• May 10 2024

பெருந்தொகை பணத்தை தவறவிட்ட நபர்; பேருந்து நடத்துநர் ஒருவரின் பாராட்டுக்குரிய செயல்! SamugamMedia

Chithra / Mar 5th 2023, 11:45 am
image

Advertisement

தனியார் பேருந்தின் நடத்துநர் ஒருவர், தமது பேருந்தில் தவறவிடப்பட்டிருந்த 40,000 ரூபா பணத்துடனான பணப்பையொன்றை, அதன் உரிமையாளரை கண்டுபிடித்து அவரிடம் ஒப்படைத்துள்ளார்.

கொழும்பில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்த தனியார் பேருந்தொன்றில் பணம் அடங்கிய பணப்பை நேற்று (4) பிற்பகல் 3.30 அளளவில் கொழும்பிலிருந்து ஹட்டன் நோக்கி பயணத்தை ஆரம்பித்த பேருந்தில் தவறவிடப்பட்டிருந்தது.

பேருந்தின் நடத்துனரான ஷாம் குமார் என்பவர் இன்று (05) காலை குறித்த பணப்பையை அதன் உரிமையாளரை கண்டுபிடித்து அவரிடம் ஒப்படைத்துள்ளார்.

காணாமல் போன பணப்பையை தவறவிட்ட பயணி, கொழும்பு பகுதியில் பணி முடிந்து வீடு திரும்பும்போது பணப்பையை தொலைத்துவிட்டதாகவும், அதில் 40000 ரூபா பணம் மற்றும் தேசிய அடையாள அட்டை என்பன இருந்ததாக தெரிவித்துள்ளார்.

காணாமல் போன பணப்பையை தமக்கு திருப்பிக் கொடுத்த நடத்துனருக்கு தமது நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் புஷ்பநாதன் கர்ணன் என்ற குறித்த பயணி தெரிவித்துள்ளார்.


பெருந்தொகை பணத்தை தவறவிட்ட நபர்; பேருந்து நடத்துநர் ஒருவரின் பாராட்டுக்குரிய செயல் SamugamMedia தனியார் பேருந்தின் நடத்துநர் ஒருவர், தமது பேருந்தில் தவறவிடப்பட்டிருந்த 40,000 ரூபா பணத்துடனான பணப்பையொன்றை, அதன் உரிமையாளரை கண்டுபிடித்து அவரிடம் ஒப்படைத்துள்ளார்.கொழும்பில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்த தனியார் பேருந்தொன்றில் பணம் அடங்கிய பணப்பை நேற்று (4) பிற்பகல் 3.30 அளளவில் கொழும்பிலிருந்து ஹட்டன் நோக்கி பயணத்தை ஆரம்பித்த பேருந்தில் தவறவிடப்பட்டிருந்தது.பேருந்தின் நடத்துனரான ஷாம் குமார் என்பவர் இன்று (05) காலை குறித்த பணப்பையை அதன் உரிமையாளரை கண்டுபிடித்து அவரிடம் ஒப்படைத்துள்ளார்.காணாமல் போன பணப்பையை தவறவிட்ட பயணி, கொழும்பு பகுதியில் பணி முடிந்து வீடு திரும்பும்போது பணப்பையை தொலைத்துவிட்டதாகவும், அதில் 40000 ரூபா பணம் மற்றும் தேசிய அடையாள அட்டை என்பன இருந்ததாக தெரிவித்துள்ளார்.காணாமல் போன பணப்பையை தமக்கு திருப்பிக் கொடுத்த நடத்துனருக்கு தமது நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் புஷ்பநாதன் கர்ணன் என்ற குறித்த பயணி தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement