

Sharmi / Jan 25th 2023, 1:46 pm
image

Advertisement

கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலகத்திற்குட்பட்ட யாழ்ப்பாணம் மன்னார் பிரதான வீதி பல்லவராஜன் கட்டிலிருந்து உள்ளக வீதி வளைப்பாடு, கிராஞ்சி போன்ற கிராமங்களிற்கு செல்கின்ற பாதையானது குன்றும் குழியுமாக காணப்பட்டு  வருகின்றது.

இந்த பாதையினை பல வருடங்களாக புனரமைப்பதாக அரச அதிகரிகள் கூறி வந்த போதிலும், இது வரை திருத்தப்படவில்லை. பாடசாலைக்கு செல்கின்ற மாணவர்கள், தொழிலிற்காக  செல்வோர் மற்றும் பிரதான நகரங்களோடு இணைய செல்வோரும் இப்பாதையூடா செல்லமுடியாது பெரும் சிரமங்களை சந்திக்கின்றனர். 



அத்தோடு, மீன் வண்டிகள் பொருட்கள் கொண்டு வரும் வாகனங்களும் வந்து செல்வதில் சிரமமாவதால் பொருட்களை மக்கள் விலை கொடுத்து வாங்குவதில் இன்னல் அடைகின்றனர். 

அதேவேளை  யாழ்ப்பாணம் ,மன்னார் ஆகிய நகரங்களிற்கு செல்வதாயினும் முச்சகக்கரவண்டிகளிற்கு அதிக பணம் செலவழித்து செல்ல வேண்டிய நிலமையாகவுள்ளது. 

கர்ப்பிணி தாய்மார்களை இந்த பாதையிலே வைத்தியசாலைகளிற்கு அழைத்து செல்கின்ற போது பல சிரமங்களை சந்திப்பதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இந்த பாதையினை புனரமைத்தது தருமாறு பல மகஜர்கள்  கையளிக்கப்பட்ட போதும் குறிப்பாக மீனவ அமைப்புகள்,சிவில் அமைப்புகள், மகளிரமைப்புக்கள், இணைந்து மகஜர்களை கையளித்து போராட்டங்களை நடத்திய பொழுதும் இதுவரை இந்த பிரைச்சினைக்கு சாதக தீர்வினை வழங்க அரச அதிகாரிகள் எந்தவித முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை.

பாதையினை சீர்செய்து தருமாறு கூறி 12 கிலோமீட்டர் தூரத்திலிருக்கும் கிராம மக்கள் பல்லவராஜன் கட்டிலே கடந்த வருடம் போராட்டம் ஒன்றை முன்னெடுத்த பொழுது அரசாங்க அதிபரின் பிரதிநிதி திட்டமிடல் பணிப்பாளர் வருகை தந்து வெகுசீக்கிரமாக இந்த வீதியினை சீர்திருத்தி தருவதாக வாக்களித்த போதும் இது வரை புனரமைக்கப்படவில்லை. 

குறிப்பாக போராட்டத்திற்கு பின்னர் கரும் கற்கள் கொண்டு வந்து இறக்க பட்ட போதும் பாதையினை புனரமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை.

தொடர்சியாக பெண்கள் அமைப்புகள் குறிப்பாக அரும்பு பெண்கள் அமைப்பு பல மகஜர்களை காளியளித்து, கலந்துரையாடல்களினை மேற்கொண்ட நிலையிலும் தீர்வினை வழங்க அரச அதிகாரிகள் முன்வரவில்லை. 

இவ்வாறான நிலைமைகளினை கருத்திற்கொண்டு பாதையினை புனரமைத்து தருமாறு, வளைப்பாடு கிராஞ்சி  மக்கள் அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.




குன்றும் குழியுமாக காணப்படும் கிராஞ்சி வீதி. கண்டுகொள்ளாத அரச அதிகாரிகள்: அரசிடம் முறையிடத் தயாராகும் மக்கள் கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலகத்திற்குட்பட்ட யாழ்ப்பாணம் மன்னார் பிரதான வீதி பல்லவராஜன் கட்டிலிருந்து உள்ளக வீதி வளைப்பாடு, கிராஞ்சி போன்ற கிராமங்களிற்கு செல்கின்ற பாதையானது குன்றும் குழியுமாக காணப்பட்டு  வருகின்றது.இந்த பாதையினை பல வருடங்களாக புனரமைப்பதாக அரச அதிகரிகள் கூறி வந்த போதிலும், இது வரை திருத்தப்படவில்லை. பாடசாலைக்கு செல்கின்ற மாணவர்கள், தொழிலிற்காக  செல்வோர் மற்றும் பிரதான நகரங்களோடு இணைய செல்வோரும் இப்பாதையூடா செல்லமுடியாது பெரும் சிரமங்களை சந்திக்கின்றனர். அத்தோடு, மீன் வண்டிகள் பொருட்கள் கொண்டு வரும் வாகனங்களும் வந்து செல்வதில் சிரமமாவதால் பொருட்களை மக்கள் விலை கொடுத்து வாங்குவதில் இன்னல் அடைகின்றனர். அதேவேளை  யாழ்ப்பாணம் ,மன்னார் ஆகிய நகரங்களிற்கு செல்வதாயினும் முச்சகக்கரவண்டிகளிற்கு அதிக பணம் செலவழித்து செல்ல வேண்டிய நிலமையாகவுள்ளது. கர்ப்பிணி தாய்மார்களை இந்த பாதையிலே வைத்தியசாலைகளிற்கு அழைத்து செல்கின்ற போது பல சிரமங்களை சந்திப்பதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.இந்த பாதையினை புனரமைத்தது தருமாறு பல மகஜர்கள்  கையளிக்கப்பட்ட போதும் குறிப்பாக மீனவ அமைப்புகள்,சிவில் அமைப்புகள், மகளிரமைப்புக்கள், இணைந்து மகஜர்களை கையளித்து போராட்டங்களை நடத்திய பொழுதும் இதுவரை இந்த பிரைச்சினைக்கு சாதக தீர்வினை வழங்க அரச அதிகாரிகள் எந்தவித முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை.பாதையினை சீர்செய்து தருமாறு கூறி 12 கிலோமீட்டர் தூரத்திலிருக்கும் கிராம மக்கள் பல்லவராஜன் கட்டிலே கடந்த வருடம் போராட்டம் ஒன்றை முன்னெடுத்த பொழுது அரசாங்க அதிபரின் பிரதிநிதி திட்டமிடல் பணிப்பாளர் வருகை தந்து வெகுசீக்கிரமாக இந்த வீதியினை சீர்திருத்தி தருவதாக வாக்களித்த போதும் இது வரை புனரமைக்கப்படவில்லை. குறிப்பாக போராட்டத்திற்கு பின்னர் கரும் கற்கள் கொண்டு வந்து இறக்க பட்ட போதும் பாதையினை புனரமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை.தொடர்சியாக பெண்கள் அமைப்புகள் குறிப்பாக அரும்பு பெண்கள் அமைப்பு பல மகஜர்களை காளியளித்து, கலந்துரையாடல்களினை மேற்கொண்ட நிலையிலும் தீர்வினை வழங்க அரச அதிகாரிகள் முன்வரவில்லை. இவ்வாறான நிலைமைகளினை கருத்திற்கொண்டு பாதையினை புனரமைத்து தருமாறு, வளைப்பாடு கிராஞ்சி  மக்கள் அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement