• Nov 26 2024

இலங்கைக்கு இந்த ஆண்டு ஒரே கொள்கை வட்டி வீதத்தை அமைக்க மத்திய வங்கி திட்டம்!

Chithra / Sep 29th 2024, 12:32 pm
image

 

தற்போது நடைமுறையில் உள்ள இரண்டு கொள்கை வட்டி விகிதங்களுக்கு பதிலாக இந்த ஆண்டு ஒரே கொள்கை வட்டி வீதத்தை அமைக்க மத்திய வங்கி திட்டமிட்டுள்ளது.

இதன்படி, நிலையான வைப்பு வசதி வட்டி விகிதம் மற்றும் நிலையான கடன் வசதி வட்டி விகிதத்தை ஒரே கொள்கை வட்டி விகிதமாக நடைமுறைப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலகின் பிற வங்கி அமைப்புகள் செயல்படும் விதம் தொடர்பாக ஒற்றைக் கொள்கை வட்டி விகித முறை ஆராயப்பட்டு செயல்படுத்தப்பட உள்ளது.

ஒரே கொள்கை வட்டி வீதத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக இலங்கையின் வங்கி அமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாத இறுதிக்குள் இந்த நாட்டில் வெளிநாட்டு கையிருப்பு அளவு ஆறு பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாகவும், அடுத்த சில மாதங்களில் பணவீக்கம் குறைவாகவே இருக்கும் எனவும் மத்திய வங்கி மேலும் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு இந்த ஆண்டு ஒரே கொள்கை வட்டி வீதத்தை அமைக்க மத்திய வங்கி திட்டம்  தற்போது நடைமுறையில் உள்ள இரண்டு கொள்கை வட்டி விகிதங்களுக்கு பதிலாக இந்த ஆண்டு ஒரே கொள்கை வட்டி வீதத்தை அமைக்க மத்திய வங்கி திட்டமிட்டுள்ளது.இதன்படி, நிலையான வைப்பு வசதி வட்டி விகிதம் மற்றும் நிலையான கடன் வசதி வட்டி விகிதத்தை ஒரே கொள்கை வட்டி விகிதமாக நடைமுறைப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலகின் பிற வங்கி அமைப்புகள் செயல்படும் விதம் தொடர்பாக ஒற்றைக் கொள்கை வட்டி விகித முறை ஆராயப்பட்டு செயல்படுத்தப்பட உள்ளது.ஒரே கொள்கை வட்டி வீதத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக இலங்கையின் வங்கி அமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.கடந்த ஆகஸ்ட் மாத இறுதிக்குள் இந்த நாட்டில் வெளிநாட்டு கையிருப்பு அளவு ஆறு பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாகவும், அடுத்த சில மாதங்களில் பணவீக்கம் குறைவாகவே இருக்கும் எனவும் மத்திய வங்கி மேலும் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement