• Jul 04 2024

அடுத்த பத்து ஆண்டுக்குள் உலகில் பாதி பேர் குண்டாக இருப்பார்கள்! ஆய்வில் அதிர்ச்சி தகவல் SamugamMedia

Chithra / Mar 7th 2023, 6:30 pm
image

Advertisement

உலக மக்கள் தொகையில் பாதிக்கும் அதிகமான மக்கள் உடல் பருமனால் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என சில தினங்களுக்கு முன் வெளியான ஆய்வில் தெரியவந்துள்ளது.

உலகமயமாக்கலின் மாயையால் உலக மக்கள் அனைவரும் கார்பரேட் நிறுவனங்களின் கைப்பாவை ஆகி விட்டோம்.

ஒரு மனிதனுக்கு என்ன தேவை என்பதை நிர்ணயிப்பது கூட தற்போது கார்ப்ரேட்டின் கை வசம் தான் இருக்கிறது.


சமூக வலைத்தளங்கள் மற்றும் தொலைக்காட்சிகள் மூலம் அவர்களது பொருளை எளிதில் நம்மை மூளைச் சலவை செய்து விற்றுவிடுகிறார்கள்.

இந்த காலத்தில் தன்னுடைய பொருளாதார நிலையைக் கூட மறந்து அதிக செலவு செய்யும் நிலைக்குத் துரித உணவுகள் மனித மூளைகளை ஆட்கொண்டுள்ளன.

குடி, புகை இந்த பழக்கங்களை விட நாம் உண்ணும் துரித உணவு தான் உலகில் அதிகப்படியான நஞ்சை விதைக்கும் ஒன்றாக இருக்கிறதென ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.


அதிகப்படியான உடல் எடை அதிகரிப்பதற்கும் துரித உணவே காரணம். துரித உணவால் வரும் 2035க்குள் உலக மக்கள் தொகையில் பாதிக்கும் மேல் உடல் பருமனாகத் தான் இருப்பார்கள் எனத் தகவல் வெளியாகியுள்ளது. 

உலக உடல் பருமன் அட்லஸ் 2023ன் படி உலக மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் 12 ஆண்டுகளுக்குள் அதிக எடையுடன் இருப்பார்கள்.

இதனால் தனி மனிதனுக்கு உடல் அளவில் மட்டுமில்லாது மனதளவிலும் பாதிப்பு ஏற்படுவதோடு பொருளாதார பாதிப்பும் ஏற்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.


உடல் பருமனால் உண்டாகும் நோயைக் குணப்படுத்த வரும் 2035ம் ஆண்டிற்கும் உலகம் முழுவதும் ஆண்டுக்கு 4.32 டிரில்லியன் டாலர்கள் செலவாகும் எனத் தகவல் கூறுகிறது. உடல் எடை பாதிப்பால் 3% உலக பொருளாதாரம் பாதிக்கப்படும் என்கிறார்கள்.

அதிக மக்கள் தொகை மற்றும் ஏழ்மையான நாடுகள் இதனால் அதிக பாதிப்பைச் சந்திக்கும். இதில் இந்தியா, பாகிஸ்தான், இந்தோனேஷியா மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகள் அடங்கும்.

உடல் பருமன் உள்ளவர்கள் கணக்கெடுப்பில் இந்தியா 99 இடத்தில் உள்ளது. மற்றும் 11% பேருக்கு மட்டுமே உடல் பருமன் அதிகமுள்ளது. இதில் 9.1% குழந்தைகளும் உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த அறிக்கையை வெளியிட்ட உடல் பருமன் கூட்டமைப்பின் தலைவர் லூயில் பார் “உலகம் முழுவதும் உள்ள அரசாங்கங்களும், கொள்கை வகுப்பாளர்களும் இளைய தலைமுறையினருக்கு உடல் பருமன் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டுள்ளார். 

அடுத்த பத்து ஆண்டுக்குள் உலகில் பாதி பேர் குண்டாக இருப்பார்கள் ஆய்வில் அதிர்ச்சி தகவல் SamugamMedia உலக மக்கள் தொகையில் பாதிக்கும் அதிகமான மக்கள் உடல் பருமனால் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என சில தினங்களுக்கு முன் வெளியான ஆய்வில் தெரியவந்துள்ளது.உலகமயமாக்கலின் மாயையால் உலக மக்கள் அனைவரும் கார்பரேட் நிறுவனங்களின் கைப்பாவை ஆகி விட்டோம்.ஒரு மனிதனுக்கு என்ன தேவை என்பதை நிர்ணயிப்பது கூட தற்போது கார்ப்ரேட்டின் கை வசம் தான் இருக்கிறது.சமூக வலைத்தளங்கள் மற்றும் தொலைக்காட்சிகள் மூலம் அவர்களது பொருளை எளிதில் நம்மை மூளைச் சலவை செய்து விற்றுவிடுகிறார்கள்.இந்த காலத்தில் தன்னுடைய பொருளாதார நிலையைக் கூட மறந்து அதிக செலவு செய்யும் நிலைக்குத் துரித உணவுகள் மனித மூளைகளை ஆட்கொண்டுள்ளன.குடி, புகை இந்த பழக்கங்களை விட நாம் உண்ணும் துரித உணவு தான் உலகில் அதிகப்படியான நஞ்சை விதைக்கும் ஒன்றாக இருக்கிறதென ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.அதிகப்படியான உடல் எடை அதிகரிப்பதற்கும் துரித உணவே காரணம். துரித உணவால் வரும் 2035க்குள் உலக மக்கள் தொகையில் பாதிக்கும் மேல் உடல் பருமனாகத் தான் இருப்பார்கள் எனத் தகவல் வெளியாகியுள்ளது. உலக உடல் பருமன் அட்லஸ் 2023ன் படி உலக மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் 12 ஆண்டுகளுக்குள் அதிக எடையுடன் இருப்பார்கள்.இதனால் தனி மனிதனுக்கு உடல் அளவில் மட்டுமில்லாது மனதளவிலும் பாதிப்பு ஏற்படுவதோடு பொருளாதார பாதிப்பும் ஏற்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.உடல் பருமனால் உண்டாகும் நோயைக் குணப்படுத்த வரும் 2035ம் ஆண்டிற்கும் உலகம் முழுவதும் ஆண்டுக்கு 4.32 டிரில்லியன் டாலர்கள் செலவாகும் எனத் தகவல் கூறுகிறது. உடல் எடை பாதிப்பால் 3% உலக பொருளாதாரம் பாதிக்கப்படும் என்கிறார்கள்.அதிக மக்கள் தொகை மற்றும் ஏழ்மையான நாடுகள் இதனால் அதிக பாதிப்பைச் சந்திக்கும். இதில் இந்தியா, பாகிஸ்தான், இந்தோனேஷியா மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகள் அடங்கும்.உடல் பருமன் உள்ளவர்கள் கணக்கெடுப்பில் இந்தியா 99 இடத்தில் உள்ளது. மற்றும் 11% பேருக்கு மட்டுமே உடல் பருமன் அதிகமுள்ளது. இதில் 9.1% குழந்தைகளும் உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்த அறிக்கையை வெளியிட்ட உடல் பருமன் கூட்டமைப்பின் தலைவர் லூயில் பார் “உலகம் முழுவதும் உள்ள அரசாங்கங்களும், கொள்கை வகுப்பாளர்களும் இளைய தலைமுறையினருக்கு உடல் பருமன் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டுள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement