• May 04 2024

நாக்கு அறுவை சிகிச்சைக்கு சென்ற சிறுவன்..!மர்ம உறுப்பின் தோலை நீக்கிய வைத்தியர்கள்..!samugammedia

Sharmi / Jun 27th 2023, 11:04 am
image

Advertisement

நாக்கு அறுவை சிகிச்சைக்காக சென்ற சிறுவனின் மர்ம உறுப்பின் தோலினை வைத்தியர்கள் அகற்றிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம், உத்தர பிரதேச மாநிலம் பெரேலியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் இடம்பெற்றுள்ளது.

குறித்த மருத்துவமனையில்,  இரண்டரை வயது சிறுவன் ஒருவன் நாக்கில் அறுவை சிகிச்சை செய்வதற்காக அனுமதிக்கப்பட்டுள்ளான்.

ஆனால், மருத்துவர்கள் தவறுதலாக சிறுவனின் மர்ம உறுப்பினர் தோல் பகுதியை (Circumcision) நீக்கியதால் அந்த சிறுவனின் பெற்றோரும் உறவினரும்  அதிர்ச்சியடைந்துள்ளனர்.
 
இந்த விடயம் தொடர்பாக, சிறுவனின்  உறவினர்கள் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

அத்துடன்,  இந்து அமைப்பினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் செய்தமையால்  இந்த விடயம் எல்லா இடமும் பரவியுள்ளது.

இந்நிலையில், இந்த சம்பவம் சுகாதாரத்துறையை கையில் வைத்திருக்கும் துணை முதலமைச்சர் பிரஜேஷ் பதாக்கினை சென்றடைந்துள்ளது.

அதையடுத்து அவர்,  உடனடியாக பெரேலி தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் பல்பீர் சிங்கை தொடர்பு கொண்டு  இது தொடர்பாக உடனடியாக விசாரணை நடத்துமாறு  உத்தரவிட்டுள்ளார்.

அந்த அடிப்படையில், உடனடியாக டாக்டர் பல்பீர் சிங் தலைமையிலான குழு மருத்துவமனைக்கு சென்று அங்கு பணிபுரியும் ஸ்டாஃப்களிடமும், அந்த சிறுவனின் உறவினர்களிடமும் விசாரணை நடத்தியுள்ளது.

அதன் பின்னர், மருத்துவமனையின் லைசென்ஸை தற்காலிகமாக ரத்து செய்வதாக உத்தரவிடப்பட்டுள்ளது.

நாக்கு அறுவை சிகிச்சைக்கு சென்ற சிறுவன்.மர்ம உறுப்பின் தோலை நீக்கிய வைத்தியர்கள்.samugammedia நாக்கு அறுவை சிகிச்சைக்காக சென்ற சிறுவனின் மர்ம உறுப்பின் தோலினை வைத்தியர்கள் அகற்றிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம், உத்தர பிரதேச மாநிலம் பெரேலியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் இடம்பெற்றுள்ளது. குறித்த மருத்துவமனையில்,  இரண்டரை வயது சிறுவன் ஒருவன் நாக்கில் அறுவை சிகிச்சை செய்வதற்காக அனுமதிக்கப்பட்டுள்ளான். ஆனால், மருத்துவர்கள் தவறுதலாக சிறுவனின் மர்ம உறுப்பினர் தோல் பகுதியை (Circumcision) நீக்கியதால் அந்த சிறுவனின் பெற்றோரும் உறவினரும்  அதிர்ச்சியடைந்துள்ளனர்.  இந்த விடயம் தொடர்பாக, சிறுவனின்  உறவினர்கள் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர். அத்துடன்,  இந்து அமைப்பினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் செய்தமையால்  இந்த விடயம் எல்லா இடமும் பரவியுள்ளது. இந்நிலையில், இந்த சம்பவம் சுகாதாரத்துறையை கையில் வைத்திருக்கும் துணை முதலமைச்சர் பிரஜேஷ் பதாக்கினை சென்றடைந்துள்ளது. அதையடுத்து அவர்,  உடனடியாக பெரேலி தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் பல்பீர் சிங்கை தொடர்பு கொண்டு  இது தொடர்பாக உடனடியாக விசாரணை நடத்துமாறு  உத்தரவிட்டுள்ளார். அந்த அடிப்படையில், உடனடியாக டாக்டர் பல்பீர் சிங் தலைமையிலான குழு மருத்துவமனைக்கு சென்று அங்கு பணிபுரியும் ஸ்டாஃப்களிடமும், அந்த சிறுவனின் உறவினர்களிடமும் விசாரணை நடத்தியுள்ளது. அதன் பின்னர், மருத்துவமனையின் லைசென்ஸை தற்காலிகமாக ரத்து செய்வதாக உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement