• May 07 2024

புகையிரத நிலையத்தின் அதிபர் மீது தாக்குதல் - ஒருவர் தலைமறைவு.! samugammedia

Chithra / May 14th 2023, 10:05 am
image

Advertisement

பொலவத்த புகையிரத நிலையத்தின் அதிபர் உள்ளிட்ட 04 பேரை தாக்கிய சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்றிரவு 7 மணியளவில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தாக்குதலுக்கு உள்ளான புகையிரத நிலையத்தின் அதிபர் மற்றும் மூன்று புகையிரத ஊழியர்கள் சிகிச்சைக்காக நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்றிரவு பொலவத்தை புகையிரத நிலையத்தின் உள்ளே அமைந்துள்ள ஆசனங்களில் அமர்ந்து மூன்று பேர் மதுபானம் அருந்த முயற்சித்தாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனை அவதானித்த புகையிரத நிலையத்தின் அதிபர் மற்றும் ஏனைய ஊழியர்கள், இங்கு மது அருந்த முடியாது என கூறியதால், இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.

இதன் பின்னர் சந்தேக நபர்கள் தாக்குதல் நடத்தியதுடன் புகையிரத நிலையத்தையும் சேதப்படுத்தியுள்ளனர்.

இதன் பின்னர் பொலிஸ் அலுவலகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்ததுடன் உடனடியாக நடவடிக்கை எடுத்த வென்னப்புவ காவற்துறையினர், சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் இரண்டு சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.

வென்னப்புவ வாய்க்கலை பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய ஒருவரும், மிரிஸ்ஸந்தொடுவையைச் சேர்ந்த 45 வயதுடைய ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய மற்றைய சந்தேக நபர் தப்பிச் சென்றுள்ளதுடன், அவரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை வென்னப்புவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


புகையிரத நிலையத்தின் அதிபர் மீது தாக்குதல் - ஒருவர் தலைமறைவு. samugammedia பொலவத்த புகையிரத நிலையத்தின் அதிபர் உள்ளிட்ட 04 பேரை தாக்கிய சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.நேற்றிரவு 7 மணியளவில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.தாக்குதலுக்கு உள்ளான புகையிரத நிலையத்தின் அதிபர் மற்றும் மூன்று புகையிரத ஊழியர்கள் சிகிச்சைக்காக நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.நேற்றிரவு பொலவத்தை புகையிரத நிலையத்தின் உள்ளே அமைந்துள்ள ஆசனங்களில் அமர்ந்து மூன்று பேர் மதுபானம் அருந்த முயற்சித்தாக தெரிவிக்கப்படுகின்றது.இதனை அவதானித்த புகையிரத நிலையத்தின் அதிபர் மற்றும் ஏனைய ஊழியர்கள், இங்கு மது அருந்த முடியாது என கூறியதால், இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.இதன் பின்னர் சந்தேக நபர்கள் தாக்குதல் நடத்தியதுடன் புகையிரத நிலையத்தையும் சேதப்படுத்தியுள்ளனர்.இதன் பின்னர் பொலிஸ் அலுவலகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்ததுடன் உடனடியாக நடவடிக்கை எடுத்த வென்னப்புவ காவற்துறையினர், சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் இரண்டு சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.வென்னப்புவ வாய்க்கலை பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய ஒருவரும், மிரிஸ்ஸந்தொடுவையைச் சேர்ந்த 45 வயதுடைய ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.சம்பவத்துடன் தொடர்புடைய மற்றைய சந்தேக நபர் தப்பிச் சென்றுள்ளதுடன், அவரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை வென்னப்புவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement