• Jan 13 2025

ஜனாதிபதிக்கான நிறைவேற்று அதிகார முறைமை இரத்து?

Chithra / Dec 30th 2024, 2:43 pm
image

 

புதிய அரசியலமைப்பினை கொண்டுவருவதற்கான ஆலோசனைகளை நடத்தி வரும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், புதிய அரசியலமைப்பில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இரத்தாக்கி நாடாளுமன்றத்திற்கு கூடுதல் அதிகாரங்களை வழங்கி நிறைவேற்றதிகாரம் கொண்ட பிரதமர் பதவியை முன்னிறுத்த தீர்மானித்துள்ளது.

இதற்கமைய அடுத்த மாகாண சபைத் தேர்தல் நடந்து முடிந்தவுடன் புதிய அரசியலமைப்புக்கான பணிகள் ஆரம்பமாகவுள்ளன.

தற்போதைய ஜனாதிபதியின் பதவிக்காலம் நிறைவடைந்ததன் பின்னர் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய அரசியலமைப்பில் இடைக்கால ஏற்பாடு ஒன்றும் உள்ளடக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

அதன்பின்னர், எதிர்காலத்தில் பெயரளவுக்கு ஜனாதிபதி பதவியை ஏற்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

தற்போதைய அரசியலமைப்பு திருத்தப்பட்டாலும் தற்போதுள்ள விருப்பு வாக்கு முறையே தொடரப்பட வேண்டும் என சிறுபான்மை மக்களை பிரதிநித்துவப்படுத்தும் கட்சிகள் அரசாங்கத்திடம் முன்மொழிந்துள்ளன.

தொகுதி அளவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டால் அது சிறுபான்மை பிரதிநிதித்துவத்திற்கு பலத்த தடையாக அமையும் என சிறுபான்மை கட்சிகள் கருத்து தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும், உயர் நீதிமன்றத்தின் முடிவுக்கமைய, உத்தேச அரசியலமைப்பு வரைவு சர்வஜன வாக்கெடுப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதிக்கான நிறைவேற்று அதிகார முறைமை இரத்து  புதிய அரசியலமைப்பினை கொண்டுவருவதற்கான ஆலோசனைகளை நடத்தி வரும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், புதிய அரசியலமைப்பில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இரத்தாக்கி நாடாளுமன்றத்திற்கு கூடுதல் அதிகாரங்களை வழங்கி நிறைவேற்றதிகாரம் கொண்ட பிரதமர் பதவியை முன்னிறுத்த தீர்மானித்துள்ளது.இதற்கமைய அடுத்த மாகாண சபைத் தேர்தல் நடந்து முடிந்தவுடன் புதிய அரசியலமைப்புக்கான பணிகள் ஆரம்பமாகவுள்ளன.தற்போதைய ஜனாதிபதியின் பதவிக்காலம் நிறைவடைந்ததன் பின்னர் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய அரசியலமைப்பில் இடைக்கால ஏற்பாடு ஒன்றும் உள்ளடக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.அதன்பின்னர், எதிர்காலத்தில் பெயரளவுக்கு ஜனாதிபதி பதவியை ஏற்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.தற்போதைய அரசியலமைப்பு திருத்தப்பட்டாலும் தற்போதுள்ள விருப்பு வாக்கு முறையே தொடரப்பட வேண்டும் என சிறுபான்மை மக்களை பிரதிநித்துவப்படுத்தும் கட்சிகள் அரசாங்கத்திடம் முன்மொழிந்துள்ளன.தொகுதி அளவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டால் அது சிறுபான்மை பிரதிநிதித்துவத்திற்கு பலத்த தடையாக அமையும் என சிறுபான்மை கட்சிகள் கருத்து தெரிவிக்கின்றன.எவ்வாறாயினும், உயர் நீதிமன்றத்தின் முடிவுக்கமைய, உத்தேச அரசியலமைப்பு வரைவு சர்வஜன வாக்கெடுப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement