• Apr 02 2025

புலிகளின் போருக்குப் பிறகு வெளிவந்த ஆயுதங்கள் சமூகத்தில் புழக்கத்தில்..! பாதுகாப்பு அமைச்சர் வெளியிட்ட தகவல்

Chithra / Jul 18th 2024, 3:11 pm
image

  நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களுக்கு யுத்தத்தின் பின்னரும் சமூகத்தில் துப்பாக்கிகள் புழக்கத்தில் இருப்பதே காரணம் என மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

பொது பாதுகாப்பு அமைச்சின் வளாகத்தில் இன்று (18) காலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நான் ஊடகங்களிடம் கேட்டுக் கொள்கிறேன். கிராமம் கிராமமாக நகரம் நகரமாக சென்று மக்களிடம் கேளுங்கள். 

பொதுமக்கள் முன்பு போல் போதைப்பொருளுக்கு அடிமையா என்று கேளுங்கள், போதைப்பொருள் விற்பனை செய்பவர்களுக்காக இன்னும் கடுமையாகச் செயல்படுவோம்.

அதுருகிரிய சம்பவத்தில் கைது செய்யப்பட வேண்டியவர்களில் பலரை கைது செய்துள்ளோம். இன்னும் இரண்டு பேர் பாக்கி என நினைக்கிறேன். 

எம்பிலிப்பிட்டியவில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் மற்றும் ரைடா ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

அம்பலாங்கொடை துப்பாக்கிச் சூட்டு நபர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். விடுதலைப் புலிகளின் போருக்குப் பிறகு வெளிவந்த ஆயுதங்கள் உலாவருவதாலேயே இதனை இன்னும் கட்டுப்படுத்த முடியாதுள்ளது. என்றார்.

புலிகளின் போருக்குப் பிறகு வெளிவந்த ஆயுதங்கள் சமூகத்தில் புழக்கத்தில். பாதுகாப்பு அமைச்சர் வெளியிட்ட தகவல்   நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களுக்கு யுத்தத்தின் பின்னரும் சமூகத்தில் துப்பாக்கிகள் புழக்கத்தில் இருப்பதே காரணம் என மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.பொது பாதுகாப்பு அமைச்சின் வளாகத்தில் இன்று (18) காலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.நான் ஊடகங்களிடம் கேட்டுக் கொள்கிறேன். கிராமம் கிராமமாக நகரம் நகரமாக சென்று மக்களிடம் கேளுங்கள். பொதுமக்கள் முன்பு போல் போதைப்பொருளுக்கு அடிமையா என்று கேளுங்கள், போதைப்பொருள் விற்பனை செய்பவர்களுக்காக இன்னும் கடுமையாகச் செயல்படுவோம்.அதுருகிரிய சம்பவத்தில் கைது செய்யப்பட வேண்டியவர்களில் பலரை கைது செய்துள்ளோம். இன்னும் இரண்டு பேர் பாக்கி என நினைக்கிறேன். எம்பிலிப்பிட்டியவில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் மற்றும் ரைடா ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அம்பலாங்கொடை துப்பாக்கிச் சூட்டு நபர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். விடுதலைப் புலிகளின் போருக்குப் பிறகு வெளிவந்த ஆயுதங்கள் உலாவருவதாலேயே இதனை இன்னும் கட்டுப்படுத்த முடியாதுள்ளது. என்றார்.

Advertisement

Advertisement

Advertisement