• May 18 2024

பாலஸ்தீனருக்கு ஆதரவாக தமிழர் குரல் கொடுக்க வேண்டும் - அருந்தவபாலன் தெரிவிப்பு...!samugamedia

Anaath / Oct 14th 2023, 10:13 am
image

Advertisement

கமாஸ் இயக்கத்தின் தாக்குத்தலை  தொடர்ந்து இஸ்ரேல்  தொடுத்துள்ள போர்  நடவடிக்கையானது காசாவில் மிக குறுகிய இடப்பரப்பில்  வாழ்ந்து வரும் இலட்சக்கணக்கான அப்பாவி மக்களின் பேரழிவுக்கும் வழிவகுக்கிறது. பாலஸ்தீன மக்களின் வலிகளை  ஈழத் தமிழர்களாகிய எம்மால் இலகுவாக புரிந்து கொள்ள முடியும். அவர்களின் உரிமைகளுக்காக ஆதரவை தெரிவிக்க வேண்டியது எமது  கடமை ஆகும் என அரசியல் சமூக செயற்பாட்டாளரான அருந்தவபாலன் தெரிவித்துள்ளார். 

குறித்த விடயம் தொடர்பில்  அவர் மேலும் தெரிவித்ததாவது,  தமது வாழ்விடங்களை இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்குள் பறி  கொடுத்து அகதிகளாகவும் இஸ்ரேலின் அடக்குமுறைக்குள்ளும்  பாலஸ்தீன மக்கள் வாழ்ந்து வருகின்றனர். 

ஐ.நா.வின் தீர்மானங்களையும் சர்வதேச மட்டங்களையும் தொடர்ந்து புறக்கணித்து  வருவதுடன் பாலஸ்தீனத்தை முழுமையாக ஆக்கிரமிக்கும் நோக்கிலேயே செயற்பட்டு வருகிறது காசாவை முழுமையாக துடைத்தெறிவதற்காக  திட்டமிட்ட திட்ட நடவடிக்கைகளை இஸ்ரேலின்  படைகள் களம் இறங்கியுள்ளன

இது பெரும் மனிதப்பேரவலத்தை  மத்திய கிழக்கில்  தோற்றுவிக்கப் போகின்றது.  இந்த  தாக்குதலை எந்த தரப்பாலும் ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

பாலஸ்தீனருக்கு ஆதரவாக தமிழர் குரல் கொடுக்க வேண்டும் - அருந்தவபாலன் தெரிவிப்பு.samugamedia கமாஸ் இயக்கத்தின் தாக்குத்தலை  தொடர்ந்து இஸ்ரேல்  தொடுத்துள்ள போர்  நடவடிக்கையானது காசாவில் மிக குறுகிய இடப்பரப்பில்  வாழ்ந்து வரும் இலட்சக்கணக்கான அப்பாவி மக்களின் பேரழிவுக்கும் வழிவகுக்கிறது. பாலஸ்தீன மக்களின் வலிகளை  ஈழத் தமிழர்களாகிய எம்மால் இலகுவாக புரிந்து கொள்ள முடியும். அவர்களின் உரிமைகளுக்காக ஆதரவை தெரிவிக்க வேண்டியது எமது  கடமை ஆகும் என அரசியல் சமூக செயற்பாட்டாளரான அருந்தவபாலன் தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில்  அவர் மேலும் தெரிவித்ததாவது,  தமது வாழ்விடங்களை இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்குள் பறி  கொடுத்து அகதிகளாகவும் இஸ்ரேலின் அடக்குமுறைக்குள்ளும்  பாலஸ்தீன மக்கள் வாழ்ந்து வருகின்றனர். ஐ.நா.வின் தீர்மானங்களையும் சர்வதேச மட்டங்களையும் தொடர்ந்து புறக்கணித்து  வருவதுடன் பாலஸ்தீனத்தை முழுமையாக ஆக்கிரமிக்கும் நோக்கிலேயே செயற்பட்டு வருகிறது காசாவை முழுமையாக துடைத்தெறிவதற்காக  திட்டமிட்ட திட்ட நடவடிக்கைகளை இஸ்ரேலின்  படைகள் களம் இறங்கியுள்ளனஇது பெரும் மனிதப்பேரவலத்தை  மத்திய கிழக்கில்  தோற்றுவிக்கப் போகின்றது.  இந்த  தாக்குதலை எந்த தரப்பாலும் ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement