• May 06 2024

சர்வதேச விருதை வென்ற தமிழக பெண்: எதற்கு தெரியுமா?

Sharmi / Dec 11th 2022, 10:53 pm
image

Advertisement

திருமணம் ஆகி குழந்தைகளுக்கு தாயான பெண்கள் அழகு துறையில் சாதிக்க முடியுமா? என்ற கேள்வி பலருக்கு எழுவது இயல்புதான்.

ஆனால்,  அதில் சாதிக்க முடியும் என்பதற்கு சிறந்த  உதாரணமாக திகழ்கிறார்இ பிளாரன்ஸ் ஹெலன் நளினி. திருமணமாகி இரு பெண்களுக்கு தாயான பிளாரன்ஸ் ஹெலன் நளினி இன்றைய தினம்  சர்வதேச அழகி பட்டத்தை வென்றுள்ளார். 

சாதிப்பதற்கு வானமே எல்லை என்பதை போல் பிளாரன்ஸ் ஹெலன் நளினியின் சாதனை பயணம் நீண்டு கொண்டே செல்கிறது. சாதாரண நடுத்தர குடும்பத்தில் கோவையில் பிறந்த பிளாரன்ஸ் ஹெலன் நளினி இன்றைய தினம்  தனது சாதனைகளால் இமாலய சிகரத்தின் அளவுக்கு உயர்ந்து நிற்கிறார்.

வறுமை துயரத்தினால் இவரது பயணம் என்றுமே நின்றது இல்லை. மனநல சிகிச்சை நிபுணர், தொழில் முனைவோர், எழுத்தாளர், மொழி பயிற்றுனர், யோகா பயிற்சியாளர் என பன்முக திறமையால் ஆளுமை கொண்ட  பிளாரன்ஸ் ஹெலன் நளினியின் சாதனை பயணம் கடல் கடந்தும் இந்தியாவின் பெயரை உச்சரிக்க வைத்துள்ளது. 

கடந்தாண்டு அமெரிக்க-இந்திய கூட்டு முயற்சியால் நடைபெற்ற 'மிஸஸ் இண்டர்நேஷனல் வேர்ல்ட் கிளாசிக்' அழகிப் போட்டியில் பிளாரன்ஸ் ஹெலன் நளினி பங்கேற்றார். மொத்தமாக 3 ஆயிரம் பேர் பங்கேற்ற போட்டியில் இறுதியாக 52 பேர் தேர்வு செய்யப்பட்டனர். 

தமிழகத்தில் இருந்து தேர்வானது பிளாரன்ஸ் ஹெலன் நளினி மட்டுமே. மும்பையில் நடைபெற்ற இறுதிப் போட்டியில்  2021ஆம் ஆண்டுக்கான 'மிஸஸ் இண்டர்நேஷனல் வேர்ல்ட் கிளாசிக்' பட்டத்தை அவர் வென்றார்.

அதேபோல், 'கிளாமரஸ் அச்சீவர்' என்ற துணைப் பிரிவிலும் பட்டத்தை வென்று அசத்தினார்.  இதோடு பிளாரன்ஸ் ஹெலன் நளினியின் வெற்றி நின்று விடவில்லை. தனது திறமையை உலமே அறிந்திட கடல் கடந்து பயணித்தமை சிறப்பான விடயமாகும்.

சர்வதேச விருதை வென்ற தமிழக பெண்: எதற்கு தெரியுமா திருமணம் ஆகி குழந்தைகளுக்கு தாயான பெண்கள் அழகு துறையில் சாதிக்க முடியுமா என்ற கேள்வி பலருக்கு எழுவது இயல்புதான். ஆனால்,  அதில் சாதிக்க முடியும் என்பதற்கு சிறந்த  உதாரணமாக திகழ்கிறார்இ பிளாரன்ஸ் ஹெலன் நளினி. திருமணமாகி இரு பெண்களுக்கு தாயான பிளாரன்ஸ் ஹெலன் நளினி இன்றைய தினம்  சர்வதேச அழகி பட்டத்தை வென்றுள்ளார். சாதிப்பதற்கு வானமே எல்லை என்பதை போல் பிளாரன்ஸ் ஹெலன் நளினியின் சாதனை பயணம் நீண்டு கொண்டே செல்கிறது. சாதாரண நடுத்தர குடும்பத்தில் கோவையில் பிறந்த பிளாரன்ஸ் ஹெலன் நளினி இன்றைய தினம்  தனது சாதனைகளால் இமாலய சிகரத்தின் அளவுக்கு உயர்ந்து நிற்கிறார்.வறுமை துயரத்தினால் இவரது பயணம் என்றுமே நின்றது இல்லை. மனநல சிகிச்சை நிபுணர், தொழில் முனைவோர், எழுத்தாளர், மொழி பயிற்றுனர், யோகா பயிற்சியாளர் என பன்முக திறமையால் ஆளுமை கொண்ட  பிளாரன்ஸ் ஹெலன் நளினியின் சாதனை பயணம் கடல் கடந்தும் இந்தியாவின் பெயரை உச்சரிக்க வைத்துள்ளது. கடந்தாண்டு அமெரிக்க-இந்திய கூட்டு முயற்சியால் நடைபெற்ற 'மிஸஸ் இண்டர்நேஷனல் வேர்ல்ட் கிளாசிக்' அழகிப் போட்டியில் பிளாரன்ஸ் ஹெலன் நளினி பங்கேற்றார். மொத்தமாக 3 ஆயிரம் பேர் பங்கேற்ற போட்டியில் இறுதியாக 52 பேர் தேர்வு செய்யப்பட்டனர். தமிழகத்தில் இருந்து தேர்வானது பிளாரன்ஸ் ஹெலன் நளினி மட்டுமே. மும்பையில் நடைபெற்ற இறுதிப் போட்டியில்  2021ஆம் ஆண்டுக்கான 'மிஸஸ் இண்டர்நேஷனல் வேர்ல்ட் கிளாசிக்' பட்டத்தை அவர் வென்றார். அதேபோல், 'கிளாமரஸ் அச்சீவர்' என்ற துணைப் பிரிவிலும் பட்டத்தை வென்று அசத்தினார்.  இதோடு பிளாரன்ஸ் ஹெலன் நளினியின் வெற்றி நின்று விடவில்லை. தனது திறமையை உலமே அறிந்திட கடல் கடந்து பயணித்தமை சிறப்பான விடயமாகும்.

Advertisement

Advertisement

Advertisement