• Dec 12 2024

ஜனாதிபதியின் பதவிக் காலம் நீடிக்கப்படுமா..? சர்வஜன வாக்கெடுப்பு நடத்துமாறு கோரிக்கை

Chithra / May 28th 2024, 1:24 pm
image

 

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பதவிக் காலத்தை நீடிப்பதற்கு சர்வஜன வாக்கெடுப்பு நடத்துமாறு ஐக்கிய தேசியக் கட்சியினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் பதவிக் காலத்தை இரண்டு ஆண்டுகளுக்கு மேலும் நீடிக்கப்பட வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியினதும் நாடாளுமன்றினதும் பதவிக் காலத்தை இரண்டு ஆண்டுகளுக்கு நீடிப்பதன் மூலம் நாட்டை பாதுகாக்க முடியும் என்பதுடன்  அதுவே சரியான சந்தர்ப்பமாகும்.

அரசாங்கம் சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி மற்றும் ஏனைய கொடையாளர்களுடன் இணக்கப்பாடுகளை ஏற்படுத்திக் கொண்டுள்ளது.

அத்துடன், பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த வேண்டியது அனைத்து விடயங்களையும் விட முக்கியமானது. 

மேலும், ஜனநாயக ரீதியில் ஜனாதிபதியின் பதவிக் காலத்தை நீடிக்கப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். 

ஜனாதிபதியின் பதவிக் காலம் நீடிக்கப்படுமா. சர்வஜன வாக்கெடுப்பு நடத்துமாறு கோரிக்கை  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பதவிக் காலத்தை நீடிப்பதற்கு சர்வஜன வாக்கெடுப்பு நடத்துமாறு ஐக்கிய தேசியக் கட்சியினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.ஜனாதிபதியின் பதவிக் காலத்தை இரண்டு ஆண்டுகளுக்கு மேலும் நீடிக்கப்பட வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.ஜனாதிபதியினதும் நாடாளுமன்றினதும் பதவிக் காலத்தை இரண்டு ஆண்டுகளுக்கு நீடிப்பதன் மூலம் நாட்டை பாதுகாக்க முடியும் என்பதுடன்  அதுவே சரியான சந்தர்ப்பமாகும்.அரசாங்கம் சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி மற்றும் ஏனைய கொடையாளர்களுடன் இணக்கப்பாடுகளை ஏற்படுத்திக் கொண்டுள்ளது.அத்துடன், பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த வேண்டியது அனைத்து விடயங்களையும் விட முக்கியமானது. மேலும், ஜனநாயக ரீதியில் ஜனாதிபதியின் பதவிக் காலத்தை நீடிக்கப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement