• Nov 26 2024

ஜனவரி நடுப்பகுதியில் மீண்டும் மின் கட்டணத்தில் மாற்றம்..! அமைச்சர் காஞ்சன அறிவிப்பு

Chithra / Dec 13th 2023, 9:25 am
image



கணிப்பில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக அடுத்த வருடம் ஜனவரி மாதம் மீண்டும் மின் கட்டணங்கள் திருத்தப்படும் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

நீர்மின்சாரத்தில் இருந்து தற்போது மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதால் மக்களுக்கு இந்த நிவாரணத்தை வழங்க முடிந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

கடந்த ஆண்டுகளில்,  இதுபோன்ற மழை எமக்கு கிடைக்கவில்லை, ஆனால் இப்போது ஒவ்வொரு நாளும் மழையின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இதனால் அதிகளவில் நீர் மின்சாரத்தை பயன்படுத்தக்கூடுய வாய்ப்பு கிடைத்துள்ளது. தற்போதுள்ள நிலக்கரி ஆலைகள் அல்லது டீசல் ஆலைகளை நிறுத்தி வைக்க முடிந்திருப்பது ஒரு நன்மையாகும்.

அடுத்த கட்டண திருத்தம் ஏப்ரல் மாதம்தான் முன்மொழியப்பட்டிருந்தது. ஆனால் இந்த கணிப்புகள் மாறிவிட்டதால், இதன் நன்மையை நுகர்வோருக்கு வழங்க தீர்மானித்துள்ளோம். 

அதன்படி, ஜனவரி நடுப்பகுதியில் மீண்டும்  கட்டணத் திருத்தத்தை மேற்கொள்ள எதிர்ப்பார்த்துள்ளோம். தற்போதைய நிலைமைக்கு அமைய கட்டணம் குறைய வாய்ப்புள்ளது. என அவர் தெரிவித்தார்.

ஜனவரி நடுப்பகுதியில் மீண்டும் மின் கட்டணத்தில் மாற்றம். அமைச்சர் காஞ்சன அறிவிப்பு கணிப்பில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக அடுத்த வருடம் ஜனவரி மாதம் மீண்டும் மின் கட்டணங்கள் திருத்தப்படும் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.நீர்மின்சாரத்தில் இருந்து தற்போது மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதால் மக்களுக்கு இந்த நிவாரணத்தை வழங்க முடிந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.கடந்த ஆண்டுகளில்,  இதுபோன்ற மழை எமக்கு கிடைக்கவில்லை, ஆனால் இப்போது ஒவ்வொரு நாளும் மழையின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.இதனால் அதிகளவில் நீர் மின்சாரத்தை பயன்படுத்தக்கூடுய வாய்ப்பு கிடைத்துள்ளது. தற்போதுள்ள நிலக்கரி ஆலைகள் அல்லது டீசல் ஆலைகளை நிறுத்தி வைக்க முடிந்திருப்பது ஒரு நன்மையாகும்.அடுத்த கட்டண திருத்தம் ஏப்ரல் மாதம்தான் முன்மொழியப்பட்டிருந்தது. ஆனால் இந்த கணிப்புகள் மாறிவிட்டதால், இதன் நன்மையை நுகர்வோருக்கு வழங்க தீர்மானித்துள்ளோம். அதன்படி, ஜனவரி நடுப்பகுதியில் மீண்டும்  கட்டணத் திருத்தத்தை மேற்கொள்ள எதிர்ப்பார்த்துள்ளோம். தற்போதைய நிலைமைக்கு அமைய கட்டணம் குறைய வாய்ப்புள்ளது. என அவர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement