• May 06 2024

மைத்திரியின் மனு தொடர்பான நீதிமன்றத்தின் உத்தரவு! SamugamMedia

Tamil nila / Mar 17th 2023, 1:16 pm
image

Advertisement

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள தனிப்பட்ட முறைப்பாட்டை வலுவிழக்கச் செய்யக் கோரி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை எதிர்வரும் ஜூலை மாதம் 31ஆம் திகதி ஐவரடங்கிய நீதியரசர்கள் குழு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (17) உத்தரவிட்டுள்ளது.


இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, ​​மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் ஏ. மரிக்கார் ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற குழு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.


அதன்படி, ஜூலை 31 மற்றும் ஆகஸ்ட் 9 ஆகிய திகதிகளில் இந்த மனு மீதான விசாரணை நடைபெறும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை என அருட்தந்தை சிறில் காமினி மற்றும் தாக்குதலுக்கு ஆளான ஒருவர் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இந்த தனிப்பட்ட முறைப்பாடை தாக்கல் செய்திருந்தனர்.


முறைப்பாட்டை பரிசீலித்த கோட்டை நீதவான், முறைப்பாட்டில் சந்தேக நபராக குறிப்பிடப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுத்திருந்தார்.


கோட்டை நீதவான் விடுத்த அழைப்பாணை சட்டத்திற்கு முரணானது எனவும், தம்மை நீதிமன்றில் ஆஜராகுமாறு தெரிவித்து விடுக்கப்பட்ட அழைப்பாணை செல்லுபடியாகாது என உத்தரவு பிறப்பிக்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது மனுவில் கோரியிருந்தார்.


மைத்திரியின் மனு தொடர்பான நீதிமன்றத்தின் உத்தரவு SamugamMedia உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள தனிப்பட்ட முறைப்பாட்டை வலுவிழக்கச் செய்யக் கோரி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை எதிர்வரும் ஜூலை மாதம் 31ஆம் திகதி ஐவரடங்கிய நீதியரசர்கள் குழு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (17) உத்தரவிட்டுள்ளது.இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, ​​மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் ஏ. மரிக்கார் ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற குழு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.அதன்படி, ஜூலை 31 மற்றும் ஆகஸ்ட் 9 ஆகிய திகதிகளில் இந்த மனு மீதான விசாரணை நடைபெறும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை என அருட்தந்தை சிறில் காமினி மற்றும் தாக்குதலுக்கு ஆளான ஒருவர் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இந்த தனிப்பட்ட முறைப்பாடை தாக்கல் செய்திருந்தனர்.முறைப்பாட்டை பரிசீலித்த கோட்டை நீதவான், முறைப்பாட்டில் சந்தேக நபராக குறிப்பிடப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுத்திருந்தார்.கோட்டை நீதவான் விடுத்த அழைப்பாணை சட்டத்திற்கு முரணானது எனவும், தம்மை நீதிமன்றில் ஆஜராகுமாறு தெரிவித்து விடுக்கப்பட்ட அழைப்பாணை செல்லுபடியாகாது என உத்தரவு பிறப்பிக்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது மனுவில் கோரியிருந்தார்.

Advertisement

Advertisement

Advertisement