• May 05 2024

பேருந்துகளில் பயணிக்கும் பெண்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

Bus
Chithra / Apr 3rd 2024, 8:13 am
image

Advertisement

 

பண்டிகைக் காலங்களில் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை  அதிகரித்துள்ளதால் பொது போக்குவரத்து சேவையில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் சிறுவர் துஷ்பிரயோகங்களும் இடம்பெற்று வருவதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அதற்கமைய, பேருந்துகளில் பயணிக்கும் போது பெண்களை துஷ்பிரயோகம் செய்பவர்களை அடையாளம் காணும் வகையில், பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தால், விசேட பயிற்சி பெற்ற பொலிஸார் கொண்ட குழுவொன்றை களமிறக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களையும் மையப்படுத்தி இந்த விசேட நடவடிக்கை ஆரம்பிக்கும் நிகழ்வு நேற்று கொழும்வு, பெஸ்டீன் மாவத்தை பேருந்து நிலையத்தில் இருந்து ஆரம்பமானது.

குறுகிய பயணம் மற்றும் நெடுந்தூரப் பயணச் சேவைகளுக்குப் பயிற்சி பெற்ற பொலிஸ் பெண்கள் சிவில் உடையில் பொலிஸ் உத்தியோகத்தர்களுடன் பேருந்துகளில் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை ஆரம்பித்தனர்.

பேருந்துகளில் பயணிக்கும் பெண்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை  பண்டிகைக் காலங்களில் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை  அதிகரித்துள்ளதால் பொது போக்குவரத்து சேவையில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் சிறுவர் துஷ்பிரயோகங்களும் இடம்பெற்று வருவதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.அதற்கமைய, பேருந்துகளில் பயணிக்கும் போது பெண்களை துஷ்பிரயோகம் செய்பவர்களை அடையாளம் காணும் வகையில், பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தால், விசேட பயிற்சி பெற்ற பொலிஸார் கொண்ட குழுவொன்றை களமிறக்கப்பட்டுள்ளது.இலங்கையில் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களையும் மையப்படுத்தி இந்த விசேட நடவடிக்கை ஆரம்பிக்கும் நிகழ்வு நேற்று கொழும்வு, பெஸ்டீன் மாவத்தை பேருந்து நிலையத்தில் இருந்து ஆரம்பமானது.குறுகிய பயணம் மற்றும் நெடுந்தூரப் பயணச் சேவைகளுக்குப் பயிற்சி பெற்ற பொலிஸ் பெண்கள் சிவில் உடையில் பொலிஸ் உத்தியோகத்தர்களுடன் பேருந்துகளில் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை ஆரம்பித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement