• Jan 22 2025

தீர்வுவிடயத்தில் தேர்தல் வெற்றிகளை பார்க்க முடியாது! சுமந்திரனின் கருத்துக்கு பதிலளித்த செல்வம்!

Chithra / Dec 15th 2024, 1:17 pm
image


தமிழரசுக்கட்சி கூடுதலான ஆசனங்களை பெற்றுவிட்டது என்பதற்காக அவர்கள் எடுக்கின்ற முடிவிற்கு ஏனையவர்கள் ஒத்துவரவேண்டும் என்று சொல்வது முறையற்றசெயல். தேர்தல்வெற்றிகளை வைத்து தீர்வு விடயத்தை பார்க்கமுடியாது. சுமந்திரனுக்கும் இது தெரியும் என்று பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

வவுனியாவில் இன்றையதினம் ஐயப்ப சாமிகள் சபரிமலை யாத்திரைக்காக அவசரகால கடவுச்சீட்டு மற்றும் வீசா, விமான  கட்டணம் தொடர்பான விடயங்கள் தொடர்பாக வன்னி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனிடம் கோரிக்கையினை முன்வைத்து மகஜர் ஒன்றினை கையளித்திருதனர். 

இதன் பின் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

தமிழர்களை பொறுத்தவரை பல பிரச்சனைகள் தீர்க்கப்படாமல் இருக்கிறது. எனவே இனப்பிரச்சனை சார்ந்த விடயத்தில் ஒரு கட்சி எடுக்கும் முடிவிற்கு ஆதரவாக மற்றக்கட்சிகள் செல்வதென்பது சாத்தியமில்லை. 

ஒன்றாக இணைந்து ஒருமேசையில் இருந்து விவாதித்து ஒரு தீர்வுத்திட்டத்தை முன்வைக்கும் போதே அது வலுவானதாகவும் பலமானதாகவும் இருக்கும்.   அதன்மூலமே புதிய அரசியல் சாசனத்தில் எவ்வாறான கோரிக்கையினை முன் வைக்கலாம் என்ற கடமைப்பாட்டை நாம் செய்யமுடியும்.

தமிழரசுக்கட்சி கூடுதலான ஆசனங்களை பெற்றுவிட்டது என்பதற்காக அவர்கள் எடுக்கின்ற முடிவிற்கு ஏனையவர்கள் ஒத்துவரவேண்டும் என்று சொல்வது முறையற்றசெயல். தேர்தல்வெற்றிகளை வைத்து இதனை பார்க்கமுடியாது. 

ஒற்றுமையான தீர்வுதிட்டத்தை முன்வைக்கின்ற போதே எமது மக்களும் அதை விரும்புவார்கள். அந்த பலத்தின் மூலமே அரசாங்கத்தின் பார்வையை எமதுபக்கம் திருப்ப முடியும்.தனித்தனியாக செயற்பட்டால் அதைவைத்து அரசியல் செய்யும் நிலையில் புதிய அரசு ஈடுபடும்.

பிரிந்துசென்றதால் நாம் பல பாடங்களை கற்றிருக்கிறோம். எனவே நாங்கள்செய்வோம் நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்வது சாத்தியற்ற ஒன்றாகவே நான் பார்க்கிறேன். சுமந்திரன் அவர்களுக்கும் இது நன்றாக தெரியும். அவரும் ஒத்துவருவார் என்று நினைக்கிறேன். தமிழரசுக்கட்சியும் ஒத்துவரும் என்று நினைக்கிறேன். என்றார்.

இதேவேளை அரசியல்அமைப்பு உருவாக்கம் தொடர்பில் கடந்தகாலங்களில் தமிழரசுக்கட்சி தீர்க்கமான நிலைப்பாட்டில் இருந்துள்ளது. சில வரைபுகளும் செய்யப்பட்டுள்ளன. எனவே  மற்றவர்கள் எமது நிலைப்பாட்டோடு இணைந்து செயற்பட முன்வந்தால். 

அதில் எந்த ஆட்சேபனையும் இருக்கப்போவதில்லை.  

