• Sep 19 2025

மத்தியஸ்த சபைகளை பலப்படுத்தி நீதிமன்றங்களில் தேங்கியுள்ள வழக்குகளை குறைக்க நடவடிக்கை

Chithra / Sep 18th 2025, 8:39 am
image


சமத்த மண்டல எனப்படும், மத்தியஸ்த சபைகளை பலப்படுத்தி நீதிமன்றங்களில் தேங்கியுள்ள வழக்குகளை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். 

மத்தியஸ்த சபை தொடர்பில், நடத்தப்பட்ட நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டார். 

அத்துடன், 16 மாவட்டங்களில் காணி பிரச்சினைகளுக்கான விசேட மத்தியஸ்த சபைகளும் நிறுவப்பட்டுள்ளன. 

நீதிமன்றங்களுக்கு பரிந்துரைக்கப்படும் நிதி சார்ந்த பிரச்சினைகள் தொடர்பான வழக்குகளை குறைப்பதற்கு, விசேட மத்தியஸ்த சபைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. 

அதன் முதற்கட்டமாக, கொழும்பு, கம்பஹா, அநுராதபுரம், பொலன்னறுவை, கண்டி மற்றும் மொனராகலை ஆகிய ஆறு மாவட்டங்களில் நிதி பிரச்சினை தொடர்பில் விசேட மத்தியஸ்த சபைகள் நிறுவப்பட்டுள்ளன. 

இந்த நிலையில், மத்தியஸ்த செயல்முறையை வலுப்படுத்துவதன் ஊடாக, நீதிமன்றங்களில் குவிந்துள்ள, இரண்டு இலட்சம் வழக்குகளை ஒரு வருடத்தில் குறைக்க முடியும் என நீதி அமைச்சர் தெரிவித்துள்ளார். 


மத்தியஸ்த சபைகளை பலப்படுத்தி நீதிமன்றங்களில் தேங்கியுள்ள வழக்குகளை குறைக்க நடவடிக்கை சமத்த மண்டல எனப்படும், மத்தியஸ்த சபைகளை பலப்படுத்தி நீதிமன்றங்களில் தேங்கியுள்ள வழக்குகளை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். மத்தியஸ்த சபை தொடர்பில், நடத்தப்பட்ட நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டார். அத்துடன், 16 மாவட்டங்களில் காணி பிரச்சினைகளுக்கான விசேட மத்தியஸ்த சபைகளும் நிறுவப்பட்டுள்ளன. நீதிமன்றங்களுக்கு பரிந்துரைக்கப்படும் நிதி சார்ந்த பிரச்சினைகள் தொடர்பான வழக்குகளை குறைப்பதற்கு, விசேட மத்தியஸ்த சபைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அதன் முதற்கட்டமாக, கொழும்பு, கம்பஹா, அநுராதபுரம், பொலன்னறுவை, கண்டி மற்றும் மொனராகலை ஆகிய ஆறு மாவட்டங்களில் நிதி பிரச்சினை தொடர்பில் விசேட மத்தியஸ்த சபைகள் நிறுவப்பட்டுள்ளன. இந்த நிலையில், மத்தியஸ்த செயல்முறையை வலுப்படுத்துவதன் ஊடாக, நீதிமன்றங்களில் குவிந்துள்ள, இரண்டு இலட்சம் வழக்குகளை ஒரு வருடத்தில் குறைக்க முடியும் என நீதி அமைச்சர் தெரிவித்துள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement