• May 05 2024

ஊடகங்களைக் கட்டுப்படுத்தும் சட்டமூலம்..! தொலைக்காட்சிகளை கட்டுப்படுத்துவதையே பிரதானமாக கொண்டுள்ளது..!samugammedia

Sharmi / Jun 16th 2023, 12:07 pm
image

Advertisement

அரச நிறுவனத்தை தனியார் நிறுவனமாக மாற்றுவதன் ஊடாக  இலங்கையின் பொருளாதார நிலைமைகளைப் பின்னடையச் செய்வதற்கான நிலை உருவாகும் என பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் குறிப்பிடுகையில்,

அரச நிறுவனத்தை தனியார் நிறுவனமாக மாற்றுவதன் மூலம் இலங்கையின் பொருளாதார நிலைமைகளைப் பின்னடையச் செய்யக் கூடிய நிலை உருவாகலாம். அரசாங்கத்தின் சொத்துக்கள் விற்கப்படுதலானது தனிப்பட்ட ஒருவரைக் குறிவைத்து மேற்கொள்ளும் செயற்பாடாகவே காணப்படுகின்றது.

அதனால், நாட்டிற்கு எந்த வித நன்மையும் கிடைக்காது என்பதுடன் மாறாக தனிநபர்களுக்கே நன்மையளிக்கும். ஆகவே இவ்வாறான செயற்பாடுகளை முழுமையாக எதிர்க்க வேண்டும்.

அரசியலுக்கு அப்பால் நாட்டை பொருளாதார ரீதியாக வளர்க்க வேண்டிய சூழலில்  பின்னடையச் செய்யும் செயற்பாடு எங்கு நடந்தாலும்  நாம் அதனை முழுமையாக எதிர்க்க வேண்டும்.

தற்பொழுது  பல விடயங்களில் ஆளுங்கட்சிக்குள் பல்வேறு கருத்துக்கள் காணப்படுவதுடன், ஹீலங்கா பொதுஜன பெரமுனாவிற்குள்ளே தனியாக ஜனாதிபதித்  தேர்தலை எதிர்கொள்வதற்கான எண்ணப்பாடொன்று தோன்றியுள்ளது.

இதைவிட வளர்ந்து வரும் தலைமைத்துவத்தை நோக்கி் செல்லும் நாமல், அரச சொத்துக்களை அழிக்கக் கூடாது என்று எண்ணக்கூடும். எது எவ்வாறாயினும் பொதுவுடமைகளைத் தனியுடமையாக்குவது பிழையான விடயமாகும்.

ஊடகங்களைக் கட்டுப்படுத்தும் சட்ட மூலமானது,  தொலைக்காட்சி ஊடக நிறுவனங்களை   கட்டுப்படுத்துவதையே பிரதானமாக கொண்டுள்ளது.  

கட்டுப்பாடு என்று கூறும் போதே ஊடக சுதந்திரத்தை கட்டுப்படுத்துவதற்கான முயற்சியாகவே நாம் கருதுகின்றோம்.

அது இன்னும் வரவில்லை என்றாலும் வருகின்ற பொழுது அதனை கடுமையாக எதிர்த்து தோற்கடிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.

இதே போன்று,  சந்திரிகா காலத்திலும் இவ்வாறானதொரு முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில் அது இல்லாது செய்யப்பட்டது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஊடகங்களைக் கட்டுப்படுத்தும் சட்டமூலம். தொலைக்காட்சிகளை கட்டுப்படுத்துவதையே பிரதானமாக கொண்டுள்ளது.samugammedia அரச நிறுவனத்தை தனியார் நிறுவனமாக மாற்றுவதன் ஊடாக  இலங்கையின் பொருளாதார நிலைமைகளைப் பின்னடையச் செய்வதற்கான நிலை உருவாகும் என பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் குறிப்பிடுகையில், அரச நிறுவனத்தை தனியார் நிறுவனமாக மாற்றுவதன் மூலம் இலங்கையின் பொருளாதார நிலைமைகளைப் பின்னடையச் செய்யக் கூடிய நிலை உருவாகலாம். அரசாங்கத்தின் சொத்துக்கள் விற்கப்படுதலானது தனிப்பட்ட ஒருவரைக் குறிவைத்து மேற்கொள்ளும் செயற்பாடாகவே காணப்படுகின்றது. அதனால், நாட்டிற்கு எந்த வித நன்மையும் கிடைக்காது என்பதுடன் மாறாக தனிநபர்களுக்கே நன்மையளிக்கும். ஆகவே இவ்வாறான செயற்பாடுகளை முழுமையாக எதிர்க்க வேண்டும். அரசியலுக்கு அப்பால் நாட்டை பொருளாதார ரீதியாக வளர்க்க வேண்டிய சூழலில்  பின்னடையச் செய்யும் செயற்பாடு எங்கு நடந்தாலும்  நாம் அதனை முழுமையாக எதிர்க்க வேண்டும்.தற்பொழுது  பல விடயங்களில் ஆளுங்கட்சிக்குள் பல்வேறு கருத்துக்கள் காணப்படுவதுடன், ஹீலங்கா பொதுஜன பெரமுனாவிற்குள்ளே தனியாக ஜனாதிபதித்  தேர்தலை எதிர்கொள்வதற்கான எண்ணப்பாடொன்று தோன்றியுள்ளது. இதைவிட வளர்ந்து வரும் தலைமைத்துவத்தை நோக்கி் செல்லும் நாமல், அரச சொத்துக்களை அழிக்கக் கூடாது என்று எண்ணக்கூடும். எது எவ்வாறாயினும் பொதுவுடமைகளைத் தனியுடமையாக்குவது பிழையான விடயமாகும். ஊடகங்களைக் கட்டுப்படுத்தும் சட்ட மூலமானது,  தொலைக்காட்சி ஊடக நிறுவனங்களை   கட்டுப்படுத்துவதையே பிரதானமாக கொண்டுள்ளது.  கட்டுப்பாடு என்று கூறும் போதே ஊடக சுதந்திரத்தை கட்டுப்படுத்துவதற்கான முயற்சியாகவே நாம் கருதுகின்றோம். அது இன்னும் வரவில்லை என்றாலும் வருகின்ற பொழுது அதனை கடுமையாக எதிர்த்து தோற்கடிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வோம். இதே போன்று,  சந்திரிகா காலத்திலும் இவ்வாறானதொரு முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில் அது இல்லாது செய்யப்பட்டது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement