• May 18 2024

கச்சதீவு திருவிழாவில் குறைபாடுகள் தாராளம்! இலங்கை படையினரின் ஆயுதங்கள் அச்சத்தை ஏற்படுத்தியதாக இந்தியர்கள் தெரிவிப்பு SamugamMedia

Chithra / Mar 5th 2023, 12:36 pm
image

Advertisement

வரலாற்று சிறப்புமிக்க கச்சதீவு உற்சவம் கடந்த 3, 4ஆம் திகதிகளில் இடம்பெற்றது. 

இதில் 2800 இலங்கை பக்தர்களும் 2100 இந்திய பக்தர்களும், வியாபாரிகள், உத்தியோகத்தர்கள் 200 பேர் என மொத்தமாக 5100 பேர் வருகை தந்தனர். 

கச்சதீவு பெருநாள் ஒழுங்கமைப்பு தொடர்பாக இந்திய மற்றும் இலங்கைப் பக்தர்களால் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

தமிழகத்திலிருந்து வருகை தந்த பக்தர்கள், தமக்கு வழங்கிய உணவு திருப்தியாக அமையவில்லை எனவும், ஏதோ உணவை வழங்க வேண்டும் என்பதற்காக வழங்கியமை போன்று அமைந்தது எனவும் குறிப்பிட்டனர்.

மலசலகூடமும் ஒழுங்காக இல்லை எனவும், இவ்வளவு பக்தர்கள் வருவார்கள் என்றால் அதற்குரிய ஏற்பாடுகளைச் செய்திருக்க வேண்டும் எனவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை இரவு 11 மணிக்கு பின்னர் குடிதண்ணீருக்குப் பற்றாக்குறை ஏற்பட்டது எனவும் அவர்கள் கவலை வெளியிட்டனர்.

மேலும், இதே விடயத்தை இலங்கைப் பக்தர்களும் சுட்டிக்காட்டினர்.

விசேட விருந்தினர்களுக்கு ஒருவாறாகவும் பக்தர்களுக்கு இன்னொரு வகையாகவும் பாகுபாடான கவனிப்பே கச்சதீவில் வழங்கப்பட்டது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

அடுத்த முறை யாத்திரிகர்களின் நலனை கருத்திற்கொண்டு சிறப்பாக முன்னெடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

மேலும் இலங்கை கடற்படையினரின் ஆயுதங்கள் தமக்கு அச்சத்தை தருவதாகவும் இந்திய பக்தர்கள் தெரிவித்தனர். 

கச்சதீவு திருவிழாவில் குறைபாடுகள் தாராளம் இலங்கை படையினரின் ஆயுதங்கள் அச்சத்தை ஏற்படுத்தியதாக இந்தியர்கள் தெரிவிப்பு SamugamMedia வரலாற்று சிறப்புமிக்க கச்சதீவு உற்சவம் கடந்த 3, 4ஆம் திகதிகளில் இடம்பெற்றது. இதில் 2800 இலங்கை பக்தர்களும் 2100 இந்திய பக்தர்களும், வியாபாரிகள், உத்தியோகத்தர்கள் 200 பேர் என மொத்தமாக 5100 பேர் வருகை தந்தனர். கச்சதீவு பெருநாள் ஒழுங்கமைப்பு தொடர்பாக இந்திய மற்றும் இலங்கைப் பக்தர்களால் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.தமிழகத்திலிருந்து வருகை தந்த பக்தர்கள், தமக்கு வழங்கிய உணவு திருப்தியாக அமையவில்லை எனவும், ஏதோ உணவை வழங்க வேண்டும் என்பதற்காக வழங்கியமை போன்று அமைந்தது எனவும் குறிப்பிட்டனர்.மலசலகூடமும் ஒழுங்காக இல்லை எனவும், இவ்வளவு பக்தர்கள் வருவார்கள் என்றால் அதற்குரிய ஏற்பாடுகளைச் செய்திருக்க வேண்டும் எனவும் அவர்கள் குறிப்பிட்டனர்.இவை எல்லாவற்றுக்கும் மேலாக நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை இரவு 11 மணிக்கு பின்னர் குடிதண்ணீருக்குப் பற்றாக்குறை ஏற்பட்டது எனவும் அவர்கள் கவலை வெளியிட்டனர்.மேலும், இதே விடயத்தை இலங்கைப் பக்தர்களும் சுட்டிக்காட்டினர்.விசேட விருந்தினர்களுக்கு ஒருவாறாகவும் பக்தர்களுக்கு இன்னொரு வகையாகவும் பாகுபாடான கவனிப்பே கச்சதீவில் வழங்கப்பட்டது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.அடுத்த முறை யாத்திரிகர்களின் நலனை கருத்திற்கொண்டு சிறப்பாக முன்னெடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.மேலும் இலங்கை கடற்படையினரின் ஆயுதங்கள் தமக்கு அச்சத்தை தருவதாகவும் இந்திய பக்தர்கள் தெரிவித்தனர். 

Advertisement

Advertisement

Advertisement