• May 06 2024

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்! - உயிரிழந்த உறவுகளுக்கு யாழ்ப்பாணத்தில் அஞ்சலி..!

Chithra / Apr 21st 2024, 9:31 am
image

Advertisement

 

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கான 05 ஆம் ஆண்டு நினைவேந்தல் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள சில தேவாலயங்களில் நினைவுகூரப்பட்டது.

வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் மரியன்னை தேவாலயத்திலும்  உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கான நினைவேந்தல் இன்று நடைபெற்றன.

ஏப்ரல் 21 அன்று தேவராதனையின் போது தமது தியாகங்களை இன் உயிராக்கியவர்களுக்கு ஒரு நிமிட அகவணக்கம் செய்யப்பட்டது.

தேவாலய பிரதான மணியும் ஒலிக்கப்பட்டு கூட்டுத்திருப்பலியும் ஒப்புக்கொடுக்கப்பட்டது.

இதனை யாழ்ப்பாண மறைமாவட்ட பங்கு குரு முதல்வர் ஜெயரட்ணம் அடிகளார் ஒப்புக் கொடுத்தார்.

இதில் கிறிஸ்தவர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


 


உயிர்த்த ஞாயிறு தாக்குதல் - உயிரிழந்த உறவுகளுக்கு யாழ்ப்பாணத்தில் அஞ்சலி.  உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கான 05 ஆம் ஆண்டு நினைவேந்தல் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள சில தேவாலயங்களில் நினைவுகூரப்பட்டது.வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் மரியன்னை தேவாலயத்திலும்  உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கான நினைவேந்தல் இன்று நடைபெற்றன.ஏப்ரல் 21 அன்று தேவராதனையின் போது தமது தியாகங்களை இன் உயிராக்கியவர்களுக்கு ஒரு நிமிட அகவணக்கம் செய்யப்பட்டது.தேவாலய பிரதான மணியும் ஒலிக்கப்பட்டு கூட்டுத்திருப்பலியும் ஒப்புக்கொடுக்கப்பட்டது.இதனை யாழ்ப்பாண மறைமாவட்ட பங்கு குரு முதல்வர் ஜெயரட்ணம் அடிகளார் ஒப்புக் கொடுத்தார்.இதில் கிறிஸ்தவர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர். 

Advertisement

Advertisement

Advertisement