• May 18 2024

இலங்கையின் குரங்குகள் மீது ஆர்வம் காட்டும் பல நாடுகள்! samugammedia

Chithra / Oct 5th 2023, 2:50 pm
image

Advertisement


சீனாவைத் தவிர இன்னும் பல நாடுகள், தமக்கு விலங்கியல் பூங்காக்களுக்கு இலங்கையின் டோக் மக்காக் குரங்குகளை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அந்த நாடுகளில் உள்ள அந்தந்த தூதரகங்கள் ஊடாக இந்த கோரிக்கையை முன்வைக்குமாறு அரசாங்கம் தமக்கு அறிவித்துள்ளதாக அவர் நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக குரங்குகளை ஏற்றுமதி செய்வதற்கான கோரிக்கைகளை விலங்கு உரிமை அமைப்புகளும் ஆர்வலர்கள் சவால் செய்து மனு தாக்கல் செய்திருந்ததால் அவை நிறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குரங்குகள், காட்டுப்பன்றிகள் மற்றும் மயில்கள் போன்ற விலங்குகளால் ஆண்டுக்கு 20 பில்லியன் ரூபா இழப்பு ஏற்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

குரங்குகளின் ஏற்றுமதிக்கு எதிரான விலங்குகள் உரிமை அமைப்புகளுடன் பயிர் சேதத்தைத் தடுப்பதற்கான அவர்களின் முன்மொழிவுகள் குறித்து விவாதித்ததாக குறிப்பிட்ட அமைச்சர், அவர்கள் சாத்தியமான யோசனைகளை முன்வைக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் குரங்குகள் மீது ஆர்வம் காட்டும் பல நாடுகள் samugammedia சீனாவைத் தவிர இன்னும் பல நாடுகள், தமக்கு விலங்கியல் பூங்காக்களுக்கு இலங்கையின் டோக் மக்காக் குரங்குகளை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.அந்த நாடுகளில் உள்ள அந்தந்த தூதரகங்கள் ஊடாக இந்த கோரிக்கையை முன்வைக்குமாறு அரசாங்கம் தமக்கு அறிவித்துள்ளதாக அவர் நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளார்.முன்னதாக குரங்குகளை ஏற்றுமதி செய்வதற்கான கோரிக்கைகளை விலங்கு உரிமை அமைப்புகளும் ஆர்வலர்கள் சவால் செய்து மனு தாக்கல் செய்திருந்ததால் அவை நிறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.குரங்குகள், காட்டுப்பன்றிகள் மற்றும் மயில்கள் போன்ற விலங்குகளால் ஆண்டுக்கு 20 பில்லியன் ரூபா இழப்பு ஏற்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.குரங்குகளின் ஏற்றுமதிக்கு எதிரான விலங்குகள் உரிமை அமைப்புகளுடன் பயிர் சேதத்தைத் தடுப்பதற்கான அவர்களின் முன்மொழிவுகள் குறித்து விவாதித்ததாக குறிப்பிட்ட அமைச்சர், அவர்கள் சாத்தியமான யோசனைகளை முன்வைக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement