T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் வெற்றியீட்டும் அணிகளுக்காக வழங்கப்படவுள்ள பணப் பரிசு தொகையை சர்வதேச கிரிக்கெட் பேரவை இன்று (03) அறிவித்தது.
இதன்படி, இம்முறை T20 உலகக் கிண்ணத்தை கைப்பற்றும் அணிக்கு 2.45 மில்லியன் அமெரிக்க டொலரை பரிசாக வழங்க சர்வதேச கிரிக்கெட் பேரவை தீர்மானித்துள்ளது.
உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இரண்டாவது இடத்தை கைப்பற்றும் அணிக்கு 1.28 மில்லியன் அமெரிக்க டொலரை பரிசாக வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் அரையிறுதி போட்டிக்கு தெரிவாகி, தோல்வி அடையும் அணிகளுக்கு 787,500 அமெரிக்க டொலரை வழங்க சர்வதேச கிரிக்கெட் பேரவை தீர்மானித்துள்ளது.
சர்வதேச கிரிக்கெட் பேரவையினால், T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்காக 11.25 மில்லியன் அமெரிக்க டொலர் ஒதுக்கப்பட்டுள்ளது.
இருபதுக்கு இருபது உலகக் கிண்ணப் போட்டிக்காக, சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் இதுவரை ஒதுக்கப்பட்ட அதிகளவான தொகை இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - அதிகளவான பரிசு தொகையை அறிவிப்பு T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் வெற்றியீட்டும் அணிகளுக்காக வழங்கப்படவுள்ள பணப் பரிசு தொகையை சர்வதேச கிரிக்கெட் பேரவை இன்று (03) அறிவித்தது.இதன்படி, இம்முறை T20 உலகக் கிண்ணத்தை கைப்பற்றும் அணிக்கு 2.45 மில்லியன் அமெரிக்க டொலரை பரிசாக வழங்க சர்வதேச கிரிக்கெட் பேரவை தீர்மானித்துள்ளது.உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இரண்டாவது இடத்தை கைப்பற்றும் அணிக்கு 1.28 மில்லியன் அமெரிக்க டொலரை பரிசாக வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் அரையிறுதி போட்டிக்கு தெரிவாகி, தோல்வி அடையும் அணிகளுக்கு 787,500 அமெரிக்க டொலரை வழங்க சர்வதேச கிரிக்கெட் பேரவை தீர்மானித்துள்ளது.சர்வதேச கிரிக்கெட் பேரவையினால், T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்காக 11.25 மில்லியன் அமெரிக்க டொலர் ஒதுக்கப்பட்டுள்ளது.இருபதுக்கு இருபது உலகக் கிண்ணப் போட்டிக்காக, சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் இதுவரை ஒதுக்கப்பட்ட அதிகளவான தொகை இதுவென்பது குறிப்பிடத்தக்கது.