நாம் தமிழர்களின் பிரதானகட்சி, இந்த தேர்தலில் வடகிழக்கில் சகலமாவட்டங்களில் இருந்தும் ஆசனங்களை பெற்ற ஒரேயொரு கட்சி.என்று எம்.எ. சுமந்திரன் நேற்றயதினம் கருத்து தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


தீர்வுவிடயத்தில் தேர்தல் வெற்றிகளை பார்க்க முடியாது சுமந்திரனின் கருத்துக்கு பதிலளித்த செல்வம் தமிழரசுக்கட்சி கூடுதலான ஆசனங்களை பெற்றுவிட்டது என்பதற்காக அவர்கள் எடுக்கின்ற முடிவிற்கு ஏனையவர்கள் ஒத்துவரவேண்டும் என்று சொல்வது முறையற்றசெயல். தேர்தல்வெற்றிகளை வைத்து தீர்வு விடயத்தை பார்க்கமுடியாது. சுமந்திரனுக்கும் இது தெரியும் என்று பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.வவுனியாவில் இன்றையதினம் ஐயப்ப சாமிகள் சபரிமலை யாத்திரைக்காக அவசரகால கடவுச்சீட்டு மற்றும் வீசா, விமான  கட்டணம் தொடர்பான விடயங்கள் தொடர்பாக வன்னி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனிடம் கோரிக்கையினை முன்வைத்து மகஜர் ஒன்றினை கையளித்திருதனர். இதன் பின் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,தமிழர்களை பொறுத்தவரை பல பிரச்சனைகள் தீர்க்கப்படாமல் இருக்கிறது. எனவே இனப்பிரச்சனை சார்ந்த விடயத்தில் ஒரு கட்சி எடுக்கும் முடிவிற்கு ஆதரவாக மற்றக்கட்சிகள் செல்வதென்பது சாத்தியமில்லை. ஒன்றாக இணைந்து ஒருமேசையில் இருந்து விவாதித்து ஒரு தீர்வுத்திட்டத்தை முன்வைக்கும் போதே அது வலுவானதாகவும் பலமானதாகவும் இருக்கும்.   அதன்மூலமே புதிய அரசியல் சாசனத்தில் எவ்வாறான கோரிக்கையினை முன் வைக்கலாம் என்ற கடமைப்பாட்டை நாம் செய்யமுடியும்.தமிழரசுக்கட்சி கூடுதலான ஆசனங்களை பெற்றுவிட்டது என்பதற்காக அவர்கள் எடுக்கின்ற முடிவிற்கு ஏனையவர்கள் ஒத்துவரவேண்டும் என்று சொல்வது முறையற்றசெயல். தேர்தல்வெற்றிகளை வைத்து இதனை பார்க்கமுடியாது. ஒற்றுமையான தீர்வுதிட்டத்தை முன்வைக்கின்ற போதே எமது மக்களும் அதை விரும்புவார்கள். அந்த பலத்தின் மூலமே அரசாங்கத்தின் பார்வையை எமதுபக்கம் திருப்ப முடியும்.தனித்தனியாக செயற்பட்டால் அதைவைத்து அரசியல் செய்யும் நிலையில் புதிய அரசு ஈடுபடும்.பிரிந்துசென்றதால் நாம் பல பாடங்களை கற்றிருக்கிறோம். எனவே நாங்கள்செய்வோம் நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்வது சாத்தியற்ற ஒன்றாகவே நான் பார்க்கிறேன். சுமந்திரன் அவர்களுக்கும் இது நன்றாக தெரியும். அவரும் ஒத்துவருவார் என்று நினைக்கிறேன். தமிழரசுக்கட்சியும் ஒத்துவரும் என்று நினைக்கிறேன். என்றார்.இதேவேளை அரசியல்அமைப்பு உருவாக்கம் தொடர்பில் கடந்தகாலங்களில் தமிழரசுக்கட்சி தீர்க்கமான நிலைப்பாட்டில் இருந்துள்ளது. சில வரைபுகளும் செய்யப்பட்டுள்ளன. எனவே  மற்றவர்கள் எமது நிலைப்பாட்டோடு இணைந்து செயற்பட முன்வந்தால். அதில் எந்த ஆட்சேபனையும் இருக்கப்போவதில்லை.  நாம் தமிழர்களின் பிரதானகட்சி, இந்த தேர்தலில் வடகிழக்கில் சகலமாவட்டங்களில் இருந்தும் ஆசனங்களை பெற்ற ஒரேயொரு கட்சி.என்று எம்.எ. சுமந்திரன் நேற்றயதினம் கருத்து தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement