• May 05 2024

வடக்கில் ஐக்கிய தேசியக் கட்சியை மீளக் கட்டியெழுப்புவதற்கான முகவராக விக்னேஸ்வரன்! கஜேந்திரன் எம்.பி பகிரங்க குற்றச்சாட்டு samugammedia

Chithra / Aug 18th 2023, 10:27 am
image

Advertisement

வடக்கு மாகாணத்தில் ஐக்கிய தேசியக் கட்சியை மீளக் கட்டியெழுப்புவதற்கான முகவராக தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் முயற்சிக்கின்றார் என செல்வராஜா கஜேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.

மாகாண ஆலோசனை குழு மற்றும் அதிகார பரவலாக்கல் குழு ஆகியன ஊடாக தமிழ் மக்களை ஏமாற்றி, ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் அதிபராக்குவதற்கு சி.வி.விக்னேஸ்வரன் மேற்கொள்ளும் ஏமாற்று நாடகம் இது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நேற்றுமாலை கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், 

அதிகாரப் பரவலாக்கல் குழு ஒன்று அமைக்கப்படவுள்ளதாகவும் மாகாண சபை ஆலோசனைக் குழுக்கள் அமைக்கப்படவுள்ளதாகவும் அதில் நாடாளுமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கியதாகவும், அதிலே வெற்றி பெறாத நாடாளுமன்ற உறுப்பினர்கள் அல்லாத கட்சிகள் கூட கலந்து கொள்ள முடியும் என ஜனாதிபதி தெரிவித்திருப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்திருக்கின்றார்.

13ஆவது திருத்தச் சட்டம் என்பது 36 ஆண்டுகளாக தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒரு விடயம். அந்த சட்டம் தமிழர்களின் விருப்புக்கு மாறா கொண்டு வந்து நடைமுறையில் உள்ள விடயம்.

நடைமுறையில் உள்ள ஒரு சட்டத்தை நடைமுறைப்படுத்தல் உன்ற பெயரிலே தமிழரசுக் கட்சி, ஈபிஆர்எல்எப், ரெலோ, புளொட் ஆகிய கட்சிகளுடன் சேர்ந்து தமிழர்களை ஏமாற்றுகின்ற ஒரு துரோகத்தனமான செயலை செய்து கொண்டு இருக்கின்றார் சி.வி.விக்னேஸ்வரன்.

தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 10 நாடாளுமன்ற உறுப்பினர்களும் விக்கினேஸ்வரும் ஒரே கருத்திலே இந்த ஏமாற்று நாடகங்களை தொடர்ச்சியாக செய்து கொண்டிருக்கின்றார்கள். 

நாடு பொருளாதாரத்தில் வீழ்ந்திருக்கும் போது அந்த நாட்டை கட்டியெழுப்ப வேண்டிய உதவிகளைப் பெறுவதற்கு தமிழ் தரப்பின் ஆதரவையும் பெற்றுக் கொண்டு ரணில் சர்வதேச தரப்புக்களிடம் செல்கின்றார். 

அதற்கு இவர்கள் முழுமையாக ஒத்துழைத்துக் கொண்டு 13 பற்றி பேசிக் கொண்டிருக்கின்றார்கள். இது தமிழர்களின் எதிர்காலத்தை பலியிட்டு எரிக்கின்ற ஒரு செயற்பாடு. 

விக்கினேஸ்வரன் 13 ஆம் ஆண்டிலிருந்து 18 ஆம் ஆண்டு வரை மாகாணசபையில் இருந்த போது தமிழ் மக்களுக்காக எந்நதவொரு நல்ல காரியத்தையும் செய்தது கிடையாது.

அதேவேளை தமிழரசுக் கட்சியின் ஆதரவோடு மைத்திரிபால - ரணில் விக்கிரமசிங்க ஆட்சிக்கு வந்தார்கள். அன்று ரணில் விக்கிரமசிங்கவை வசைபாடுகின்ற நாடகத்தை தான் விக்னேஸ்வரன் ஆடிக்கொண்டிருந்தார். 

அன்று 35 பேர் அவருடைய கட்சியிலே  ஒரு கட்சியை சார்ந்தவர்கள் இருந்தார்கள். அவர் மாகாண சபையில் எந்த முடிவுகளையும் எடுக்கலாம். எந்த சட்டங்களையும் உருவாக்கலாம் என்ற நிலை இருந்தது. ஆனால் அவர் எதனையும் செய்யவில்லை.

அப்படியிருக்கின்ற போது அவர் இன்று அதிகாரப் பரவலாக்கல் குழு என்பதும்  ஆலோசனைக் குழுக்கள் என்பதும் தமிழ் மக்களை ஏமாற்றும் செயல்.

ரணில் விக்கிரமசிங்க எதிர்காலத்தில் ஜனாதிபதியாக வந்தால் தமிழ் மக்களுக்கு நல்லது செய்வார் என்ற மாயத் தோற்றத்தையும், அவரை வல்லமை உள்ள தலைவர், நாட்டை மீட்டெடுக்கக் கூடிய தலைவர் என்று சிங்கள மக்கள் மத்தியிலே நம்பிக்கையை கட்டியெழுப்பி அவரை அடுத்த ஜனாதிபதியாக்கி, தேர்தலில் வெல்ல வைப்பதற்காக இந்த ஏமாற்று நாடகம் அரங்கேற்றப்படுகின்றது.

குறிப்பாக விக்னேஸ்வரனுக்கு மக்கள் வாக்களிக்கப் போவதில்லை. அவர் ஒரு நம்பிக்கைத் துரோகி என்பதை மக்கள் இனங்கண்டிருக்கின்றார்கள்.  

ஐக்கிய தேசியக் கட்சி ஏற்கனவே தமிழ் மக்களாலும் சிங்கள மக்களாலும் அடியோடு நிராகரிக்கப்பட்டிருக்கின்றது. ஆகவே ரணில் கூட வெல்லாத ஒரு நிலைமையில் முழுமையாக தோற்று குப்பைக்குள் வீசப்பட்டிருக்கின்ற ஐக்கிய தேசியக் கட்சியை கட்டியெழுப்ப அரசாங்கச் செலவிலே பிரசாரங்களை முன்னெடுப்பதற்கான ஒரு நாடகம் தான் இந்த அதிகாரப் பரவலாக்கம் குழு, மாகாண ஆலோசனைக் குழு. 

ஆகவே 13 என்ற ஏமாற்று நாடகத்திற்குள் மக்கள் சிக்குப்படகூடாது. 50,000 மாவீரர்கள் இந்த 13 ஆம் திருத்தச் சட்டத்தில் அதிகாரங்கள் இல்லை. இதனை தீர்வுக்கான தொடக்கப் புள்ளியாக ஏற்றுக் கொள்ள முடியாது என்பதற்காக உயிர் கொடுத்திருக்கின்றார்கள்.

இன்று இந்த மண்ணில் சிங்கள மயமாக்கல், பௌத்த மயமாக்கல் இடம்பெற்றுவருகின்றது. தமிழர்களிடம் அதிகாரம் இல்லாதபடியால் தான் இவை நடைபெற்று வருகின்றது.

ஆகவே, தமிழ்த் தேசிய முறைமை அங்கீகரிக்கப்பட்ட சமஸ்டி ஊடாக மட்டுமே எங்களின் தேசத்தின் இருப்பை பாதுகாத்துக் கொள்ள முடியும். ஆகவே தமிழ் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும் என தெரிவித்தார்.

வடக்கில் ஐக்கிய தேசியக் கட்சியை மீளக் கட்டியெழுப்புவதற்கான முகவராக விக்னேஸ்வரன் கஜேந்திரன் எம்.பி பகிரங்க குற்றச்சாட்டு samugammedia வடக்கு மாகாணத்தில் ஐக்கிய தேசியக் கட்சியை மீளக் கட்டியெழுப்புவதற்கான முகவராக தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் முயற்சிக்கின்றார் என செல்வராஜா கஜேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.மாகாண ஆலோசனை குழு மற்றும் அதிகார பரவலாக்கல் குழு ஆகியன ஊடாக தமிழ் மக்களை ஏமாற்றி, ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் அதிபராக்குவதற்கு சி.வி.விக்னேஸ்வரன் மேற்கொள்ளும் ஏமாற்று நாடகம் இது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.நேற்றுமாலை கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில், அதிகாரப் பரவலாக்கல் குழு ஒன்று அமைக்கப்படவுள்ளதாகவும் மாகாண சபை ஆலோசனைக் குழுக்கள் அமைக்கப்படவுள்ளதாகவும் அதில் நாடாளுமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கியதாகவும், அதிலே வெற்றி பெறாத நாடாளுமன்ற உறுப்பினர்கள் அல்லாத கட்சிகள் கூட கலந்து கொள்ள முடியும் என ஜனாதிபதி தெரிவித்திருப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்திருக்கின்றார்.13ஆவது திருத்தச் சட்டம் என்பது 36 ஆண்டுகளாக தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒரு விடயம். அந்த சட்டம் தமிழர்களின் விருப்புக்கு மாறா கொண்டு வந்து நடைமுறையில் உள்ள விடயம்.நடைமுறையில் உள்ள ஒரு சட்டத்தை நடைமுறைப்படுத்தல் உன்ற பெயரிலே தமிழரசுக் கட்சி, ஈபிஆர்எல்எப், ரெலோ, புளொட் ஆகிய கட்சிகளுடன் சேர்ந்து தமிழர்களை ஏமாற்றுகின்ற ஒரு துரோகத்தனமான செயலை செய்து கொண்டு இருக்கின்றார் சி.வி.விக்னேஸ்வரன்.தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 10 நாடாளுமன்ற உறுப்பினர்களும் விக்கினேஸ்வரும் ஒரே கருத்திலே இந்த ஏமாற்று நாடகங்களை தொடர்ச்சியாக செய்து கொண்டிருக்கின்றார்கள். நாடு பொருளாதாரத்தில் வீழ்ந்திருக்கும் போது அந்த நாட்டை கட்டியெழுப்ப வேண்டிய உதவிகளைப் பெறுவதற்கு தமிழ் தரப்பின் ஆதரவையும் பெற்றுக் கொண்டு ரணில் சர்வதேச தரப்புக்களிடம் செல்கின்றார். அதற்கு இவர்கள் முழுமையாக ஒத்துழைத்துக் கொண்டு 13 பற்றி பேசிக் கொண்டிருக்கின்றார்கள். இது தமிழர்களின் எதிர்காலத்தை பலியிட்டு எரிக்கின்ற ஒரு செயற்பாடு. விக்கினேஸ்வரன் 13 ஆம் ஆண்டிலிருந்து 18 ஆம் ஆண்டு வரை மாகாணசபையில் இருந்த போது தமிழ் மக்களுக்காக எந்நதவொரு நல்ல காரியத்தையும் செய்தது கிடையாது.அதேவேளை தமிழரசுக் கட்சியின் ஆதரவோடு மைத்திரிபால - ரணில் விக்கிரமசிங்க ஆட்சிக்கு வந்தார்கள். அன்று ரணில் விக்கிரமசிங்கவை வசைபாடுகின்ற நாடகத்தை தான் விக்னேஸ்வரன் ஆடிக்கொண்டிருந்தார். அன்று 35 பேர் அவருடைய கட்சியிலே  ஒரு கட்சியை சார்ந்தவர்கள் இருந்தார்கள். அவர் மாகாண சபையில் எந்த முடிவுகளையும் எடுக்கலாம். எந்த சட்டங்களையும் உருவாக்கலாம் என்ற நிலை இருந்தது. ஆனால் அவர் எதனையும் செய்யவில்லை.அப்படியிருக்கின்ற போது அவர் இன்று அதிகாரப் பரவலாக்கல் குழு என்பதும்  ஆலோசனைக் குழுக்கள் என்பதும் தமிழ் மக்களை ஏமாற்றும் செயல்.ரணில் விக்கிரமசிங்க எதிர்காலத்தில் ஜனாதிபதியாக வந்தால் தமிழ் மக்களுக்கு நல்லது செய்வார் என்ற மாயத் தோற்றத்தையும், அவரை வல்லமை உள்ள தலைவர், நாட்டை மீட்டெடுக்கக் கூடிய தலைவர் என்று சிங்கள மக்கள் மத்தியிலே நம்பிக்கையை கட்டியெழுப்பி அவரை அடுத்த ஜனாதிபதியாக்கி, தேர்தலில் வெல்ல வைப்பதற்காக இந்த ஏமாற்று நாடகம் அரங்கேற்றப்படுகின்றது.குறிப்பாக விக்னேஸ்வரனுக்கு மக்கள் வாக்களிக்கப் போவதில்லை. அவர் ஒரு நம்பிக்கைத் துரோகி என்பதை மக்கள் இனங்கண்டிருக்கின்றார்கள்.  ஐக்கிய தேசியக் கட்சி ஏற்கனவே தமிழ் மக்களாலும் சிங்கள மக்களாலும் அடியோடு நிராகரிக்கப்பட்டிருக்கின்றது. ஆகவே ரணில் கூட வெல்லாத ஒரு நிலைமையில் முழுமையாக தோற்று குப்பைக்குள் வீசப்பட்டிருக்கின்ற ஐக்கிய தேசியக் கட்சியை கட்டியெழுப்ப அரசாங்கச் செலவிலே பிரசாரங்களை முன்னெடுப்பதற்கான ஒரு நாடகம் தான் இந்த அதிகாரப் பரவலாக்கம் குழு, மாகாண ஆலோசனைக் குழு. ஆகவே 13 என்ற ஏமாற்று நாடகத்திற்குள் மக்கள் சிக்குப்படகூடாது. 50,000 மாவீரர்கள் இந்த 13 ஆம் திருத்தச் சட்டத்தில் அதிகாரங்கள் இல்லை. இதனை தீர்வுக்கான தொடக்கப் புள்ளியாக ஏற்றுக் கொள்ள முடியாது என்பதற்காக உயிர் கொடுத்திருக்கின்றார்கள்.இன்று இந்த மண்ணில் சிங்கள மயமாக்கல், பௌத்த மயமாக்கல் இடம்பெற்றுவருகின்றது. தமிழர்களிடம் அதிகாரம் இல்லாதபடியால் தான் இவை நடைபெற்று வருகின்றது.ஆகவே, தமிழ்த் தேசிய முறைமை அங்கீகரிக்கப்பட்ட சமஸ்டி ஊடாக மட்டுமே எங்களின் தேசத்தின் இருப்பை பாதுகாத்துக் கொள்ள முடியும். ஆகவே தமிழ் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும் என தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement