• Jun 16 2024

LPL போட்டி- தம்புள்ளை தண்டர்ஸ் அணியின் உரிமைகள் இடைநிறுத்தம்..!!

Tamil nila / May 22nd 2024, 10:16 pm
image

Advertisement

எதிர்வரும் LPL போட்டியில் பங்குபற்றவிருந்த தம்புள்ளை தண்டர்ஸ் அணியின் உரிமைகள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக லங்கா பிரிமியர் லீக் அறிவித்துள்ளது.

 LPL போட்டியின் வெளிப்படைத்தன்மை மற்றும் தரத்தை பாதுகாக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக LPL ஏற்பாட்டுக் குழுவின் தலைவர் அனில் மோகன் தெரிவித்தார்.

இம்பீரியல் ஸ்போர்ட்ஸ் குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி தமிம் ரஹ்மான் எதிர்கொள்ளும் சட்ட விடயங்களை கருத்திற்கொண்டு மேற்கண்ட தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல். பி. எல். போட்டியில் தம்புள்ளை தண்டர்ஸ் அணியின் உரிமையை வேறு தரப்பினர் பெற்றுக்கொடுக்கப்படவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

புதிய உரிமையின் கீழ் தம்புள்ளை அணி எல்பிஎல் போட்டியில் விளையாடும் வாய்ப்பை பெறும் என தெரிவிக்கப்பட்டது.

2024 லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் ஆட்ட நிர்ணயத்திற்கான யோசனையை முன்வைக்க முயற்சித்த தம்புள்ளை தண்டர்ஸ் அணியின் உரிமையாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான தமீம் ரஹ்மானை எதிர்வரும் மே 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று  உத்தரவிட்டுள்ளது.

LPL போட்டி- தம்புள்ளை தண்டர்ஸ் அணியின் உரிமைகள் இடைநிறுத்தம். எதிர்வரும் LPL போட்டியில் பங்குபற்றவிருந்த தம்புள்ளை தண்டர்ஸ் அணியின் உரிமைகள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக லங்கா பிரிமியர் லீக் அறிவித்துள்ளது. LPL போட்டியின் வெளிப்படைத்தன்மை மற்றும் தரத்தை பாதுகாக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக LPL ஏற்பாட்டுக் குழுவின் தலைவர் அனில் மோகன் தெரிவித்தார்.இம்பீரியல் ஸ்போர்ட்ஸ் குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி தமிம் ரஹ்மான் எதிர்கொள்ளும் சட்ட விடயங்களை கருத்திற்கொண்டு மேற்கண்ட தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.எல். பி. எல். போட்டியில் தம்புள்ளை தண்டர்ஸ் அணியின் உரிமையை வேறு தரப்பினர் பெற்றுக்கொடுக்கப்படவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.புதிய உரிமையின் கீழ் தம்புள்ளை அணி எல்பிஎல் போட்டியில் விளையாடும் வாய்ப்பை பெறும் என தெரிவிக்கப்பட்டது.2024 லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் ஆட்ட நிர்ணயத்திற்கான யோசனையை முன்வைக்க முயற்சித்த தம்புள்ளை தண்டர்ஸ் அணியின் உரிமையாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான தமீம் ரஹ்மானை எதிர்வரும் மே 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று  உத்தரவிட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement