இலங்கையின் அடுத்த பிரதமர் ஊவா மாகாணத்தைச் சேர்ந்தவராக இருக்கக்கூடும் என முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
நேற்று பதுளையில் நடைபெற்ற 'ஏக்வா ஜெயகமு' நிகழ்வில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஊவா மாகாணத்தில் இருந்து ஒரு பிரதமரை நியமிக்க வேண்டும் என்றால், பதுளை மாவட்டத்தில் உள்ள 9 ஆசனங்களிலும் வெற்றி பெற்றால், அவரைப் பிரதமராக்கும் பொறுப்பை நானே ஏற்றுக்கொள்வேன் என கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவை நோக்கி ஹரின் தெரிவித்தார்.
2020 பாராளுமன்றத் தேர்தலில் பதுளை மாவட்ட விருப்பு வாக்கு பட்டியலில் நிமல் சிறிபால டி சில்வா 141, 901 வாக்குகளைப் பெற்று முதலிடம் பிடித்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் அடுத்த பிரதமர் யார் ஹரின் வெளியிட்ட தகவல் இலங்கையின் அடுத்த பிரதமர் ஊவா மாகாணத்தைச் சேர்ந்தவராக இருக்கக்கூடும் என முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.நேற்று பதுளையில் நடைபெற்ற 'ஏக்வா ஜெயகமு' நிகழ்வில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.ஊவா மாகாணத்தில் இருந்து ஒரு பிரதமரை நியமிக்க வேண்டும் என்றால், பதுளை மாவட்டத்தில் உள்ள 9 ஆசனங்களிலும் வெற்றி பெற்றால், அவரைப் பிரதமராக்கும் பொறுப்பை நானே ஏற்றுக்கொள்வேன் என கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவை நோக்கி ஹரின் தெரிவித்தார்.2020 பாராளுமன்றத் தேர்தலில் பதுளை மாவட்ட விருப்பு வாக்கு பட்டியலில் நிமல் சிறிபால டி சில்வா 141, 901 வாக்குகளைப் பெற்று முதலிடம் பிடித்தமை குறிப்பிடத்தக்கது.