• Nov 24 2024

பூநகரியில் சூரியகல மின்னுற்பத்தி திட்டம் தொடர்பில் பிரதேச மக்களுக்கு விளக்கமளிப்பு...!samugammedia

Sharmi / Dec 20th 2023, 1:42 pm
image

பூநகரி குளப் புனரமைப்பு மற்றும் சூரியகல மின்னுற்பத்தி திட்டம் தொடர்பாக பிரதேச மக்களுக்கு விளக்கமளிக்கும் கலந்துரையாடல் நேற்றையதினம்(20) பூநகரி பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடல், பூநகரி பிரதேச செயலாளர் ரி.அகிலன் தலைமையில்  நடைபெற்றது.

குறித்த திட்டத்தை நடைமுறைப்படுத்தும் Sunpower Lanka நிறுவனத்தின் பணிப்பாளர் ஜெயரஞ்சன், திட்டத்தின் சமூக பொருளாதார பாதிப்புகள் தொடர்பாக ஆராயும் நிபுணர் யாழ் பல்கலைக்கழக சமூகவியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஜீவசுதன், கிளிநொச்சி மாவட்ட பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர் கருணாநிதி, பூநகரி பிரதேச பிரதி திட்டமிடல் பணிப்பாளர் அருட்செல்வன், மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவின் மாகாண நிர்வாக இணைப்பாளர் றுஷாங்கன் ஆகியோர் கலந்து கொண்டு திட்டம் பற்றிய விளக்கங்களை வழங்கினர்.

மேலும், பூநகரி குளப் பகுதியின் அருகாமையிலுள்ள நல்லூர், கொல்லகுறிச்சி, பள்ளிக்குடா, ஆலங்கேணி, மட்டுவில்நாடு கிழக்கு கிராமசேவையாளர் பிரிவுகளின் கிராமசேவையாளர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கமக்கார அமைப்பு, கிராம அபிவிருத்திக் குழு, மகளிர் கிராம அபிவிருத்திக் குழு, விளையாட்டுக் கழகங்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தமது கருத்துக்களைத் தெரிவித்ததுடன், தமது சந்தேகங்களையும் கேட்டுத் தெளிவுபடுத்திக் கொண்டனர்.



பூநகரியில் சூரியகல மின்னுற்பத்தி திட்டம் தொடர்பில் பிரதேச மக்களுக்கு விளக்கமளிப்பு.samugammedia பூநகரி குளப் புனரமைப்பு மற்றும் சூரியகல மின்னுற்பத்தி திட்டம் தொடர்பாக பிரதேச மக்களுக்கு விளக்கமளிக்கும் கலந்துரையாடல் நேற்றையதினம்(20) பூநகரி பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.குறித்த கலந்துரையாடல், பூநகரி பிரதேச செயலாளர் ரி.அகிலன் தலைமையில்  நடைபெற்றது.குறித்த திட்டத்தை நடைமுறைப்படுத்தும் Sunpower Lanka நிறுவனத்தின் பணிப்பாளர் ஜெயரஞ்சன், திட்டத்தின் சமூக பொருளாதார பாதிப்புகள் தொடர்பாக ஆராயும் நிபுணர் யாழ் பல்கலைக்கழக சமூகவியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஜீவசுதன், கிளிநொச்சி மாவட்ட பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர் கருணாநிதி, பூநகரி பிரதேச பிரதி திட்டமிடல் பணிப்பாளர் அருட்செல்வன், மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவின் மாகாண நிர்வாக இணைப்பாளர் றுஷாங்கன் ஆகியோர் கலந்து கொண்டு திட்டம் பற்றிய விளக்கங்களை வழங்கினர்.மேலும், பூநகரி குளப் பகுதியின் அருகாமையிலுள்ள நல்லூர், கொல்லகுறிச்சி, பள்ளிக்குடா, ஆலங்கேணி, மட்டுவில்நாடு கிழக்கு கிராமசேவையாளர் பிரிவுகளின் கிராமசேவையாளர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கமக்கார அமைப்பு, கிராம அபிவிருத்திக் குழு, மகளிர் கிராம அபிவிருத்திக் குழு, விளையாட்டுக் கழகங்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தமது கருத்துக்களைத் தெரிவித்ததுடன், தமது சந்தேகங்களையும் கேட்டுத் தெளிவுபடுத்திக் கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement