• May 18 2024

இலங்கையில் அவசரநிலையைப் பிரகடனம் செய்யவும்..! மருத்துவர்கள் அவசர கோரிக்கை samugammedia

Chithra / Jul 15th 2023, 12:29 pm
image

Advertisement

சுகாதார நெருக்கடி குறித்து அவசரநிலையைப் பிரகடனம் செய்யுமாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் ருக்சான் பெலான கோரிக்கை விடுத்துள்ளார்.

மருந்துகள் தொடர்பிலான பாதிப்புகளால் அதிகளவானவர்கள் உயிரிழப்பதன் காரணமாகவே அரசாங்கம் இந்த அவசர நிலையை அறிவிக்கவேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது, 

இந்தியாவின் கடனுதவியுடன் இறக்குமதி செய்யப்பட்ட மருந்துகள் தொடர்பில் சந்தேகம் காணப்படுகின்றது. இந்த விவகாரத்தை எவ்வாறு கையாளவேண்டும் என அமைச்சரவை ஆராயவேண்டும்.

சுகாதாரத்துறையைச் சேர்ந்த ஏனைய அமைப்புகளுடன் இணைந்து இந்தியத் தூதரகத்தின் ஊடாக இந்தியாவிற்குக் கடிதமொன்றை அனுப்ப எண்ணியுள்ளோம்.

பொதுமக்கள் பணத்தில் மீளச் செலுத்தப்படவேண்டிய கடனை வீணடித்துள்ளமை குற்றமாகும்.

உள்நாட்டுப்போர்க் காலத்தில் விடுதலைப்புலிகளின் தாக்குதலால் நிலவிய சூழல் போன்ற சுகாதார சூழல் தற்போது காணப்படுகின்றது. இது ஒரு அவசரநிலை. 

நாடு முழுவதும் புதைக்கப்பட்டுள்ள குண்டுகள் எந்நேரமும் வெடிக்கலாம் என்பது போன்ற நிலை தற்போது காணப்படுகின்றது.

எனவே சுகாதார நெருக்கடி குறித்து அரசாங்கம் அவசரநிலையைப் பிரகடனப்படுத்தவேண்டும்.

இந்த விடயத்தை அரசாங்கம் மிகவும் சாதாரணமாகக் கருதுகின்றது எனவும் குற்றம்சாட்டியுள்ளார். 

இலங்கையில் அவசரநிலையைப் பிரகடனம் செய்யவும். மருத்துவர்கள் அவசர கோரிக்கை samugammedia சுகாதார நெருக்கடி குறித்து அவசரநிலையைப் பிரகடனம் செய்யுமாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் ருக்சான் பெலான கோரிக்கை விடுத்துள்ளார்.மருந்துகள் தொடர்பிலான பாதிப்புகளால் அதிகளவானவர்கள் உயிரிழப்பதன் காரணமாகவே அரசாங்கம் இந்த அவசர நிலையை அறிவிக்கவேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.இது தொடர்பில் மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது, இந்தியாவின் கடனுதவியுடன் இறக்குமதி செய்யப்பட்ட மருந்துகள் தொடர்பில் சந்தேகம் காணப்படுகின்றது. இந்த விவகாரத்தை எவ்வாறு கையாளவேண்டும் என அமைச்சரவை ஆராயவேண்டும்.சுகாதாரத்துறையைச் சேர்ந்த ஏனைய அமைப்புகளுடன் இணைந்து இந்தியத் தூதரகத்தின் ஊடாக இந்தியாவிற்குக் கடிதமொன்றை அனுப்ப எண்ணியுள்ளோம்.பொதுமக்கள் பணத்தில் மீளச் செலுத்தப்படவேண்டிய கடனை வீணடித்துள்ளமை குற்றமாகும்.உள்நாட்டுப்போர்க் காலத்தில் விடுதலைப்புலிகளின் தாக்குதலால் நிலவிய சூழல் போன்ற சுகாதார சூழல் தற்போது காணப்படுகின்றது. இது ஒரு அவசரநிலை. நாடு முழுவதும் புதைக்கப்பட்டுள்ள குண்டுகள் எந்நேரமும் வெடிக்கலாம் என்பது போன்ற நிலை தற்போது காணப்படுகின்றது.எனவே சுகாதார நெருக்கடி குறித்து அரசாங்கம் அவசரநிலையைப் பிரகடனப்படுத்தவேண்டும்.இந்த விடயத்தை அரசாங்கம் மிகவும் சாதாரணமாகக் கருதுகின்றது எனவும் குற்றம்சாட்டியுள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement