• May 06 2024

அணி வகுப்பு ஒத்திகையில் மயங்கிய வீரர்கள்..! இளவரசர் கண் முன் சம்பவம்..! samugammedia

Chithra / Jun 11th 2023, 2:47 pm
image

Advertisement

கடுமையான வெயிலிலும் அணிவகுப்பிற்கான  இறுதி ஒத்திகையில் கலந்து கொண்ட வீரர்களிற்கு இளவரசர் வில்லியம் பாராட்டு தெரிவித்துள்ளார்.   

லண்டனில் இதுவரை இல்லாத அளவிற்கு வெயில் கொளுத்தும் நிலையில், வருடாந்திர ட்ரூப்பிங் தி கலர் அணிவகுப்பிற்கான இறுதி ஒத்திகை இடம்பெற்ற வேளை  மூன்று வீரர்கள் இளவரசர் வில்லியம் முன்பாக  மயங்கி விழுந்துள்ளனர். 

இந்த நிகழ்வு மன்னரின் உத்தியோகபூர்வ பிறந்தநாளைக் குறிக்கும் வகையில் வருடம் தோறும் ஜூன் மாதம்  நடத்தப்படும் வருடாந்திர இராணுவ அணிவகுப்பாகும்.ஜூன் 17 ஆம் திகதி  நடைபெறும் விழாவை மன்னர் மூன்றாம் சார்லஸ் மேற்பார்வையிடுவார்.


சனிக்கிழமை லண்டனில் வெப்பநிலை 30 C (86 F) ஆக இருந்த வேளையில் இராணுவ வீரர்கள் கம்பளி ஆடைகள் மற்றும் கரடி தோல் தொப்பிகளை அணிந்திருந்துள்ளனர். 

அதில் மயக்கமடைந்த ஒரு இராணுவ டிராம்போனிஸ்ட் மீண்டும் எழும்பிய போது சிறிது நேரத்தில் மருத்துவர்கள் அவருக்கு உதவி செய்ய விரைந்துள்ளனர். 

அத்துடன், ஹவுஸ்ஹோல்ட் பிரிவின் 1,400 ற்கும் அதிகமான  வீரர்கள் மற்றும் கிங்ஸ் ட்ரூப் ராயல் ஹார்ஸ் பீரங்கிகள் சனிக்கிழமை அணிவகுப்பில் பங்கேற்றுள்ளதுடன், வெல்ஷ் காவலர்களின் கெளரவ கர்னல் வில்லியம் மதிப்பாய்வும் செய்துள்ளார். 


இந்நிலையில், இளவரசர் வில்லியம் தனது  ட்வீட்டில், இன்று காலை கர்னல் மதிப்பாய்வில் பங்கேற்ற ஒவ்வொரு சிப்பாய்க்கும் ஒரு பெரிய நன்றிகள் என்றும், கடினமான சூழ்நிலையில் அனைவரும் நன்றாக வேலை செய்ததாகவும் தெரிவித்துள்ளார்

அணி வகுப்பு ஒத்திகையில் மயங்கிய வீரர்கள். இளவரசர் கண் முன் சம்பவம். samugammedia கடுமையான வெயிலிலும் அணிவகுப்பிற்கான  இறுதி ஒத்திகையில் கலந்து கொண்ட வீரர்களிற்கு இளவரசர் வில்லியம் பாராட்டு தெரிவித்துள்ளார்.   லண்டனில் இதுவரை இல்லாத அளவிற்கு வெயில் கொளுத்தும் நிலையில், வருடாந்திர ட்ரூப்பிங் தி கலர் அணிவகுப்பிற்கான இறுதி ஒத்திகை இடம்பெற்ற வேளை  மூன்று வீரர்கள் இளவரசர் வில்லியம் முன்பாக  மயங்கி விழுந்துள்ளனர். இந்த நிகழ்வு மன்னரின் உத்தியோகபூர்வ பிறந்தநாளைக் குறிக்கும் வகையில் வருடம் தோறும் ஜூன் மாதம்  நடத்தப்படும் வருடாந்திர இராணுவ அணிவகுப்பாகும்.ஜூன் 17 ஆம் திகதி  நடைபெறும் விழாவை மன்னர் மூன்றாம் சார்லஸ் மேற்பார்வையிடுவார்.சனிக்கிழமை லண்டனில் வெப்பநிலை 30 C (86 F) ஆக இருந்த வேளையில் இராணுவ வீரர்கள் கம்பளி ஆடைகள் மற்றும் கரடி தோல் தொப்பிகளை அணிந்திருந்துள்ளனர். அதில் மயக்கமடைந்த ஒரு இராணுவ டிராம்போனிஸ்ட் மீண்டும் எழும்பிய போது சிறிது நேரத்தில் மருத்துவர்கள் அவருக்கு உதவி செய்ய விரைந்துள்ளனர். அத்துடன், ஹவுஸ்ஹோல்ட் பிரிவின் 1,400 ற்கும் அதிகமான  வீரர்கள் மற்றும் கிங்ஸ் ட்ரூப் ராயல் ஹார்ஸ் பீரங்கிகள் சனிக்கிழமை அணிவகுப்பில் பங்கேற்றுள்ளதுடன், வெல்ஷ் காவலர்களின் கெளரவ கர்னல் வில்லியம் மதிப்பாய்வும் செய்துள்ளார். இந்நிலையில், இளவரசர் வில்லியம் தனது  ட்வீட்டில், இன்று காலை கர்னல் மதிப்பாய்வில் பங்கேற்ற ஒவ்வொரு சிப்பாய்க்கும் ஒரு பெரிய நன்றிகள் என்றும், கடினமான சூழ்நிலையில் அனைவரும் நன்றாக வேலை செய்ததாகவும் தெரிவித்துள்ளார்

Advertisement

Advertisement

Advertisement