• May 18 2024

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு என்ன நடந்தது? இலங்கை அரசு தப்பிக்கவே முடியாது! - சம்பந்தன் எம்.பி. சுட்டிக்காட்டு

Chithra / Aug 31st 2023, 7:33 am
image

Advertisement

"வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு என்ன நடந்தது? இந்தக் கேள்விக்கு இலங்கை அரசு பதில் சொல்லியே ஆக வேண்டும். பொறுப்புக்கூறும் இந்த விடயத்தில் இருந்து இலங்கை அரசு தப்பிக்கவே முடியாது. இந்த விடயத்தில் ஐ.நா. உள்ளிட்ட சர்வதேச சமூகம், இலங்கை அரசை சும்மாவிடாது."

- இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எம்.பி. தெரிவித்தார்.

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் நேற்றாகும். இது தொடர்பில் கருத்துரைக்கும்போதே சம்பந்தன் எம்.பி. மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

"இறுதிப் போரில் சரணடைந்தவர்களுக்கு என்ன நடந்தது? இராணுவத்தினரிடம் உயிருடன் கையளிக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது? வடக்கிலும் கிழக்கிலும் கடத்தப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது? கைது செய்யப்பட்டு பலவந்தமாகக் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு என்ன நடந்தது? இந்தக் கேள்விகளுக்கு இலங்கை அரசு கட்டாயம் பதில் சொல்லியே ஆக வேண்டும்.

 காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு நீதி கிடைக்க நாம் தொடர்ந்தும் போராடுவோம்." - என்றார்.

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு என்ன நடந்தது இலங்கை அரசு தப்பிக்கவே முடியாது - சம்பந்தன் எம்.பி. சுட்டிக்காட்டு "வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு என்ன நடந்தது இந்தக் கேள்விக்கு இலங்கை அரசு பதில் சொல்லியே ஆக வேண்டும். பொறுப்புக்கூறும் இந்த விடயத்தில் இருந்து இலங்கை அரசு தப்பிக்கவே முடியாது. இந்த விடயத்தில் ஐ.நா. உள்ளிட்ட சர்வதேச சமூகம், இலங்கை அரசை சும்மாவிடாது."- இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எம்.பி. தெரிவித்தார்.சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் நேற்றாகும். இது தொடர்பில் கருத்துரைக்கும்போதே சம்பந்தன் எம்.பி. மேற்கண்டவாறு கூறினார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,"இறுதிப் போரில் சரணடைந்தவர்களுக்கு என்ன நடந்தது இராணுவத்தினரிடம் உயிருடன் கையளிக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது வடக்கிலும் கிழக்கிலும் கடத்தப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது கைது செய்யப்பட்டு பலவந்தமாகக் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு என்ன நடந்தது இந்தக் கேள்விகளுக்கு இலங்கை அரசு கட்டாயம் பதில் சொல்லியே ஆக வேண்டும். காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு நீதி கிடைக்க நாம் தொடர்ந்தும் போராடுவோம்." - என்றார்.

Advertisement

Advertisement

Advertisement