• Sep 10 2024

மன்னாரில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளர்கள் பட்டாசு கொளுத்தி சஜித்திற்கு ஆதரவு !

Tamil nila / Aug 14th 2024, 10:26 pm
image

Advertisement

மன்னாரில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளர்கள் இன்று புதன்கிழமை(14) இரவு 8.30 மணியளவில் மன்னார் பஜார் பகுதியில் பட்டாசு கொளுத்தி தமது கட்சி ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு வழங்குவதற்கு தமது ஆதரவை  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி ஜனாதிபதி தேர்தலின் போது  சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு வழங்கவுள்ளதாக கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் சற்று முன்னர் அறிவித்துள்ளார்.


இந்த நிலையில் கட்சியின் தலைமை எடுத்த முடிவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மன்னார் மாவட்டத்தில் உள்ள கட்சியின் ஆதரவாளர்கள் இன்று புதன்கிழமை(14) இரவு 8.30 மணியளவில் மன்னார் பஜார் பகுதியில் பட்டாசு கொளுத்தி தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.



அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உயர்பீடம், அரசியல் அதிகார பீடம் ஆகியன இன்று(14) மாலை கொழும்பில் கூடி ஏகமனதாக தீர்மானம் எடுத்துள்ளது.


மேலும் 'கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக வடக்கு, கிழக்கில் பல இடங்களுக்குச் சென்று மக்களையும் மாவட்ட பிரதிநிதிகளையும் கட்சித் தொண்டர்களையும் ஆதரவாளர்களையும் சந்தித்து மக்களின் கருத்துக்களை கேட்டறிந்தார்.


மக்களின் கருத்துக்களும் உயர் பீடத்தில் முன்வைக்கப்பட்ட பின்னரே சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதென ஏகமனதாக முடிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் கட்சியின் தலைவர் ரிஷாட் பதியுதீன் இன்று புதன்கிழமை(14) இரவு 8 மணி அளவில் கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட ஊடக சந்திப்பின் போது ஜனாதிபதி தேர்தலின் போது சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதாக உத்தியோக பூர்வமாக அறிவித்தார்.

கட்சியின் மன்னார் மாவட்ட ஆதரவாளர்கள்  மன்னார் பஜார் பகுதியில் பட்டாசு கொளுத்தி தமது ஆதரவை வெளிப்படுத்தி உள்ளனர்.




மன்னாரில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளர்கள் பட்டாசு கொளுத்தி சஜித்திற்கு ஆதரவு மன்னாரில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளர்கள் இன்று புதன்கிழமை(14) இரவு 8.30 மணியளவில் மன்னார் பஜார் பகுதியில் பட்டாசு கொளுத்தி தமது கட்சி ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு வழங்குவதற்கு தமது ஆதரவை  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி ஜனாதிபதி தேர்தலின் போது  சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு வழங்கவுள்ளதாக கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் சற்று முன்னர் அறிவித்துள்ளார்.இந்த நிலையில் கட்சியின் தலைமை எடுத்த முடிவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மன்னார் மாவட்டத்தில் உள்ள கட்சியின் ஆதரவாளர்கள் இன்று புதன்கிழமை(14) இரவு 8.30 மணியளவில் மன்னார் பஜார் பகுதியில் பட்டாசு கொளுத்தி தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உயர்பீடம், அரசியல் அதிகார பீடம் ஆகியன இன்று(14) மாலை கொழும்பில் கூடி ஏகமனதாக தீர்மானம் எடுத்துள்ளது.மேலும் 'கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக வடக்கு, கிழக்கில் பல இடங்களுக்குச் சென்று மக்களையும் மாவட்ட பிரதிநிதிகளையும் கட்சித் தொண்டர்களையும் ஆதரவாளர்களையும் சந்தித்து மக்களின் கருத்துக்களை கேட்டறிந்தார்.மக்களின் கருத்துக்களும் உயர் பீடத்தில் முன்வைக்கப்பட்ட பின்னரே சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதென ஏகமனதாக முடிவு செய்யப்பட்டது.இந்த நிலையில் கட்சியின் தலைவர் ரிஷாட் பதியுதீன் இன்று புதன்கிழமை(14) இரவு 8 மணி அளவில் கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட ஊடக சந்திப்பின் போது ஜனாதிபதி தேர்தலின் போது சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதாக உத்தியோக பூர்வமாக அறிவித்தார்.கட்சியின் மன்னார் மாவட்ட ஆதரவாளர்கள்  மன்னார் பஜார் பகுதியில் பட்டாசு கொளுத்தி தமது ஆதரவை வெளிப்படுத்தி உள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement